என் சுய சரிதை 59-0419A 1. நாம் சற்று நேரம் ஜெபத்திற்காக தலைகளை வணங்குவோமாக. எங்கள் கிருபையுள்ள பரலோகப் பிதாவே, இது எங்களுடைய தேவனும் இரட்சகருமான உம்மை உண்மையிலேயே நாங்கள் சிலாக்கியங்களோடு அணுகுவதாக இருக்கிறது. நீர் எவ்வளவு மகத்தானவர் என்ற அந்த அதிசயமான பாடலை கேட்கையில் அது எங்களை சிலிர்ப்பூட்டுகிறது. ஏனென்றால் நீர் மகத்தானவர் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். இந்த பிற்பகலில் நாங்கள் பேசுகையில் உம்முடைய மகத்தான தன்மையை எங்களுக்கு புதியதாய் வெளிப்படச் செய்யும்படியாய் நாங்கள் ஜெபிக்கிறோம். என்னுடைய கடந்த கால வாழ்க்கைக்குள்ளாக செல்ல முயற்சிப்பது, அநேக வருடங்களில் முதல்முறையாக இது என்மேல் இப்பொழுது விழுந்திருக்கிறது. நீர் எனக்கு பெலத்தையும், கர்த்தாவே, இந்த வேளையில் எனக்கு என்ன தேவையோ, அதை நீர் கொடுக்கும் படியாகவும் நான் ஜெபிக்கிறேன். ஜீவியத்தில் உள்ள என்னுடைய எல்லா தவறுகளும் மற்றவர்களும் ஒரு படிக்கல்லாய் மாத்திரமே அமைந்து, அது அவர்களை உம்மண்டை நெருங்கிவரும்படி செய்வதாக. இதை அருளும் கர்த்தாவே. கால மணல்களின் மேலுள்ள அடிச்சுவடுகளை பாவிகள் கண்டு, அவர்கள் உம்மண்டை நடத்தப்படுவார்களாக. இந்த காரியங்களை நாங்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். நீங்கள் அமரலாம் 2 [சகோதரன் குளோவர், “நீங்கள் செய்தி கொடுக்கத் துவங்கும் முன்பு இந்த கைக்குட்டைகளுக்காக ஜெபிக்க முடியுமா?” என்று கேட்கிறார்.—ஆசி.] நான் அதற்காக சந்தோஷப்படுவேன். [“அவைகளும், இவைகளும் ஜெபிக்கப்படுவதற்காகவே உள்ளன.”] சரி, ஐயா, உமக்கு நன்றி. இந்த பரிசுத்த மனிதனாகிய சகோதரன் குளோவரை சில வருடங்களாகவே நான் அறிந்திருக்கிறேன். கடந்த மாலை சிறிது நேரம் அவரோடு இருந்தது ஒரு சிலாக்கியமாக இருந்தது. அவர் இளைப்பாறுதலாக சிறிது காலம் படுக்கையாய் இருந்ததாக…என்னிடம் கூறினார். இப்பொழுது எழுபத்தைந்து வயதில் அவர் கர்த்தருடைய சேவைக்குள்ளாக திரும்பி வந்து கொண்டிருக்கிறார். நான் அதை கேட்பதற்கு முன்னர் இருந்த களைப்பில் இப்பொழுது எனக்கு பாதி அளவுகூட இல்லை. நான் களைப்பாய் இருந்தேன் என்று நான் கருதினேன். ஆனால் அது நான்தானா என்பதையே என்னால் நம்பமுடியவில்லை. அவர் இங்கே எனக்கு சில கைக்குட்டைகளை படிவ உறைகளில் வைத்திருந்தார். அவைகள் உள்ளே வைத்து, ஏற்கனவே மூடப்பட்டிருக்கின்றன. 3 இப்பொழுது, வானொலியிலோ அல்லது இங்கேயோ இதை கேட்டுக்கொண்டிருக்கிற யாருக்காகிலும் இந்த கைக்குட்டைகளில் ஒன்று வேண்டுமென்றால் உங்களுக்கு கிடைக்கும்…இவை ஏஞ்சலஸ் (Angelus) ஆலயத்தில் உள்ளன, எல்லா நேரங்களிலும், அடிக்கடி அவைகளை வெளியே அனுப்புகிறார்கள். நீங்களே இங்கு நேரடியாக ஏஞ்சலஸ் ஆலயத்திற்கு எழுதலாம். அவர்கள் அதன் பேரில் ஜெபிப்பார்கள், ஏனென்றால் அது வேதப்பிரகாரமானது என்ற நிச்சயத்தை நான் உங்களுக்கு அளிக்கிறேன். அது தேவனுடைய ஒரு வாக்குத்தத்தமாய் இருக்கிறது. 4 நான் உங்களுக்காக ஜெபித்த கைக்குட்டைகளில் ஒன்றை அனுப்ப வேண்டுமென்று நீங்கள் ஒருவேளை விரும்பினால், ஏன்? அதை செய்வதற்கு நான் சந்தோஷப்படுகிறேன். நீங்கள் வெறுமனே எனக்கு தபால் பெட்டி எண் 3—2—5, 325, ஜெபர்சன்வில், இந்தியானாவுக்கு எழுதுங்கள், அல்லது உங்களுக்கு தபால் பெட்டி எண் நினைவிற்கு வரவில்லையென்றால் வெறுமனே ஜெபர்சன்வில் என்று எழுதுங்கள். அது ஏறக்குறைய முப்பத்தைந்தாயிரம் மக்கள் தொகையைக் கொண்ட ஒரு சிறிய பட்டணமாகும். அங்கே உள்ள ஒவ்வொருவருக்கும் என்னைத் தெரியும். எனவே ஒரு கைக்குட்டையை ஜெபித்து உங்களுக்கு அனுப்ப நாங்கள் சந்தோஷப்படுவோம். 5 இப்பொழுது இதை செய்கிறதில் நமக்கு பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. ஏனென்றால்…அதனோடு கூட ஒருவிதமான கடித படிவமும் உங்களுக்கு கிடைக்கும். அதாவது உலகத்தைச் சுற்றிலுமுள்ள ஜனங்கள் ஒவ்வொரு காலையிலும் ஒன்பது மணிக்கும், பகல் பன்னிரெண்டு மணிக்கும், மாலை மூன்று மணிக்கும் ஜெபிப்பார்கள். உலகத்தைச் சுற்றிலுமுள்ளவர்கள் இந்த ஜெபத்தை செய்ய இரவில் எந்த மணி நேரத்தில் அவர்கள் எழும்ப வேண்டுமென்பதை நீங்கள் சற்று யூகித்துப் பாருங்கள். எனவே உங்களுடைய சுகவீனங்களுக்காகவும், இந்த ஊழியத்திற்காகவும் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர், பத்தாயிரக்கணக்கானோர் ஜெபங்களை தேவனுக்கு ஏறெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தேவனால் அதை புறக்கணிக்க முடியாது. எனவே இப்பொழுது எங்களுக்கு, நாங்கள் கூறுவதென்னவெனில், எங்களுக்கு ஏதும் நிகழ்ச்சிகள் கிடையாது. எங்களுக்கு ஒரு சல்லிக்காசும் தேவையில்லை. நாங்கள் வெறுமெனே…எங்களால் உங்களுக்கு உதவி செய்யக்கூடுமானால் அதை செய்யவே, அதற்காகவே நாங்கள் இங்கே இருக்கிறோம். யாரோ ஒருவர் அங்கே இன்னொரு கட்டு கைக்குட்டைகளை கொண்டு வந்து கொண்டிருக்கிறார். 6 இப்பொழுது, நீங்கள் வேண்டுமென்று விரும்பியபடி உங்களிடத்தில் ஒரு கைக்குட்டை இல்லையென்றால், அப்பொழுது நீங்கள் எங்களுக்கு எழுதுங்கள். எப்படியோ தற்பொழுது உங்களுக்கு அது தேவையில்லையென்றால், அதை வேதாகமத்தில் அப்போஸ்தல நடபடிகளின் புத்தகம் 19-ம் அதிகாரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அது ஒரு வெள்ளை நிற நாடா வடிவத்தில் இருக்கும். அதில் முதலாவதாக எப்படி உங்கள் பாவங்களை அறிக்கை செய்ய வேண்டும் என்ற தகவல்களும் அதனுடன் உங்களுக்கு அனுப்பப்படும். (உங்களுக்கு நன்றி) எப்படி உங்கள் பாவங்களை அறிக்கை செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் முதலாவதாக உங்களை தேவனோடு சரிப்படுத்திக்கொள்ளாமல், தேவனிடத்திலிருந்து எதையும் பெற்றுக்கொள்ள ஒருபோதும் முயற்சி செய்யாதீர்கள். புரிகின்றதா? அதன்பின்னர் உங்களுடைய மேய்ப்பனையும், உங்களுடைய அண்டை வீட்டாரையும் உள்ளே அழைத்து வர இதிலே நீங்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறீர்கள். யாருக்கு விரோதமாகவாவது ஏதாவது உங்களுக்கு இருப்பின், அவ்வாறு உங்களுடைய இருதயத்தில் இருந்தால் போய் அதை முதலில் சரிப்படுத்திக் கொண்டு திரும்பி வாருங்கள். அதன் பின்னர் ஜெபியுங்கள். உங்கள் வீட்டில் ஒரு ஜெப கூட்டம் வையுங்கள். இந்த கைக்குட்டையை உங்களுடைய உள் ஆடையில் குத்தி வைத்து, பின்னர் தேவனை விசுவாசியுங்கள். அந்த மூன்று மணி நேரங்களில் ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதிலும் ஜனங்கள் ஜெபித்துக்கொண்டிருப்பார்கள். அது உலகத்தைச் சுற்றிலும் உள்ள ஒரு சங்கிலி ஜெபமாக இருக்கும். 7 இப்பொழுது அது உங்களைப் பொறுத்தது, முற்றிலுமாக இலவசம். வெறுமனே எழுதி அனுப்புங்கள். நாங்கள் உங்களுக்கு தொல்லை கொடுக்கும்படி எதையாகிலும் அனுப்பிக் கொண்டிருக்கமாட்டோம் அல்லது எங்களுக்கு இருக்கும் பல நிகழ்ச்சிகளை உங்களுக்கு எழுதிக் கொண்டிருக்க மாட்டோம். நீங்கள் நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு காட்ட நாங்கள் விரும்புகிறோம். ஆனால் நீங்கள் வேறு எந்த விதத்திலும் ஆதரவளிக்க நாங்கள் விரும்பவில்லை. புரிகின்றதா? எனவே நீங்கள்…உங்களுடைய விலாசத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல. அது வெறுமனே ஒரு உதவும் மனப்பான்மையையாயும், நாங்கள் தொடர்ந்து செய்ய முயற்சிக்கின்ற கர்த்தருடைய ஒரு ஊழியமாய் இருக்கிறது. 8 இப்பொழுது நம்முடைய தலைகளை நாம் வணங்குவோமாக. நீங்கள் வானொலியில் கேட்டுக் கொண்டிருக்கிறவர்களாய் இருந்தால் உங்களுடைய கைக்குட்டை அங்கே இருக்கிறதென்றால் உங்களுடைய கரத்தை நாங்கள் ஜெபிக்கையில் அதின்மேல் வையுங்கள். 9 கிருபையுள்ள கர்த்தாவே, இந்த சிறிய பொட்டலங்களை நாங்கள் உம்மிடத்தில் கொண்டு வருகிறோம். அவைகளில் சில, ஒருவேளை குழந்தைகளுடைய மேல் சட்டையாயிருக்கலாம் அல்லது சில சிறிய உள் சட்டையாக அல்லது ஒருசில ஜோடி காலுறைகளாக அல்லது ஏதோ காரியமாய் இருக்கலாம். ஒரு கைக்குட்டையானது வியாதியுள்ளவர்களுக்கோ, பாதிக்கப்பட்டவர்களுக்கோ போகலாம். கர்த்தாவே, நாங்கள் இதை செய்கிறது உம்முடைய வார்த்தையின் படியாய் இருக்கிறது. ஏனென்றால் அப்போஸ்தல நடபடிகளின் புத்தகத்திலே உம்முடைய ஊழியக்காரனாகிய பவுலின் சரீரத்தின் மேலிருந்த உருமால்களையும், கச்சைகளையும் கொண்டு போனார்கள் என்று வாசிக்கிறோம். ஏனென்றால் உம்முடைய ஆவியானது அந்த மனிதனின் மேல் இருந்தது என்று அவர்கள் விசுவாசித்தார்கள். அசுத்த ஆவிகள் அவர்களை விட்டோடின. பாதிப்புகளும், வியாதிகளும் அவர்களை விட்டு போயிற்று. ஏனென்றால் அவர்கள் விசுவாசித்தார்கள். இப்பொழுதும் கர்த்தாவே, நாங்கள் பரிசுத்த பவுல் அல்ல என்பதை உணருகிறோம். ஆனால் இன்னமும் நீர் இயேசுவாய் இருக்கிறீர் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். இந்த ஜனங்களின் விசுவாசத்தை நீர் கனம்பண்ண வேண்டும் என்றே நாங்கள் ஜெபிக்கிறோம். 10 ஒரு சமயம் இவ்வாறு கூறப்பட்டது. இஸ்ரவேல் தேவனுக்கு கீழ்ப்படிய முயற்சித்துக் கொண்டிருந்தபோது, ஒரு கண்ணிக்குள்ளாக சிக்கிக் கொண்டனர். அவர்களுக்கு முன்பாக சமுத்திரமானது, இரண்டு பக்கங்களிலும் மலைகள் போல பார்வோனின் சேனையானது அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஒருவர் இந்த வண்ணமாய், “தேவன் கோப கண்களோடு அக்கினி ஸ்தம்பத்தினூடாக கீழே நோக்கிப் பார்த்தார். அப்பொழுது சமுத்திரமானது பயந்துபோய் தானாகவே பின்னோக்கி சுருட்டிக் கொண்டு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு இஸ்ரவேலர் கடந்து போகும்படியாக வழியை உண்டாக்கினது” என்றார். 11 ஓ, கர்த்தாவே, இந்த பொட்டலங்கள் வியாதியான சரீரங்களில் உம்முடைய ஜீவிக்கின்ற வார்த்தைகளின் நினைவுகூருதலாய் வைக்கப்படும்போது மீண்டுமாய் கீழாக நோக்கிப்பாரும். சத்துருதானே பயந்துபோய் அசைந்து வெளியே போவானாக. இந்த ஜனங்கள் தாமே வாக்குத்தத்தத்திற்குள்ளாக அசைந்து செல்வார்களாக. அதாவது எல்லா காரியங்களுக்கும் மேலாக நாங்கள் ஆரோக்கியத்திலே விருத்தியாகி வருவதே உம்முடைய வாஞ்சையாயிருக்கிறது. இதை அருளும் பிதாவே. ஏனென்றால் எங்கள் இருதயத்தில் அந்த மனப்பாங்கோடே நாங்கள் இதை அனுப்புகிறோம். அதுவே எங்களுடைய நோக்கமாயிருக்கிறது. நாங்கள் இதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அனுப்புகிறோம். ஆமென். சகோ.குளோவர் உமக்கு நன்றி. உமக்கு நன்றி ஐயா. 12 இப்பொழுது இது எழுப்புதலின் முடிவான பகுதியாய் இன்றிரவு இருப்பதால், இது ஒலிபரப்பப்படுகிறதா அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் வானொலியில் கேட்பவர்கள் (இல்லையென்றாலும்) நான் இதை கூற விரும்புகிறேன். அதாவது அனேகமனேக ஆண்டுகளில் எனக்கு இருந்த மிகவும் அருமையான கூட்டங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. இது திடமான, உறுதியான, மிகவும் அன்பான, ஒத்துழைப்பான ஒரு கூட்டமாய் நீண்ட காலத்திற்குப் பிறகு உள்ளது. 13 [ஒரு சகோதரன், “நாங்கள் நான்கு மணி பதினைந்து நிமிடம் வரைக்குமே கேட்டுக்கொண்டிருப்போம். தெற்கத்திய கலிபோர்னியாவிலும், தீவுகளில் உள்ளவர்களும் கப்பல்களில் இருப்பவர்களும் நீங்கள் கூறுவதை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அவர்களிடமிருந்து செய்தியை பெற்றுக் கொள்கிறோம். எனவே நீர் பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொண்ட பெரிய கூட்டத்தை உடையவராயிருக்கிறீர்” என்கிறார்.—ஆசி.] உமக்கு நன்றி ஐயா. இது மிகவும் நன்றாயுள்ளது. இதை கேட்க சந்தோஷப்படுகிறேன். உங்களெல்லோரையும் தேவன் ஆசீர்வதிப்பாராக. 14 எப்பொழுதுமே என்னுடைய இருதயத்தில் நிச்சயமாகவே ஏஞ்சலஸ் ஆலயத்திற்கென்ற ஒரு எழுச்சிமிக்க இடத்தைக் கொண்டவனாய் இருந்து வருகிறேன். ஏனென்றால் அது இயேசு கிறிஸ்துவின் முழு சுவிசேஷத்திற்காக நிற்கிறது. இப்பொழுது எனக்கு அது மிகவும் சொந்தமானது போன்று காணப்படுகிறது. ஒவ்வொருவரையும் சந்தித்து அவர்களுடைய அருமையான ஆவியை கண்ட பின்னரே அதைப்போன்று இருக்கிறது. முன்பு வழக்கமாய் இருந்ததைக் காட்டிலும் இப்பொழுது நான் உங்களில் ஒருவன் போன்றும் எனக்குத் தென்படுகிறது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக என்பதே என்னுடைய ஜெபமாயிருக்கிறது. [கூட்டத்தினர் யாவரும் கரம் தட்டுகின்றனர்.—ஆசி.] உங்களுக்கு தயவான நன்றி. 15 இன்றைக்கு உங்களோடு சற்றுநேரம் என்னுடைய ஜீவிய சரிதையை குறித்து பேசவேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறேன். அது எனக்கு ஒரு—ஒரு கடினமான காரியமாயிருக்கிறது. அனேக வருடங்களாக நான் அதை அணுக முயற்சித்திருந்தும், இதுவே முதன் முறையாக அணுகுவதாய் உள்ளது. வெறுமென அதனுடைய ஒரு பகுதியைத் தவிர விவரமாய் அதிலே போக எனக்கு நேரமிருக்காது. அதில் இங்கே நான் அநேக பிழைகளையும் தவறாயிருந்த அநேக காரியங்களையும் செய்திருக்கிறேன். வானொலியில் இதை கேட்கிற உங்களையும், இங்கே இப்பொழுது கேட்கிறவர்களும் என்னுடைய தவறுகளை தடுக்கலின் கற்களாய் நீங்கள் எடுத்துக் கொள்ளாமல், கர்த்தராகிய இயேசுவினிடத்தில் உங்களை நெருக்கமாய் கொண்டு வருகிற படிக்கற்களாய் நீங்கள் எடுக்கும்படிக்கே நான் வாஞ்சிக்கிறேன். 16 பின்னர், இன்றிரவு சுகமளிக்கும் ஆராதனைக்கான ஜெப அட்டைகள் இன்றிரவு கொடுக்கப்பட வேண்டியிருக்கிறது. சுகமளிக்கும் ஆராதனையைக் குறித்து நாம் பேசும்பொழுது நாம் யாரையோ சுகப்படுத்தப் போகிறோம் என்று அர்த்தமல்ல. நாம் யாருக்கோ, “ஜெபம் செய்யப் போகிறோம்” என்பதாகும். தேவனே சுகமளித்தலை செய்கிறார். அவர் ஜெபத்திற்கு பதிலளிப்பதில் எனக்கு மிகுந்த கிருபையுள்ளவராயிருந்து வருகிறார். 17 இங்கே சில காலங்களுக்கு முன்னர், நான் ஒரு பெயர் பெற்ற சுவிசேஷகனுடைய மேலாளரிடம் பேசிக் கொண்டிருந்தேன். இந்த சுவிசேஷகன் ஏன் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்பதில்லை என்று கேட்கப்பட்டது. அதற்கு அந்த சுவிசேஷகன் என்னுடைய கூட்டங்களின் மேலாளரிடத்தில், “அவரால்…” இந்த சுவிசேஷகர் தெய்வீக சுகமளித்தலை விசுவாசிக்கிறார். ஆனாலும் அவர் வியாதியஸ்தர்களுக்காக் ஜெபிக்கத் துவங்குவாரானால் அது அவருடைய ஆராதனையை குறுக்கிடும். ஏனென்றால் அவர் சபைகளினால் பொறுபேற்கப்பட்டிருக்கிறார். அநேக சபைகள், அவைகளில் அநேகர் தெய்வீக சுகமளித்தலை விசுவாசிக்கிறதில்லை என்று பதிலுரைத்தாராம். 18 எனவே அந்த சுவிசேஷகர் மேல் நான் கனமும் மரியாதையும் உடையவனாக இருக்கிறேன். ஏனென்றால் அவருடைய ஸ்தானத்தை, அவருடைய கடமையின் பொறுப்பை அவர் காத்துக் கொண்டிருக்கிறார். நான் அவருடைய ஸ்தானத்தை ஒருபோதும் எடுக்க முடியாது. என்னுடைய ஸ்தானத்தையும் அவரால் எடுக்கக்கூடுமோ என்று நான் ஐயமுறுகிறேன். தேவனுடைய இராஜ்ஜியத்தில் நம் எல்லோருக்கும் ஒரு இடமுண்டு. நாம் ஒன்றாக சேர்த்து இணைக்கப்பட்டிருக்கிறோம். வித்தியாசமான வரங்கள். ஆனால் அதே ஆவி, வித்தியாசமான வெளிப்படுத்துதல்கள். நான் என்ன சொல்லுகிறேன் என்றால் அதே ஆவிதான் என்பதை குறிப்பிடுகிறேன். 19 இப்பொழுது ஆராதனைகள் இன்றிரவு துவங்குவதோ…ஆறு முப்பது மணிக்கு பாடல் குழுவினர் பாடத் துவங்குவார்கள் என்று அவர்கள் கூறினார்கள் என நான் நினைக்கிறேன். இப்பொழுது நீங்கள் வெளியே வானொலியில் கேட்டுக் கொண்டிருக்கிறீர்களென்றால் இதை கேட்கும்படியாய் நீங்கள் உள்ளே வாருங்கள். அது…அது மனநிறைவாயிருக்கும். அது எப்பொழுதுமே அப்படித்தான் இருந்து வருகிறது. 20 பின்னர் இந்த ஆராதனைக்குப் பிறகு உடனடியாக ஜெப அட்டைகள் கொடுக்கப்படும் என்று கூற நான் விரும்புகிறேன். நீங்கள் இங்கிருப்பீர்களாயின். உங்களுக்கு ஒரு ஜெப அட்டை வேண்டுமாயின் இந்த ஆராதனை கூட்டம் கலைந்து சென்றவுடனே ஜெப அட்டைகள் கொடுக்கப்படும். இது ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு அங்கே உள்ளே எனக்கு கூறப்பட்டது. என்னுடைய மகன் அல்லது திரு.மெர்சியர் அல்லது திரு.கோட் அவர்கள் ஜெப அட்டைகளை கொடுத்துக் கொண்டிருப்பார்கள். உங்களுடைய இருக்கையிலே அப்படியே அமர்ந்திருங்கள். ஆராதனை கலைந்து சென்றவுடனே, நீங்கள் உங்களுடைய இருக்கையிலேயே இருங்கள். எனவே அப்பொழுது பையன்கள் வரிசையினூடாக கடந்து வந்து ஜெப அட்டைகளை எவ்வளவு சீக்கிரமாய் கொடுக்கமுடியுமோ அவ்வளவு சீக்கிரமாய் கொடுக்க, உங்களால் அதை பெற்றுக்கொள்ள முடியும். நீங்கள் மாடி அலங்கங்களிலோ அல்லது தரையிலோ அல்லது அடித்தளத்திலோ எங்கேயிருக்கிறீர்களோ அங்கேயே நீங்கள் இருக்கையில் அமர்ந்திருங்கள். நீங்கள் ஜெப அட்டைக்காக இருக்கிறீர்கள் என்பதை அந்த பையன்கள் அறிவார்கள். பின்னர் இன்றிரவு நாங்கள் வியாதியஸ்தர்களுக்காக ஜெபம் செய்வோம். கர்த்தர் என்னுடைய சிந்தனைகளை மாற்றவில்லையென்றால், நான், நீர் எங்களுக்கு பிதாவை காண்பித்தால் அது எங்களை திருப்திப்படுத்தும் என்ற பொருளின் பேரில் இன்றிரவு நான் பிரசங்கிக்க விரும்புகிறேன். 21 இப்பொழுது என்னுடைய சுயசரிதையை துவங்குவதற்கு சற்று முன் இந்த பிற்பகலில் ஒரு மூலபாடத்திற்காக நான் இதை வாசிக்க விரும்புகிறேன். அது எபிரேயரின் புத்தகம் 13-ம் அதிகாரத்தில் உள்ளதை கண்டறியலாம். நாம் கிட்டத்தட்ட…இங்கிருந்து வாசிக்கத் துவங்குவோமாக. நான் 12-வது வசனத்தைக் குறித்து கூறுகிறேன். அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார். ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம். நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம். 22 இப்பொழுது இது ஒருவிதமான மூலபாடம். ஏனெனில், நீங்கள் பாருங்கள். இது ஒரு சுயசரிதையாயிருந்தாலும், அல்லது மானிட வர்க்கத்திற்கு சம்பந்தப்பட்ட ஏதாவது காரியமாயிருந்தாலும், விசேஷமாக ஒரு மனிதனுடைய கடந்த கால வாழ்க்கை என்னுடையதைப் போன்று அவ்வளவு இருளாய் இருந்ததானாலும், நாம் அதை மகிமைப்படுத்துகிறதில்லை. ஆனால் நாம் வேத வார்த்தைகளை வாசிப்போமேயானால், தேவன் வேத வார்த்தைகளை ஆசீர்வதிப்பார் என்று நான் கருதினேன். என்னுடைய கருத்து என்னவெனில்: நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை. வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம். 23 இப்பொழுது லாஸ் ஏஞ்சல்ஸ் உங்களுக்கு மிகப்பிரியமானது என்பதை நானறிவேன். அப்படியிருக்க உங்களுக்கு உரிமை உண்டு. அது ஒரு மகத்தான நகரம், அதனுடைய புகைப்பனிமூட்டம், இன்னும் என்னவெல்லாமோ இருப்பினும், அது ஒரு அழகான நகரமே. அருமையான சீதோஷணநிலை. ஆனால் இந்த நகரம் தொடர்ந்து இருக்கமுடியாது. அதற்கு முடிவு இருந்தாக வேண்டும். 24 நான் ரோமாபுரியில் (அங்கே மகத்தான சக்கரவர்திகளும்) அழியாததாய் இருக்கும் என்று அவர்கள் நினைத்த நகரங்களிலும் நின்றிருக்கிறேன். அதின் அழிந்துபோன பகுதிகளை பார்ப்பதற்குக் கூட நீங்கள் 20 அடி ஆழம் தோண்ட வேண்டியிருக்கிறது. 25 பார்வோன்களுடைய மகத்தான இராஜ்ஜியங்கள் இருந்த இடங்களிலே நான் நின்றிருக்கிறேன். அந்த மகத்தான பார்வோன்கள் அங்கே ஆட்சி செய்தனர் என்பதை பார்ப்பதற்கு நீங்கள் பூமிக்குள்ளாக தோண்டிச் செல்ல வேண்டும். 26 நாமெல்லோரும் நம்முடைய நகரங்களையும், நம்முடைய ஸ்தலங்களையும் குறித்து சிந்திக்க விரும்புகிறோம். ஆனால் நினைவிருக்கட்டும், அது நிலைத்திருக்க முடியாது. 27 நான் சிறு பையனாயிருந்தபோது, ஒரு பெரிதான, அழகான நிழல் தரும் மேப்பிள் என்ற பெயர் கொண்ட மரத்தண்டைக்கு வழக்கமாக செல்வேன். என்னுடைய தேசத்தில் அதிகப்படியாக வைரம் பாய்ந்த கட்டை எங்களுக்கு உண்டு. அடுத்தப்படியாக இந்த மேப்பிள் மரங்களும், சர்க்கரை தரும் மேப்பிள் மரங்களும் எங்களுக்கு இருந்தன. நாங்கள் அதை “கடின மேப்பிள் மரம்” என்றும், “மிருதுவான மேப்பிள் மரம்” என்றும் அழைப்போம். இந்தப் பெரிய பிரம்மாண்டமான மரமானது மிகவும் அழகான ஒரு மரமாயிருந்தது. நான் வயல்வெளிகளில், அறுவடையிலே வேலை செய்துவிட்டு, உள்ளே வரும்போது இந்த பெரிய மரத்தண்டை போய், அதனடியில் உட்கார்ந்து மேல் நோக்கிப் பார்க்க நான் அதிகமாக விரும்புவேன். மிகப்பெரிய மகத்தான அடிமரம். அதனுடைய பலமான கிளைகள் காற்றினால் ஆடுவதை நான் பார்க்கும்போது, பெரியதாயிருக்கும். உங்களுக்குத் தெரியுமா? நான், “இந்த மரமானது பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இங்கேயே இருக்கும்” என்றேன். அண்மையில் அந்த பழைய மரத்தை நோக்கிப் பார்த்தேன். அதுவோ வெறுமனே தண்ணீருக்குள் இருக்கும் ஒரு கிளை போன்றிருந்தது. 28 “நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை.” இல்லை. நீங்கள் நோக்கிப் பார்க்கும்படியாய் இந்த பூமியின் மேல் இருக்கின்ற ஒரு காரியமும் நிலைத்திராது. அதற்கு ஒரு முடிவு வந்தாக வேண்டும். அழிவுள்ள எந்த காரியமும் அழிவில்லாமைக்கு வழி கொடுத்தாக வேண்டும். எனவே நம்முடைய நெடுஞ்சாலைகளை நாம் எவ்வளவுதான் நன்றாக அமைத்தாலும் சரி, நம்முடைய கட்டிடங்களை நாம் எவ்வளவுதான் அருமையாய் கட்டினாலும் சரி, அவை எல்லாம் போயாக வேண்டும். ஏனென்றால் இங்கே ஒரு காரியமும் நிலையாக இல்லை. காணமுடியாதவைகள் மட்டுமே நிலையாயிருக்கிறது. 29 நாங்கள் ஜீவித்தான வீடு எனக்கு ஞாபகம் இருக்கிறது. அது ஒரு பழைய மரவீடு. களிமண்ணினால் பூசப்பட்டதாய் இருந்தது. நான்…ஒருவேளை உங்களில் அநேகர் களிமண்ணினால் பூசப்பட்ட வீட்டை பார்த்தே இருக்கமாட்டீர்கள். ஆனால் அது முழுவதுமே களிமண்ணால் பூசப்பட்டிருந்தது. அந்த பழைய வீட்டில் மகத்தான பெரிய மரக்கட்டைகள் இருந்தன. அந்த வீடு பல நூற்றுக்கணக்கான வருடங்களாக இருந்தன. அந்த வீடு பல நூற்றுக்கணக்கான வருடங்களாக நிலைத்திருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால் இன்றைக்கோ ஒரு வீடு கட்டும் திட்டத்தில் அந்த வீடு எங்கே நின்றது என்று உங்களுக்கே தெரியும். அது அவ்வளவு வித்தியாசமாய் இருக்கிறது. எல்லாக் காரியங்களும் மாறிக்கொண்டிருக்கின்றன. ஆனால்… 30 நான் என் தகப்பனாரை வழக்கமாய் நோக்கிப் பார்ப்பதுண்டு. அவர் ஒரு குள்ளமான, தடியான, மிக பெலமான மனிதன். நான் அறிந்த பலவான்களில் அவர் ஒருவர். மரத்துண்டுகளை வியாபாரம் செய்யும் வேலையில் அவரோடு வேலை செய்கின்ற ஒரு மனிதன் திரு.கூட்ஸ் (Coots) அவர்கள் ஒரு மரவியாபாரி. அவரை நான் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் சந்தித்தேன். திரு.கூட்ஸ் அவர்கள் என்னுடைய மிக நல்ல நண்பரும், முதல் பாப்டிஸ்ட் சபையில் ஒரு கண்காணியுமாய் இருக்கிறார். அவர் பில்லி, “நீ, ஒரு நல்ல பெலமுள்ள மனிதனாக இருக்க வேண்டுமே” என்றார். நானோ, “இல்லை, திரு. கூட்ஸ் அவர்களே, நான் அப்படியாய் இல்லையே” என்றேன். 31 அதற்கு அவர், “நீ உன் தகப்பனின் பின்னே போயிருந்தால் அப்படியிருந்திருப்பாய்” என்றார். அப்பொழுது நான், “நான் நூற்று நாற்பது பவுண்டு எடையுள்ள அந்த மனிதரை பார்த்திருக்கிறேன், அவர் ஒருவராகவே ஒரு மரத்தண்டை தூக்கி வண்டியில் ஏற்றுவார். அந்த துண்டு ஒன்று தொள்ளாயிரம் பவுண்டு எடையிருக்கும்” என்றேன். அதை எப்படி செய்ய வேண்டும் என்ற முறையை சரியாக அவர் அறிந்திருந்தார். அவர் பெலமுள்ளவராய் இருந்தார். அம்மா அவரை உணவு உண்ண அழைக்கும்போது, அவர் கை, கால் கழுவும் இடத்திற்கு சென்று கழுவிக்கொண்டு வந்து சாப்பாட்டிற்கு ஆயத்தமாகும்போதும் அவரை கவனித்துப் பார்ப்பேன். 32 முன் முற்றத்தில் எங்களுக்கு ஒரு பழைய ஆப்பிள் மரம் இருந்தது. பின்னர் பின்பக்கம் நோக்கியவாறு மூன்று அல்லது நான்கு சிறிய மரங்களும் இருந்தன. அந்த மரத்தின் மத்தியில் அங்கே ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி இருக்கும். பெரிய அளவு, ஆனால் உடைந்து போய் இருந்தது. அந்த மரத்தின் பக்கவாட்டில் சிறு ஆணிகள் அடித்து மடக்கி வைக்கப்பட்டிருக்கும். இதை தச்சர்கள் கேட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் அவர்கள் அதை சட்டை மாட்டும் கொக்கி என்றழைப்பார்கள். அந்த கண்ணாடியை அந்த இடத்தில் மாட்டி வைக்க ஆணி அடித்து மடக்கி விடப்பட்டிருந்தது. அங்கே ஒரு பழைய தகர…சீப்பு இருந்தது. எத்தனைபேர் அந்த பழைய மாதிரியான தகர…சீப்பை பார்த்திருக்கிறீர்கள்? என்னால் அப்படியே அதை காணமுடிகிறது. 33 அங்கே ஒரு சிறிய கழுவும் இருக்கை இருந்தது. வெறுமனே ஒரு சிறு பலகை அதற்கு அடியில் சாய்ந்து கொண்டிருக்கும் காலோடு அந்த மரத்திற்கு எதிரே சொருகப்பட்டிருந்தது. அங்கே ஒரு சிறிய பழைய காற்றழுத்த விசைக்குழாய் இருந்தது. அதைக் கொண்டுதான் தண்ணீரை எடுத்து வந்தோம். அந்த பழைய மரத்தண்டையில்தான் கழுவுவோம். அம்மா ஒரு மாவு கோணிப்பையை எடுத்து அதை ஒரு துவாலையாக பண்ணுவார்கள். எப்பொழுதாவது ஒரு மாவுக்கோணி துவாலையை (Towel) உபயோகித்திருக்கிறீர்களா? நான் நிச்சயமாகவே இப்பொழுது என் வீட்டில் இருப்பது போன்றே உணருகிறேன். அந்த பெரிய பழைய முரடான துவாலைகள் சிறு குழந்தைகளாகிய எங்களை அவள் குளிப்பாட்டி துடைக்கும்போது ஒவ்வொரு முறையும் தோலை தேய்த்து எடுப்பது போன்று இருக்கும். எனக்கு அந்த பழைய மாவு கோணி ஞாபகம் இருக்கிறது. அவள் அதின் ஓரத்திலுள்ள நூல்களையெல்லாம் ஒன்றோடொன்று இணைத்து சிறுசிறு முடிச்சுகளாகப் போட்டு மேலே அதை அந்தவிதமாக அலங்கரிப்பாள். 34 எத்தனை பேர் வைக்கோல் மெத்தையின் மேல் உறங்கியிருக்கிறீர்கள்? நான் சொல்வேன், எத்தனை பேர்களுக்கு ஒரு பதர் தலையணை என்றால் என்ன என்று தெரியும்? சகோதரன் குளோவர், நான் இப்பொழுது நிச்சயமாகவே வீட்டில் உள்ளதைப் போன்றே இருக்கிறேன். வைக்கோல் மெத்தை, அது எனக்கு அதிக காலத்திற்கு முன்னானது அல்ல, ஏனென்றால் அவைகள் ஒன்றிலிருந்துதான் நான் வந்துள்ளேன், அது…ஓ, அது—அதில் தூங்குவது நல்ல குளிர்ச்சியாக இருக்கும். பின்னர் குளிர்காலத்தில் அந்த பழைய சிறகு மெத்தையை எடுத்து வைத்துக் கொண்டு அதின்மேல் தூங்குவோம். உங்களுக்கு தெரியுமே. அதன்பிறகு ஒரு துண்டு கித்தானை எடுத்து எங்களுக்கு மேலாக மூடிக்கொள்வோம். ஏனென்றால் பனிக்காற்று அடிக்கும்போது வீட்டிலுள்ள ஓட்டைகளின் வழியாக பனிச்சாரல் உள்ளே வரும். உங்களுக்குத் தெரியுமே! அந்த பழைய பனி சாரல் தடுக்கு பலகைகள் அப்படியே திரும்பும்போது அதினூடாக பனி உள்ளே வருவது உங்களுக்குத் தெரிந்தே. ஓ, எனக்கு மிகவும் நன்றாக ஞாபகமிருக்கிறது. 35 பின்னர் அப்பா சவரம் செய்ய ஒரு தூரிகையை (Brush) உபயோகிப்பார். இது இப்பொழுது உங்களை கவரப்போகிறது. அது தானிய கதிர்களிலிருந்து தயாரிக்கப்பட்டிருந்தது. தானியக் கதிர்களினால் ஆன ஒரு சவர தூரிகை. அவர் என் தாயாருடைய சக்தி வாய்ந்த கழுவநீர்மக்கட்டி சோப்பை எடுத்துக் கொள்வார். அதை அவளாகவே தயாரித்திருந்தாள். அதைப் பொருத்தி அந்த தானியக் கதிர் தூரிகையினால் முகத்தில் பூசி, ஒரு பழைய நீளமான சவரன் கத்தியால் முகசவரம் செய்வார். ஞாயிற்றுக் கிழமைகளில் அவர் காகித துண்டுகளை எடுத்து அவருடைய கழுத்துப்பட்டையை சுற்றிலுமாய் ஒட்டிக்கொள்வார். அவர்கள் அந்நாளில் மெல்லிய கழுத்துப்பட்டைகளை அணிவார்கள். அதை இதைப்போன்று கழுத்துப்பட்டையை சுற்றி போட்டுக்கொள்வர். அவருடைய சட்டையின் கழுத்துப்பட்டையினுள் சோப்பு நுரை போகாமல் இருக்க இதை செய்வார். அது செய்யப்படுவதை நீங்கள் எப்பொழுதாவது பார்த்திருக்கிறீர்களா? ஏன்? என்னே, என்னே! 36 அங்கே கீழேயிருந்த ஒரு சிறிய ஊற்று எனக்கு ஞாபகம் இருக்கின்றது. நாங்கள் தண்ணீர் குடிக்க அங்கேதான் செல்வோம். நாங்கள் சுரைக்குடுக்கை வாளியையே தண்ணீர் மொள்ள உபயோகிப்போம். எத்தனைபேர் ஒரு சுரைக்குடுக்கை வாளியை பார்த்திருக்கிறீர்கள்? நல்லது, உங்களில் எத்தனை பேர் கென்டகியிலிருந்து வந்திருக்கிறீர்கள்? ஆம், இங்கே இந்த கென்டகியர்களைப் பாருங்கள். நல்லது, என்னே, நான்—நான்…நான் சரியாகத்தான் கூறுகிறேன் என்று கருதுகிறேன். இங்கே இருப்பவர்களெல்லாம் ஓக்லஹாமாவில் குடியிருப்பவர்களும், ஆர்க்கன்ஸாவில் குடியிருப்பவர்களும் என்றுதான் நினைத்தேன். ஆனால் பார்த்தால் கென்டக்கியே இங்கு உள்ளே வந்து கொண்டிருக்கிறது போன்று இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் கென்டலக்கியில் அவர்கள் எண்ணெயை கண்டுபிடித்தனர். உங்களுக்குத் தெரியும். எனவே ஒருக்கால் அவர்களில் சிலர் இந்த இந்த வழியாய் வந்து கொண்டிருக்கலாம். 37 பின்னர் எனக்கு ஞாபகம் இருக்கிறது. அப்பா வழக்கமாக உள்ளே வந்து ஆகாரத்திற்கு முன்னர் கையை கழுவிக்கொள்ளுவார். அவருடைய சட்டை கைகளை அவருடைய சிறிய தடித்த கரங்களில் சுருட்டி விடுவார். அப்பொழுது அவருடைய கரங்களில் கழுவுவதற்காக தண்ணீரை வாரி அவருடைய முகத்தின் மேல் அடிப்பார். அந்த தசைகள், அந்த தசைகள், அவருடைய சிறிய புயங்கள் அசையும். உங்களுக்குத் தெரியுமா? என்னுடைய அப்பா நூற்றைம்பது வயதாகும் வரையிலும் ஜீவிப்பார் என்று நான் கூறினேன். அவர் அவ்வளவு பலமுள்ளவராயிருந்தார். ஆனால் அவர் ஐம்பத்திரண்டு வயதிலேயே மரித்துப்போனார். புரிகின்றதா? இங்கே நமக்கு நிலையான நகரம் கிடையாது. அது உண்மை. நம்மால் நிலைத்திருக்க முடியாது. 38 இப்பொழுது நாமெல்லோருமாக சேர்ந்து ஒரு சிறு பயணத்தை மேற்கொள்வோம். எனக்கு இருப்பதுபோன்றே இங்கே இருக்கின்ற உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சுயசரிதை இருக்கிறது. அவ்வப்பொழுது ஞாபகத்தின் சந்துகளில் ஒரு சுற்று சுற்றிவருவது நன்மையாய் இருக்கும். நீங்கள் அப்படி நினைப்பதில்லையா? வெறுமனே திரும்பிச் சென்று சிறிது நேரம் சிறுபிள்ளைகளாய் அதேவிதமான அனுபவங்களுக்குள் திரும்புவோம். 39 இப்பொழுது சுய சரிதையின் முதல் பாகம். நான் அதை சற்று தொடவுள்ளேன். ஏனென்றால் அது புத்தகத்தில் இருக்கிறது. உங்களில் அநேகரிடத்தில் அந்த புத்தகம் இருக்கிறது. 40 நான் உயரே உள்ள கென்டக்கி மலைகளில் ஒரு சிறிய மலை அறையில் பிறந்தேன். அங்கே நாங்கள் ஜீவிக்க எங்களுக்கு இருந்த ஒரே ஒரு அறை அதுவே. அந்த தரையின் மேல் ஏதும் ஜமக்காளம் கிடையாது. தரையின் மேல் மரப்பலகை கூட கிடையாது. அது ஒரு சாதாரண வெறுந்தரையாய் இருந்தது. அங்கே ஒரு மரக்கட்டை, ஒரு மரக்கட்டை, அதின்மேல் இருந்த மூன்று கால்கள் வெட்டப்பட்டிருந்தன. அதுதான் எங்களுடைய மேஜை. எல்லா குட்டி பிரான்ஹாம்களும் அங்கே அதைச் சுற்றிக் கொள்வோம். அந்த சிறிய அறையின் வெளியே உள்ளே முன்பாகத்தில் புரளுவோம், பைக்கிரி என்ற பிராணி போல, உங்களுக்குத் தெரியும். எல்லா சிறிய சகோதரர்களும், அங்கே நாங்கள் ஒன்பது பையன்களும், ஒரு பெண்ணுமாக நாங்கள் இருந்தோம். ஒரு கூட்ட பையன்களோடு அவளுக்கு உண்மையாகவே அது ஒரு கடினமான நேரமாயிருந்தது. அந்த நாட்களில் நாங்கள் செய்த காரியங்களிலிருந்து நாங்கள் அவளுக்கு மரியாதை கொடுக்க வேண்டியவர்களாய் இன்றைக்கும்கூட இருக்கிறோம். அவளால் எங்களோடு எங்கேயும் போகமுடியாது. நாங்கள் அவளை திரும்பி ஓடும்படியாய் செய்துவிடுவோம். அவள் ஒரு பெண்ணாய் இருந்தாள். எனவே அவளால் அதைத் தாங்க முடியாது உங்களுக்குத் தெரியும். எனவே நாங்கள்…எல்லா… 41 அங்கே பின்னாக ஒரு மேஜையும் இரண்டு நாற்காலிகளும் எங்களுக்கு இருந்தது நினைவிருக்கிறது. அவைகள் லிம்பார்க் மரத்தினால் செய்யப்படிருந்தன. பழைய பளுவான வாதுமை போன்ற கொட்டைகளைத் தரும் மர இளங்கன்றுகளை ஒன்று சேர்த்து, அதனுடைய அடிப்பாகம் பளுவான மரப்பட்டையோடு இணைக்கப்பட்டிருக்கும். நீங்கள் யாராவது எப்பொழுதாவது ஒரு பளுவான மரப்பட்டையிலான நாற்காலியை பார்த்திருக்கிறீர்களா? ஆம், ஓ, என்னால் இன்னமும் அம்மா கூறுவதை கேட்கமுடிகிறது. அதற்குப் பின்னர் நாங்கள் வேறொரு இடத்திற்கு குடிபோனபோது அங்கே அவளுக்கு மரத்தினாலான தரையிருந்தது. அந்த குழந்தைகளை அவளுடைய மடியில் இந்தவிதமாய் வைத்துக் கொண்டு அந்த நாற்காலியை தரையில் கரக்முரக்கென்று தாலாட்டிக் கொண்டு இருப்பாள். அவள் துவைக்கவோ அல்லது வேறேதாவது காரியங்களை செய்யும் பொழுது சிறுவர்கள் கதவுக்கு வெளியே போகாதபடி அவள் தடுப்பது எனக்கு நினைவிருக்கிறது. அவள் அந்த நாற்காலியைக் கொண்டு வந்து கதவுக்கு குறுக்காக ஒருவிதமாக வைத்து, சிறுவர் கதவுக்கு வெளியே போகதபடி செய்து, அங்கே ஊற்றுக்குச் சென்று தண்ணீர் கொண்டு வருதல் முதலானவைகளைச் செய்வாள். 42 நான் பிறந்தபொழுது, அம்மாவுக்கு பதினைந்து வயது. அப்பாவுக்கு பதினெட்டு வயது. ஒன்பது பிள்ளைகளில் நான் தான் முதலாவதாக இருந்தேன். அவர்கள் என்னிடம் கூறியதென்னவெனில், அதாவது நான் பிறந்த காலையன்று… 43 நாங்கள் மிகவும் ஏழ்மையாக, அதிலும் ஏழ்மையிலும் ஏழ்மையாகவே இருந்தோம். எங்களுடைய இந்த அறையில் ஒரு ஜன்னல் கூட கிடையாது. அதை நீங்கள் திறக்க ஒரு சிறிய மரக்கதவு போன்றதொன்று இருந்தது. நீங்கள் அப்படிப்பட்டதொன்றை கண்டிருக்கக்கூடுமோ என நான் சந்தேகப்படுகிறேன். திறக்கப்படுவதற்கு ஒரு ஜன்னலுக்குப் பதிலாக ஒரு சிறிய மரக்கதவு இருந்தது. பகல் நேரத்தில் நீங்கள் அதை திறந்து வைத்துக் கொண்டு இரவு நேரத்தில் நீங்கள் அதை மூட வேண்டும். அந்த நாட்களில் நாங்கள் மின்சார விளக்குகள் அமைக்கவோ அல்லது மண்ணெண்ணெய் விளக்கையும் கூட எரிய வைக்கவோ முடியாது. நீங்கள் “மசக்கெண்ணெய் விளக்கு” என்று அழைக்கிறீர்களே, அதைத்தான் நாங்கள் வைத்திருந்தோம். இப்பொழுது ஒரு மசக்கெண்ணெய் விளக்க என்னவென்பதை எப்பொழுதாவது அறிந்திருப்பீர்களா என நான் ஐயமுறுகிறேன். நல்லது, உங்களுக்கு என்னவென்று தெரிகிறதா? நீங்கள் எப்பொழுதாவது ஒரு பைன் மர முடிச்சை எரித்ததுண்டா? அதை கொளுத்தி, ஒரு மூடியின் மேல் வைப்பார்கள். அது எரியும். சிறிது புகையாயிருக்கும். ஆனால் அவர்களிடம் புகையைப் பிடித்துக்கொள்ள மேஜை, நாற்காலி முதலியவைகள் கிடையாது. எனவே அறையானது அப்படியே புகை படிந்ததாயிருந்தது. அது நன்றாக இழுத்துக் கொண்டது. ஏனென்றால் அங்கே உயரே அதை நேராக இழுத்துக்கொள்ள போதுமான கூரை இருந்தது. ஆகையால் அது… 44 நான் 1909-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ம் தேதி அன்று பிறந்தேன். நிச்சயமாக உங்களுக்குத் தெரியும். அது என்னை இருபத்தைந்து வருடங்களுக்கு சற்று அதிகமாக ஆக்குகிறது. ஆக நான் பிறந்த அந்த காலையன்று அவர்கள் ஜன்னலைத் திறந்ததாக என் தாயார் கூறினார். இப்பொழுது, எங்களுக்கு வைத்தியர்கள் கிடையாது. அங்கே ஒரு மருத்துவச்சி இருந்தாள். அந்த மருத்துவச்சி என்னுடை பாட்டியாக இருந்தாள். எனவே நான் பிறந்து, முதலாவதாக அழத்துவங்கினபோது, என்னுடைய தாயார் அவளுடைய பிள்ளையைப் பார்க்க வேண்டும் என்றாளாம். அவளே ஒரு குழந்தையாகத்தான் இருந்தாள். அந்த சிறிய ஜன்னலை அவர்கள் திறந்தபொழுது, அப்பொழுதுதான் விடிந்து சுமார் ஐந்து மணி இருக்குமாம். அங்கே ஒரு வயதான ராபின் பறவை ஒரு புதரின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்ததாம். என்னுடைய சுயசரிதை என்ற புத்தகத்தில் நீங்கள் எல்லோரும் அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறீர்கள். அங்கே ஒரு வயதான ராபின் பறவை உட்கார்ந்துகொண்டு தன்னிலுள்ள எல்லாவற்றிற்காகவும் பாடிக் கொண்டிருந்ததாம். 45 ராபின் பறவைகளை நான் எப்பொழுதுமே நேசிக்கிறேன். இப்பொழுது தேசத்தில் வானொலியினூடாக கேட்கின்ற பையன்களாகிய உங்களைத்தான், என்னுடைய பறவைகளைப் பார்த்து சுடாதேயுங்கள். நீங்கள் பாருங்கள், அவைகள்—அவைகள்…அவைகள் என்னுடைய பறவைகள். அதனுடைய சிவந்த மார்பை அது எப்படி பெற்றது என்ற ராபின் பறவையைக் குறித்த கட்டுக்கதையை நீங்கள் எப்பொழுதாவது கேட்டிருக்கிறீர்களா? நான் இங்கே ஒரு நிமிடம் நிறுத்தவுள்ளேன். அதற்கு எப்படி அதனுடைய சிவப்பு மார்பகம் கிடைத்ததென்றால்…ஒரு நாளன்று இராஜாதி இராஜா அங்கே சிலுவையில் மரித்துக்கொண்டிருந்தார். அவர் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார். ஒருவரும் அவரிடமாய் வரவில்லை. அவருக்கு உதவி செய்வார் ஒருவரும் இல்லாதிருந்தது. அங்கே ஒரு பழுப்பு நிற பறவையொன்று சிலுவையிலிருந்த அந்த ஆணிகளை எடுத்துவிட விரும்பியதாம். அது தொடர்ந்து சிலுவையை நோக்கி பறந்து வந்து ஆணிகளை அசைத்துக் கொண்டிருந்ததாம். அவைகளை வெளியே இழுக்க அது மிகவும் சிறியதாயிருந்ததாம். அப்பொழுதே இரத்தத்தினால் முழுவதும் சிவந்த அதனுடைய சிறிய மார்பை அது பெற்றுக்கொண்டதாம். அது முதற்கொண்டு அதனுடைய மார்பு சிவப்பாகவே இருக்கிறது. பையன்களே அதை சுட்டுவிடாதீர்கள். அதை மட்டும் விட்டு விடுங்கள். 46 அந்த ராபின் பறவை ஜன்னலின் பக்கம் உட்கார்ந்து கொண்டு பாடுவதுபோன்று மென் குரலில் முணுமுணுத்துக் கொண்டிருந்தாம். தகப்பனார் ஜன்னலை பின்னாகத் தள்ளினாராம். அவர்கள் அந்த சிறிய ஜன்னலின் கதவை பின்னாகத் தள்ளினபோது, படத்தில் நீங்கள் காண்கிற அந்த ஒளியானது ஜன்னலுக்குள் சுழன்று கொண்டு வந்து படுக்கையின் மேல் தொங்கி நின்றது என்று என்னுடைய தாயார் கூறினார். அப்பொழுது பாட்டியம்மாவிற்கு என்ன கூறுவதென்றே தெரியவில்லையாம். 47 இப்பொழுது, நாங்கள் ஒன்றும் பயபக்தியான குடும்பத்தினர் அல்ல. என்னுடைய ஜனங்கள் கத்தோலிக்கர்கள். நான், தாய் தந்தை என இரண்டு பக்கத்திலும் பார்த்தால் அயர்லாந்தைச் சேர்ந்தவனாகவே இருக்கிறேன். என்னுடைய தகப்பனார் சரியாகக் கூறினால் அயர்லாந்துக்காரரான பிரான்ஹாம் ஆவார். என்னுடைய தாயாரோ ஹார்வேயாக இருக்கிறாள். அவளுடைய தகப்பனார் ஒரு செராக்கி இந்தியனை மணந்து கொண்டார். எனவே அது அந்த அயர்லாந்துக்கான சிறிய மரபு வழியை உடைத்துப்போட்டது. தாயாரும், தகப்பனாரும் சபைக்குப் போனதில்லை. சபைக்குப் புறம்பாக அவர்கள் மணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு மார்க்கம் என்பததே இல்லாதிருந்தது. அங்கே பின்னாக மலைகளிலே ஒரு கத்தோலிக்க சபை கூட கிடையாது. பண்டைய நாட்களில் இங்கு வந்து குடியமைத்தவர்களோடு வந்தவர்கள். இரண்டு பிரான்ஹாம்கள் வந்தார்கள். அதிலிருந்தே முழு பிரான்ஹாம் தலைமுறைகளெல்லாம் வெளிவந்தன. இதுதான் எங்களுடைய குடும்ப வம்ச வரலாறு. 48 பின்னர் அவள் திறந்தவுடன்…அவர்கள் இந்த ஜன்னலைத் திறந்தவுடன் இந்த ஒளி உள்ளே வந்து அங்கே நின்றதாம். அப்பொழுது அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லையாம். இந்த சம்பவத்திற்காகவே அப்பா வேலை செய்ய பயன்படும் ஒரு நீளமான மேலாடை ஒன்றை வாங்கினார் என்று தாயார் கூறினார்கள். அந்த பழைய மேலாடையின் மேல் கால்சட்டையில் உள்ள அரையாடையை தன்னுடைய கரங்களில் சொருகியவாறு அவர் நின்று கொண்டிருந்தாராம். அது அந்தக்காலத்தில் விறகு வெட்டுபவர்கள், மரம் வெட்டுபவர்கள் அணிந்து கொள்வது போன்று இருந்ததாம். அது அவைகளை பயமுறுத்தியதாம். 49 அதற்குப் பின்னர் எனக்கு சுமார் பத்து நாட்களாக அல்லது இன்னும் சில நாட்கள் ஆனதற்குப் பின் அவர்கள் என்னை “ஆப்ஸம் இராஜ்ஜியம்” என்று அழைக்கப்படுகின்ற ஒரு சிறிய பாப்டிஸ்ட் சபைக்கு கொண்டு சென்றனர். ஆப்ஸம் இராஜ்ஜிய பாப்டிஸ்ட் சபை. அது ஒரு நல்ல பெயர். அங்கே ஒரு பழைய சுற்றுலா பிரசங்கியார் இருந்தார். பழைய பாணியிலான பாப்டிஸ்ட் பிரசங்கியார். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அங்கே வந்து போவாராம். அப்பொழுதே ஜனங்கள் ஒன்றுகூடி ஒரு சிறு ஆராதனையை நடத்துவார்களாம். அவர்கள் போய் சில பாட்டுகளை பாடுவார்கள். ஆகவே சுற்றுலா செல்பவர் அடிக்கடி வந்து பிரசங்கிப்பாராம். அப்பொழுது ஒரு மூட்டை பூசணிக்காயும், அதைப் போன்று ஒருசில பொருட்களையும் அவருக்கு கொடுப்பார்களாம். உங்களுக்குத் தெரியும், அவருக்கு கொடுக்கும்படியாய் அதை வளர்ப்பார்கள். அந்த வயதான பிரசங்கியார் அவ்வழியாய் வந்து அங்கே ஒரு சிறிய பையான எனக்காக அவர் ஜெபத்தை ஏறெடுத்தாராம். அதுதான் என்னுடைய முதல் சபை பிரயாணமாயிருந்தது. 50 கிட்டத்தட்ட அந்த வருடம்…பின்னர் சுமார் இரண்டு வயதை கடந்த பின்னர் முதலாவது தரிசனம் நிகழ்ந்தது. 51 இந்த வெளிச்சம் அங்கே உள்ளே வந்தது என்பதை அவர்கள் மலையைச் சுற்றிலுமாய் கூறியிருந்தார்கள். எனவே அவர்கள் எது என்னவாக இருக்கக்கூடும் என்று சிந்திக்கலாயினர். அவர்களில் சிலர் இது சூரிய வெளிச்சம் வீட்டிலிருந்த கண்ணாடியின் மேல்பட்டு பிரதிபலித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும் என்று கூறினர். ஆனால் அங்கே வீட்டில் கண்ணாடியே இல்லாதிருந்தது. சூரியனும் எழும்பி உயரே வராதிருந்தது. மேலும் அது விடியற்காலை ஐந்து மணியாயிருந்தது. ஓ, அவர்கள் அதை அப்படியே விட்டுவிட்டனர். அப்பொழுது எனக்கு சுமார் மூன்று வயதிருக்கலாம். 52 இப்பொழுது, நான் உண்மையாயிருக்க வேண்டும். நான் கூறுவதற்கு விரும்பாத காரியங்கள் இங்கே இருக்கின்றன். நான் அதைத் தவிர்க்க விரும்பி, அதை கூறாதிருக்கட்டும். ஆனால் அப்படி இருந்தாலும், உண்மையை கூற, அது உன் மேலிருந்தாலும் அல்லது உங்களுடைய ஜனத்தின் மேல் இருந்தாலும் சரி, நீங்கள் உண்மையை கூறத்தான் வேண்டும். அதைக் குறித்து உண்மையாயிருங்கள். அப்பொழுது அது எல்லா நேரங்களிலும் அதே விதமாக இருக்கும். 53 என்னுடைய தகப்பனார் ஒரு மார்க்க சம்பந்தமான நபராய் இருப்பதிலிருந்து வெகு தூரத்தில் இருந்தார். தொடர்ந்து எல்லா நேரங்களிலும் குடிக்கின்ற ஒரு குறிப்பிடத்தக்க மலைவாசியான பையனாக அவர் இருந்தார். ஒரு சண்டையில் அவர் ஒரு தொல்லைக்குள்ளானார். மலைகளில் நடந்த ஒருவிதமான விருந்தில் சண்டை ஏற்பட்டு இரண்டு அல்லது மூன்று பேர்கள் ஏறக்குறைய கொலை செய்யப்பட்டனர். துப்பாக்கியால் சுட்டுக் கொண்டும், ஒருவரையொருவர் கத்திகளால் வெட்டிக் கொண்டனர். தந்தையார் இந்த சண்டையின் குழுத்தலைவர்களில் ஒருவராக இருந்தார். ஏனென்றால் அவருடைய நண்பர்களில் ஒருவர் காயப்பட்டு, யாரோ ஒருவரை நாற்காலியால் அடித்து விட்டார். அந்த மனிதன் ஒரு கத்தியை கையில் வைத்திருந்தவனாய் தரையில் மேலிருந்த தகப்பனாரின் நண்பனை அந்த கத்தியோடு இருதயத்திலே குத்த இருந்தபோது அப்பா அவனுடைய பங்கை எடுத்துக்கொண்டார். அது உண்மையாகவே ஒரு பயங்கரமான சண்டையாய் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் அநேக மைல்களுக்கு அப்பாலுள்ள பர்க்ஸ்வில் என்ற இடத்திற்கு ஒரு அமைதி காவலரை குதிரையின் மேல் அனுப்பி என் தகப்பனை பின் தொடரும்படி செய்திருந்தனர். 54 ஆக அந்த மனிதன் மரிக்கும் தருவாயில் இருந்தான். ஒரு வேளை அவனுடைய ஜனங்களில் சிலர் இதை கேட்டுக் கொண்டிருக்கலாம். நான் அவருடைய பெயரை கூறப்போகிறேன். வில் யார்புரோ என்பது அவருடைய பெயர். அவருடைய பையன்களில் சிலர் கலிபோர்னியாவில் இருக்கிறார்கள். ஆனால் அவர் ஒரு கொடுமைக்காரர், மகத்தான பலமுள்ள மனிதன். அவர் வாள் பயிலும் கலையில் தன்னுடைய சொந்த மகனையே கொன்று போட்டவர். எனவே அவர் ஒரு மிக வல்லமையுள்ள பொல்லாத மனிதனாய் இருந்தார். தகப்பனாருக்கும் அவருக்கும் இடையே அங்கே ஒரு பெரிய வாள் சண்டையே நடந்தது. என்னுடைய தகப்பனார் அவரை ஏறக்குறைய கொன்றுவிட்டார். ஆகையினால் இவர் கென்டகியை விட்டு ஓடிப்போய் ஆற்றைக்கடந்து இந்தியானாவுக்கு வர வேண்டியிருந்தது. 55 அந்த சமயத்தில், கென்டகி லூயிவில்லில் வசித்துக் கொண்டிருந்த ஒரு சகோதரன் அவருக்கு இருந்தார். அவர் கென்டகி லூயிவில்லிலுள்ள மர பல்வண்ணப்பட்டை பட்டரையில் அவருடைய மூத்த சகோதரனைத் தேடி அங்கே வந்தார். பதினேழு பிள்ளைகளில் தகப்பனார்தான் பையன்களில் கடைசியானவர். எனவே அவருடைய மூத்த சகோதரனைத் தேடி அங்கே வந்தார். ஏறக்குறைய ஒரு வருடம் அவர் அப்பொழுது அங்கே போய் இருந்தார். அவரால் திரும்பி வரமுடியவில்லை. ஏனென்றால் சட்டம் அவரை தேடிக் கொண்டிருந்தது. பின்னர் வேறொரு பெயரில் கையெழுத்திட்ட அவருடைய கடிதத்திலிருந்து அவரைக் குறித்து கேள்விப்பட்டோம். அவரிடத்திலிருந்து வந்த கடிதம் மூலம் செய்தியை அவள் உணர்ந்து கொள்வாள் என்றும், ஆனால் அது எப்படி இருக்கும் என்று அவர் அம்மாவிடம் கூறியிருந்தார். 56 பின்னர் எனக்கு நினைவிருக்கிறது. ஒரு நாள் ஊற்று (இந்த சிறிய அறை) வீட்டிற்குப் பின்னால் இருந்தது. அந்த நேரத்தில் எனக்கும் என் அடுத்த சகோதரனுக்கும் பதினொரு மாதங்கள் வித்தியாசம்தான் இருந்தது. அவனோ இன்னமும் நகர்ந்து கொண்டிருந்தான். என்னுடைய கரத்தில் ஒரு பெரிய கல்லை வைத்திருந்தேன். இந்தக் கல்லை அந்த சேற்றுக்குள் எவ்வளவு, வேகமாக என்னால் எரிய முடியும் என்று காண்பிக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். அங்கே ஊற்று தரைக்கு வெளியே வந்து ஓடி தரையை சேற்று நிலமாக ஆக்கியிருந்தது. அங்கு ஒரு பறவையின் சத்தம் கேட்டது. அது உயரே மரத்தின் மேல் பாடிக்கொண்டிருந்தது, நான் உயரே அந்தப் பறவையை நோக்கிப் பார்த்தேன். அது பறந்து போயிற்று. அப்படி அது சென்றபோது ஒரு சத்தம் என்னிடத்தில் பேசினது. 57 இப்பொழுது என்னால் அதை சிந்திக்கமுடியாதென்றும், அதை ஞாபகம் வைத்திருக்க முடியாது என்றும் நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் வானங்களுக்கும், பூமிக்கும் அங்கே இருக்கின்ற எல்லாவற்றிற்கும் நியாயாதிபதியாயிருக்கிற தேவனாகிய கர்த்தர், நான் கூறிக்கொண்டிருக்கிறது உண்மை என்பதை அறிந்திருக்கிறார். 58 அந்த பறவை, அது பறந்து போனபோது புதரில் பிடிப்பட்ட ஒரு காற்றைப் போன்று அந்த பறவை உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து ஒரு சத்தம் வந்தது. அது, “நியூஆல்பனி என்ற பட்டணத்திற்கு அருகில் நீங்கள் ஜீவிப்பீர்கள்” என்று கூறினது. எனக்கு மூன்று வயதானது முதல் இந்த நேரம் வரைக்குமாக இந்தியானா, நியூஆல்பனியிலிருந்து மூன்று மைல்களுக்குள்ளாகத் தான் நான் வசித்து வருகிறேன். 59 நான் போய் அதைப்பற்றி என்னுடைய தாயாரிடம் கூறினேன். நான் வெறுமனே கனவு கண்டு கொண்டிருந்தேன் அல்லது வேறு ஏதோ காரியமாயிருக்கும் என்று அவள் நினைத்துக்கொண்டாள். 60 பின்னர் நாங்கள் இந்தியானாவுக்கு மாறிப்போனோம். தகப்பனார் ஒரு ஐஸ்வரியவானான ஒரு மனிதனிடத்தில் திரு.வேத்தன் என்பவரிடத்தில் வேலைக்குச் சென்றார். வேத்தன் வடிசாலை அவருக்கு சொந்தமாயிருந்தது. அவர் பெருவாரியான பங்குகளை உடையவராய் இருந்தார். அவர் ஒரு கோடீஸ்வரராயும் லூயிவில்லில் துணை தலைவராகவும், மற்றும் தளகட்டு பந்தாட்டம் (Base Ball) முதலியவற்றிலும் துணை தலைவராயிருந்தார். பின்னர் நாங்கள் அதற்கு அருகாமையில் வசித்து வந்தோம். தகப்பனார் ஒரு ஏழ்மையான மனிதனாய் இருந்தார். இருந்தாலும் அவரால் அவருடைய குடியில்லாமல் இருக்கமுடியவில்லை. எனவே அவர்—அவர் சாரயத்தை காய்ச்சி வடித்து தயார்படுத்தப்போனார். 61 அப்பொழுது அது என்மேல் ஒரு தாங்கமுடியாத துயரத்தை உண்டுபண்ணியது. ஏனென்றால் நான் தான் பிள்ளைகளில் பெரியவனாயிருந்தேன். மேலும் அவர்கள் இந்த தொழிற்சாலையில் சாரயத்தை தயாரித்துக் கொண்டிருக்கும்பொழுது அதிக சூடுண்டாகாதபடிக்கு அதின் கருவிகளுக்கு நிறைய தண்ணீர் கொண்டுவந்து நான் ஊற்ற வேண்டியதாயிருந்தது. அதன் பிறகு அவர் விற்க துவங்கினார். பின்னர் அவர் அப்படிப்பட்டதான வேலையை இரண்டு அல்லது மூன்று இடங்களில் துவங்கினார். இப்பொழுது, அந்த பகுதியயைத்தான் நான் கூறவிரும்பவில்லை. ஆனால் இது உண்மையாயிருக்கிறது. 62 எனக்கு நினைவிருக்கிறது, ஒரு நாள் தானிய களஞ்சியத்திலிருந்து வீட்டை நோக்கி அழுதுகொண்டே வந்தேன். ஏனென்றால் அந்த இடத்திற்குப் பின்னாக ஒரு குளம் இருந்தது…அங்கே அவர்கள் வழக்கமாக பனிக்கட்டியை வெட்டுவார்கள். உங்களில் அநேகருக்கு அது ஞாபகம் இருக்கும். அவர்கள் வழக்கமாக பனிக்கட்டி வெட்டும்பொழுது அதில் மரத்தூளைப் போடுவார்கள். அந்த விதமாகத்தான் வேத்தன் அவர்கள் அந்த தேசத்தில் பனிக்கட்டியை வைத்திருப்பார். தகப்பனார் அவருக்கு ஒரு உந்துவண்டி ஓட்டுனராக, தனிப்பட்ட உந்துவண்டி ஓட்டுநராக இருந்தார். அந்த நேரத்தில் இந்த குளம் மீன்களால் நிறைந்திருந்தது. அவர்கள் பனிக்கட்டியை அறுத்து உள்ளே கொண்டு வந்து அதை மரத்தூளில் போடுவார்கள். பின்னர் கோடை காலத்தில் அந்த பனிக்கட்டி உருகும்போது அது அப்படியே அடியில் செல்லும். அப்பொழுது அது ஒருவிதமாக சுத்தமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அது பெரிய ஒரு பனி ஆறு போன்றே காணப்படும். அப்பொழுதே அவர்களால் அதை உபயோகிக்க முடிந்தது. குடிப்பதற்கல்ல. ஆனால் தண்ணீரை குளிர்ச்சியாய் வைத்துக் கொள்ளவே அவர்களுடைய வாளிகளை, அவர்களுடைய பால் முதலானவைகளை சுற்றி அதை வைக்கலாம். 63 பின்னாலுள்ள இந்த விசைக்குழாயிலிருந்து நான் ஒரு நாள் தண்ணீரை சுமந்து கொண்டு வந்தேன். அது ஏறக்குறைய நகர வட்டார தூரத்திற்குள் இருந்தது. அதைக் கொண்டுவராதவர்களைப் பார்த்து நான் சத்தமிட்டுக்கொண்டிருந்தேன். ஏனென்றால் நான் பள்ளியிலிருந்து வந்தேன். மற்ற பையன்கள் எல்லாம் மீன்பிடிக்க குளத்திற்குப் போய்விட்டார்கள். நானும் அப்படியே மீன் பிடிக்க விரும்பினேன். எனவே என்னைத் தவிர மற்ற எல்லோரும் மீன்பிடிக்கப் போனார்கள். ஆனால் நானோ இந்த சாராயத்தை காய்ச்சி வடித்திறக்குவதற்கு தண்ணீர் கொண்டு போக வேண்டியவனாயிருந்தேன். நிச்சயமாக அது மது விலக்காய் இருந்தபடியால் என்னுடைய வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டியதாய் இருந்தது. நான்…அது அத்தகைய ஒரு துன்பமாயிருந்தது. எனக்கு நினைவிருக்கிறது. என்னுடைய ஊன்றி நடக்கும் பாதங்களோடு நான் வந்து கொண்டிருந்தேன். என்னுடைய பெருவிரலை சோள நாரினால் தூசி அதின் மேல் படியாதபடிக்கு சுற்றிக் கட்டியிருந்தேன். நீங்கள் எப்பொழுதாவது அதைச் செய்திருக்கிறீர்களா? ஒரு சோள நாரை எடுத்து இந்தவிதமாக உங்கள் பெருவிரலைச் சுற்றிக் கட்டுங்கள். அப்பொழுது அது அப்படியே உங்கள் பெருவிரலை ஏறக்குறைய ஒரு ஆமை தலைபோன்று மேல் நோக்கி துருத்திக் கொண்டு நிற்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். பெருவிரலிலுள்ள அந்த சோள நாரினால் சுற்றுப் பட்டிருக்க நான் சென்ற இடத்திலெல்லாம் என்னை நீங்கள் அடையாளம் கண்டுகொள்ள முடியும். நான் அங்கே அதில் தட்டுத்தடுமாறி நடப்பேன். உங்களுக்குத்தான் தெரியுமே. எனக்கு அணிந்து கொள்ள காலணிகளே இல்லாதிருந்தது. எனவே நாங்கள் பாதரட்சைகள் அணிவதில்லை. சில சமயங்களில் பாதி குளிர்காலத்திற்கும் காலணிகளே இருக்காது. அப்படியே எங்களுக்கு இருக்குமானால், அது யாராவது எங்களுக்கு கொடுத்ததாக, நாங்கள் அதை தேடி எடுக்கவேண்டியதாய் இருக்கும். மேலும் ஏதாவது அறநிலையம் எங்களுக்கு கொடுக்கும் ஆடைகளையே அணிவோம். 64 நான் இந்த மரத்தின் கீழ் நின்றேன். நான் கத்திக்கொண்டே அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தேன். (அது செப்டம்பர் மாதமாக இருந்தது) ஏனென்றால் நான் மீன் பிடிக்கப்போக விரும்பினேன். அரை காலன், அப்படியே சுமார் அந்த உயரமுள்ள, சிறிய வெல்லப்பாகு வாளிகளில் பல தொட்டிகளுக்கு தண்ணீரை நான் நிரப்ப வேண்டிவனாயிருந்தேன். ஏனென்றால் நான் சுமார் ஏழு வயது நிரம்பிய சிறு பையனாயிருந்தேன். நான் அவைகளை ஒரு பெரிய தொட்டியில் வார்த்து, பின்னர் திரும்பிப்போய் இன்னும் இரண்டு வாளிகளில் தண்ணீரை விசைக்குழாய் மூலம் அடித்துக் கொண்டு வந்து கொட்ட வேண்டும். எங்களுக்கு இருந்த தண்ணீர் அது தான். அந்த இரவு அவர்கள் சோள விஸ்கியை இந்த மனிதனும் என் தகப்பனும் சேர்ந்து உயரே வீட்டில் தயாரிப்பதாக இருந்தார்கள். 65 நான் அழுது கொண்டிருந்தேன். சடுதியாக ஏதோ காரியம் ஒரு சுழற்காற்றைப் போன்ற ஒரு சத்தத்தை உண்டாக்குகிறதை நான் கேட்டேன். இதைப் போன்று ஒன்று, இப்பொழுது அது அதிக சத்தமாக அல்ல என்று நம்புகிறேன் “ஊஷ்ஷ்ஷ் ஊஷ்ஷ்ஷ்” என்று அதைப் போன்ற அப்படிப்பட்ட ஒரு சத்தம். அது மிகவும் அமைதியாக இருந்தது. நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். ஒரு சிறிய சுழற்காற்று என்ன என்று உங்களுக்கு தெரியும். நீங்கள் அதை ஒரு சிறிய புயல்காற்று என்று அழைப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். வருடத்தின் இலையுதிர் காலத்தின்போது சோள வயலில் இலைகள் முதலானவைகளை அவர்கள் பொறுக்குவார்கள். அவைகளுக்கு அப்பொழுதுதான் இலைகள் துளிர்க்கத் துவங்கும். என்னுடைய வீட்டிற்கும், களத்திற்கும் இடையே சுமார் பாதி தூரத்தில் இருந்த ஒரு மகத்தான வெள்ளையான நெட்டிலிங்க மரத்தின் கீழ் நின்றேன். அப்பொழுது நான் அந்த சத்தத்தைக் கேட்டேன். நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். இந்த அறைக்குள் இருப்பதுபோன்று அவ்வளவு அமைதியாக இருந்தது. ஒரு இலை கூட ஆடாமல் அல்லது ஒன்றுமே அசைவில்லாமல் இருந்தது. நான் “அந்த சத்தமானது எங்கிருந்து வந்து கொண்டிருக்கிறது?” என்று யோசித்துப் பார்த்தேன். எங்கோ தூரத்திலிருந்துதான் வரவேண்டும் என நான் நினைத்தேன். அப்பொழுது நான் ஒரு சிறுபையனாயிருந்தேன். மேலும் அது இன்னும் அதிக அதிக சத்தமாய் கேட்டது. 66 நான் இளைப்பாறிக் கொண்டிருந்தேன். பின்னர் வாளிகளை எடுத்துக் கொண்டு, சிலமுறைகள் கத்திவிட்டு சந்தின் வழியாய் நடக்கத் துவங்கினேன். அங்கிருந்து ஒரு சில அடிகள் எடுத்து வைத்து கடந்தேன். அதுவோ அந்த பெரிய மரத்தின் கிளைகளின் அடியிலிருந்து வந்தது. ஓ, என்னே! அது சுழலும் சத்தத்தை உண்டாக்கியது. நான் பார்ப்பதற்காக திரும்பினேன். சுமார் அந்த மரத்தின் பாதி தூரத்திலிருந்து இன்னொரு சுழற்காற்று வந்தது. அது அந்த மரத்தை பிடித்துக் கொண்டு அப்படியே சுழற்றி சுழற்றி அடித்து அந்த கிளைகளை அசைத்தது. சரி, நான் அதைக் குறித்து ஒன்றுமே வினோதமாய் நினைக்கவில்லை. ஏனென்றால் அது வருடத்தின் இலையுதிர் காலமாயிருந்தது. இலையுதிர் காலத்தில், அந்த சுழல் காற்றுகள் உண்டாகும். நாங்கள் அதை சுழல் காற்றுகள் என்றே அழைப்போம். அவைகள் அப்படியே தூசியை வாரிக்கொள்ளும். நீங்கள் வனாந்திரத்தில் அதைப் போன்று பார்த்திருப்பீர்கள். அதே காரியம். எனவே நான் கவனித்துப் பார்த்தேன். ஆனால் அது விட்டபாடில்லை. வழக்கமாக அது ஒருநொடிதான் வீசும். பின்னர் போவிடும். ஆனால் இதுவோ அங்கே இரண்டு அல்லது அதற்கு அதிகமான நிமிடங்களாக இருந்தது. 67 நான் தொடர்ந்து சந்தின் வழியாய் நடக்கலானேன். அதை மீண்டுமாக பார்க்கும்படி அப்படியே திரும்பிப் பார்த்தேன். நான் அப்படி செய்தபோது என்னுடைய சத்தத்தைப் போன்றே அவ்வளவு தெளிவாக ஒரு மனித சத்தமானது, “நீ ஒருபோதும் குடிக்காதே, புகைக்காதே அல்லது எந்த விதத்திலும் உன்னுடைய சரீரத்தை கறைப்படுத்தாதே. உனக்கு வயதாகும்பொழுது நீ செய்யவேண்டிய ஒரு ஒரு ஊழியம் உனக்கு இருக்கும்” என்றுரைத்தது. ஏன், அது மரித்துப்போகும் அளவுக்கு என்னை பயமுறுத்தினது. ஒரு சிறுபையன் எந்தவிதமாய் உணர்ந்திருப்பான் என்று உங்களால் யூகிக்க முடியும் நான் அந்த வாளிகளை அங்கேயே போட்டுவிட்டு, என்னால் போக முடிந்த அளவு வேகமாக என்னுடைய வீட்டை நோக்கி, என்னுடைய உரத்த குரலில் அலறிக்கொண்டே சென்றேன். 68 அங்கே நச்சுப்பாம்புகள் அந்த தேசத்தில் இருந்தன. பாம்புகள், அவைகள் மிகுந்த விஷமுள்ளவைகள். வருகிற வழியில் நான் நச்சுப்பாம்பு ஒன்றை மிதித்து விட்டேன் என்று என்னுடைய தாயாரை நினைத்துக்கொண்டு எனக்கு எதிராக ஓடி வந்தாள். நான் அலறிக்கொண்டு அவளுடைய கரங்களை பற்றிக் கொண்டு அவளை கட்டிப்பிடித்துக்கொண்டு அவளை முத்தமிட்டேன். அவளோ, “காரியம் என்ன? உன்னை பாம்பு கடித்துவிட்டதா? என்று கேட்டாள்.” என்னை முழுமையாக கவனித்தாள். நான், “இல்லை அம்மா! அங்கே இருக்கின்ற அந்த மரத்தில் ஒரு மனிதன் இருக்கிறான்” என்றேன். 69 அதற்கு அவள், “ஓ பில்லி, பில்லி! இங்கே வருகிறாயா?” என்று கூறினாள். அதன்பின் அவள், “நீ அங்கே நின்று தூங்கினாயா?” என்று கேட்டாள். 70 நான், “இல்லையே அம்மணி! அந்த மரத்தில் அங்கே ஒரு மனிதன் இருக்கிறான். அவன் என்னிடம் குடிக்கக்கூடாது, புகைக்கக் கூடாது என்று கூறினான்” என்றேன். 71 அவர், “விஸ்கி முதலானவைகளை குடிக்கக்கூடாது” என்றும் கூறினார். நான் அப்பொழுது இன்னும் ஒரு நிலவொளி எனும் பெயருடைய மதுவினை தயாரிக்க தண்ணீரை சுமந்து சென்று கொண்டிருந்தேன். அவர், “நீ ஒரு போதும் குடிக்கக்கூடாது அல்லது எந்த விதத்திலும் உன்னுடைய சரீரத்தை கறைப்படுத்திக் கொள்ளாதே” என்றார். அது துன்மார்க்கமானது என்று உங்களுக்குத் தெரியும், என்னுடைய குழந்தைப் பருவம் முதற்கொண்டே…வாலிபப்பருவத்தில் ஒரு ஸ்திரீயோடிருந்து தவறிழைத்ததே கிடையாது. நான் நன்கு அறிந்தமட்டில் அப்படிப்பட்ட காரியத்தில் ஒரு முறை கூட நான் குற்றவாளியாயிருந்ததில்லை. அந்த காரியங்களில் கர்த்தர் எனக்கு உதவி செய்தார். நான் தொடர்ந்து பேசுகையில் நீங்கள் அதை கண்டறிவீர்கள். ஆக அப்பொழுது, “குடிக்காதே, புகைக்காதே அல்லது உன்னுடைய சரீரத்தை கறைப்படுத்திக்கொள்ளாதே. ஏனென்றால் உனக்கு வயதாகும்பொழுது நீ செய்ய வேண்டிய ஒரு ஊழியம் அங்கே உனக்கு இருக்கும்” என்று அந்த சத்தம் உரைத்தது. 72 நான் அதை என் தாயாரிடம் கூறினேன். அவள் வெறுமனே என்னைப் பார்த்து சிரித்தாள். நான் அப்படியே இசிப்பு நோய்க்கோளாறுக்குள்ளானவனானேன் என்று எண்ணி அவள் வைத்தியரை வரவழைத்தாள். வைத்தியர் வந்து அவனுக்கு நரம்புத்தளர்ச்சி அவ்வளவுதான் என்று கூறிவிட்டார். எனவே அவள் என்னை படுக்கையில் படுக்க வைத்தாள். அந்நாள் முதற் கொண்டு இதுவரையிலும் அந்த மரத்தண்டை நான் திரும்பவும் சென்றதேயில்லை. நான் பயந்து போயிருந்தேன். நான் தோட்டத்தின் அந்தப் பக்கமாக சென்றேன். ஏனென்றால் அந்த மரத்தின் மேல் மனிதன் இருந்துகொண்டு, அவர் என்னிடத்தில் பேசிக்கொண்டிருந்தார் என்றும், அவர் மிக கனத்த குரலில் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார் என்றும் நான் எண்ணிக் கொண்டேன். 73 பின்னர், ஒரு சமயம் சுமார் ஒரு மாதம் கழித்து, முன் முற்றத்தில் என்னுடைய சிறிய தம்பிகளோடு நான் கோலி விளையாடிக்கொண்டிருந்தேன். சடுதியாக ஒரு வினோதமான உணர்வு என் மேல் உண்டானது. அப்பொழுது நான் விளையாடுவதை நிறுத்திவிட்டு ஒரு மரத்தின் பக்கமாய்ப்போய் உட்கார்ந்தேன். நாங்கள் ஓஹையோ நதியிலிருந்த கரையின்மேல் இருந்தோம். அப்பொழுது நான் ஜெபர்சன்வில்லை நோக்கியவாறு பார்த்தேன். அப்பொழுது ஒரு பாலம் அந்த ஆற்றின் மேல் இக்கரையிலிருந்து அக்கரைக்கு எழுப்பப்படுவதைக் கண்டேன். (நான் அவர்களை எண்ணினேன்) அப்பொழுது பதினாறு பேர்கள் அங்கேயிருந்து விழுந்து அந்த பாலத்தில் தங்கள் ஜீவனை இழந்துபோனதை நான் கண்டேன். நான் உடனே உள்ளே வேகமாக ஓடி என் தயாரிடம் கூறினேன். அவளோ நான் தூங்கியிருப்பேன் என்று நினைத்தாள். ஆனால் அவர்கள் அதை மனதில் வைத்திருந்தார்கள். அதிலிருந்து இருபத்திரெண்டு வருடங்கள் கழித்து, இப்பொழுதுள்ள இந்த நகராட்சி பாலம் கட்டப்பட்டது. (உங்களில் அநேகர் அங்கே அதைக் கடந்து செல்லும்போது) அந்த பாலத்தை கடந்தே செல்கிறீர்கள். அந்த நதியைக் கடக்கும் அதே இடத்திலேயே அவர்கள் இந்த பாலத்தை கட்டினபோது பதினாறுபேர்கள் தங்கள் ஜீவனை இழந்தனர். 74 அது பரிபூரண உண்மையாயிருக்க ஒருபோதும் தவறினதேயில்லை. இங்கே இந்த அரங்கத்தில் நீங்கள் காண்கின்ற விதமாகவே அது எல்லா நேரங்களிலும் இருந்து வருகிறது. 75 இப்பொழுது நான் நரம்புத்தளர்ச்சியுள்ளவனாய் இருந்தேன் என்று அவர்கள் நினைத்தார்கள். நான் ஒரு நரம்புத்தளர்ச்சியுள்ள நபராய் இருக்கிறேன். அது உண்மை. நீங்கள் எப்பொழுதாவது கவனித்திருப்பீர்களேயானால், ஆவிக்குரிய பிரகாரமாக இருக்கிற ஜனங்கள் நரம்புத்தளர்ச்சியுள்ளவர்களாகவே இருக்கிறார்கள். 76 புலவர்களையும், தீர்க்கதரிசிகளையும் நோக்கிப் பாருங்கள். வில்லியம் கூப்பர் (Willaim Cowper) அவர்களைக் கவனியுங்கள். “இம்மானுவேலின் இரத்தத்தால் நிறைந்த ஊற்றுண்டே” என்ற பெயர் பெற்ற பாடலை எழுதியவர். நீங்கள் எப்போதாவது…உங்களுக்கு அந்த பாடல் தெரியும். சமீபத்தில் நான் அவருடைய கல்லறையண்டை நின்றேன். சகோதரன் ஜூலியஸ் என்று நான் நினைக்கிறேன். எனக்குத் தெரியாது. இல்லை…ஆம், அது சரிதான். அவர் எங்களோடு அந்த கல்லறையண்டையில் இருந்தார். அவர் அந்த பாடலை எழுதிய பிறகு தெய்வீக ஆவியின் ஏவுதலானது அவரை விட்டுப் போயிற்று. எனவே அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு ஆற்றைத்தேடி கண்டுபிடிக்க முயற்சித்தார். பாருங்கள், ஆவியானது அவரை விட்டுப் போயிருந்தது. புலவர்கள், நூலாசிரியர்களைப் போன்ற ஜனங்களை…இல்லை, நான் தீர்க்கதரிசிகளை குறிப்பிடுகிறேன். 77 எலியாவை நோக்கிப் பாருங்கள். அவன் மலையின் மேல் நின்றபொழுது, பரலோகத்திலிருந்து அக்கினியை வரவழைத்தான். பரலோகத்திலிருந்து மழையை வரவழைத்தான். அதன் பிறகு ஆவி அவனை விட்டுச் சென்றபொழுது, அவன் ஒரு ஸ்திரீயின் பயமுறுத்தலுக்காக ஓடினான். தேவன் அவனை கண்டுபிடித்து, நாற்பது நாட்களுக்குப் பிறகு ஒரு குகையிலிருந்து அவனை திரும்ப இழுத்தார். 78 யோனாவை நோக்கிப் பாருங்கள். நினிவேயில் அவன் பிரசங்கித்தபோது, கர்த்தர் அவனை போதுமான ஆவியின் ஏவுதலினால் அபிஷேகம் பண்ணியிருந்தார். பரிசுத்த லூயிஸைப் போன்றதொரு பட்டணமே இரட்டுடுத்தி, மனந்திரும்பும்வரை அபிஷேகித்திருந்தார். பின்னர் அந்த ஆவி அவனை விட்டுச் சென்றதும், அவனுக்கு என்ன நேர்ந்தது? அந்த ஆவியானது அவனை விட்டுச் சென்ற பிறகு, மலையின் உச்சியில் தன்னுடைய ஜீவனை எடுத்துக் கொள்ளும்படியாய் அவன் தேவனிடத்தில் ஜெபித்துக் கொண்டிருந்ததை நாம் கண்டோம். நீங்கள் பாருங்கள். அது ஆவியின் ஏவுதலாக இருக்கிறது. இந்த காரியங்கள் உங்களுக்கு சம்பவிக்கும்பொழுது, அது—அது உங்களுக்கு ஏதோ காரியத்தை செய்கிறது. 79 அதன் பிறகு நான் வளர்ந்து வந்தது எனக்கு நினைவிருக்கிறது. நான் ஒரு வாலிப மனிதனானேன். (நான் அதை சீக்கிரத்தில் முடிக்கத்தக்கதாக நான் இதை துரிதமாக கூறுகிறேன்) நான் ஒரு வாலிப மனிதனாகி எல்லா வாலிப மனிதர்களைப் போன்றும் எனக்கும் கருத்துகள் உண்டானது. நான்…பள்ளிக்கு போகையில், நான் அந்த சிறிய பெண்களைக் கண்டேன். உங்களுக்குத் தெரியும். நான் உண்மையாகவே நாணமுள்ளவனாக இருந்தேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். முடிவிலே நான்—நான் எனக்கு ஒரு சிறிய பெண் சிநேகிதியைப் பெற்றேன். ஏறக்குறைய பதினைந்து வயதுள்ள எல்லா பையன்களைப் போன்றும் நான் இருந்தேன் என்று யூகிக்கிறேன். எனவே, ஓ, அவள் அழகாய் இருந்தாள். என்னே! ஒரு புறாவைப் போன்ற கண்கள் அவளுக்கு இருந்தது. முத்துக்கள் போன்ற பற்களை உடையவனாய் அவள் இருந்தாள். அன்னத்தைப் போன்ற ஒரு கழுத்தை உடையவளாய், அவள்—அவள் உண்மையாகவே அழகாயிருந்தாள். 80 இன்னொரு சிறிய பையன், அவன்…நாங்கள் நண்பர்களாயிருந்தோம். எனவே அவன் தன் தகப்பனாருடைய T மாதிரியான பண்டைய போர்ட் காரைக் கொண்டு வந்தபோது நாங்கள் எங்கள் பெண்களோடே ஒரு தேதியை குறித்துக் கொண்டோம். நாங்கள் அவர்களை காரில் ஏற்றிக்கொண்டு ஒரு சவாரி கொண்டு போவதாக இருந்தோம். நாங்கள் இரண்டு காலன்கள் பெட்ரோல் வாங்குவதற்கு போதுமான் பணத்தை வைத்திருந்தோம். நாங்கள் அந்த காரை இயக்க பின் சக்கரங்களை கருவியினால் உயர்த்த வேண்டியிருந்தது. உங்களுக்கு அது ஞாபகம் இருக்கிறதா அல்லது இல்லையா என்பது எனக்குத் தெரியாது. அதை இயக்குவதற்கு உங்களுக்குத் தெரியும். ஆனால் நாங்களோ—நாங்களோ நல்லபடியாய் போய்க்கொண்டே இருந்தோம். 81 நான் என்னுடைய ஜோபியில் சில சில்லரை காசுகளைத்தான் உடையவனாய் இருந்தேன். நாங்கள் ஒரு சிறு இடத்திலே நிறுத்தினோம்…நீங்கள் ஒரு காசுக்கு ஒரு பதப்படுத்தப்பட்ட பன்றிறைச்சி இடையீட்டு ரொட்டிதான் வாங்க முடியும். எனவே ஓ, நான் போதிய பணமுடையவனாய் இருந்தேன். என்னால் அவர்களுக்காக நான்கு வாங்கித்தர முடிந்தது. புரிகின்றதா? பின்னர் நாங்கள் அந்த இடையீட்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு கோக் என்ற குளிர் பானத்தைக் குடித்தோம். நான் புட்டிகளை திருப்பிக் கொடுக்கும்படியாய் எடுக்க துவங்கினேன். பின்னர் நான் திரும்பி வந்த்போது நான் வியப்படையும்படிக்கு (ஸ்திரீகள் கிருபையிலிருந்து அல்லது பெண்மைத்துவத்திலிருந்து சரியாக விழுந்து போக துவங்குகின்ற நேரமாய் அது இருந்தது) என்னுடைய சிறிய புறா ஒரு சிகரெட்டை புகைத்துக் கொண்டிருந்தது. 82 புகைபிடிக்கும் ஒரு ஸ்திரீயின் மேல் எனக்கு எப்பொழுதுமே ஒரு அபிப்பிராயத்தை உடையவனாய் நான் இருந்து வருகிறேன். காலங்கள் கடந்தும் நான் அதிலிருந்து கொஞ்சமும் மாற்றிக் கொள்ளவில்லை. அது உண்மையே. அவள் செய்யக்கூடிய மிகவும் இழிவான காரியம் அதுவே. அது முற்றிலும் சரியே. நான்—நான் நினைத்தேன், நான்…இதற்காக சிகரெட் நிறுவனம் என் மேல் குற்றம் பிடிக்கலாம். ஆனால் நான் உங்களுக்கு சொல்லுகிறேன். அது வெறுமனே பிசாசின் ஒரு பகட்டு வித்தையாய் இருக்கிறது. இந்த தேசம் பெற்றிருக்கிற மிகப்பெரிய கொலைகாரனும், அழிப்பவனுமாய் அது இருக்கிறது. என்னுடைய மகன் ஒரு சிகரெட் புகைப்பவனாய் இருப்பதைக் காட்டிலும் ஒரு குடிகாரனாய் இருப்பதே சற்று மேலாக இருக்கும். அதுதான் உண்மை. என் மனைவியை ஒரு சிகரெட்டுடன் பார்ப்பதைக் காட்டிலும் அவள் குடித்து தரையிலே கிடப்பதைப் பார்ப்பதே எனக்கு சற்று மேலானதாக இருக்கும். அப்படித்தான்… 83 இப்பொழுது, என்னோடு இருக்கின்றதான இந்த தேவனுடைய ஆவியானது, அது தேவனுடைய ஆவியாய் இருக்குமானால், (நீங்கள் ஒருக்கால் கேள்வி கேட்கலாம்), நீங்கள் அங்கே சேரும் பொழுது சிகரெட் புகைப்பவர்களாகிய உங்களுக்கு ஒரு ஒடுங்கிய வாய்ப்புதான் உண்டு. ஏனென்றால்…எல்லா நேரங்களிலும் நீங்கள் அதை மேடையில் கவனியுங்கள். எப்படியாய் அவர் அதை கண்டனம் செய்கிறார். அது ஒரு பயங்கரமான காரியமாயிருக்கிறது. அதை விட்டு விலகியிருங்கள். ஸ்திரீகளே நீங்கள் அதில் குற்றவாளிகளாய் இருந்தால், தயவுசெய்து, கிறிஸ்துவின் நாமத்தினால் அதிலிருந்து விலகி இருங்கள். அது உங்களை உடைக்கிறது. அது உங்களை கொன்றுபோடும். அது முழுவதும் சரக்கேற்றி நிரப்பப்பட்டுள்ள வாகனங்களைப் போன்ற அளவு கொண்ட ஒரு புற்று நோயாக இருக்கிறது. 84 வைத்தியர்கள் உங்களை எச்சரிக்க முயற்சிக்கிறார்கள். அப்படியானால் அந்த சரக்கை அவர்கள் எப்படி உங்களுக்கு விற்கலாம். நீங்கள் மருந்து கடைக்குச் சென்று “வாங்க…நான் ஐம்பது சென்டுகள் பெறுமானமுள்ள புற்றுநோயை வாங்க விரும்புகிறேன்” என்று கூறுங்கள். ஏன், அவர்கள் வந்து உங்களை காவலில் அடைத்து விடுவார்கள். ஆனால் நீங்கள் ஐம்பது சென்ட் பெறுமானமுள்ள சிகரெட்டுகளை வாங்கினால், நீங்கள் அதே காரியத்தைத்தான் வாங்குகிறீர்கள். வைத்தியர்கள் அவ்விதமாகத்தான் அதை கூறுகிறார்கள். ஓ, இது பண பைத்தியம் கொண்ட தேசம். அது மிகவும் மோசமானதாக இருக்கிறது. அது ஒரு கொலைக்காரன், அது நிரூபிக்கப்பட்டாயிற்று. 85 நான் அந்த சிறிய அழகிய பெண் மிகவும் சாமர்த்தியமாக நடக்கின்றதையும், இந்த சிகரெட் அவளுடைய கரத்தில் இருக்கின்றதையும் கண்டபொழுது, அது என்னைக் கொல்லுவது போன்று இருந்தது. ஏனென்றால் நான் அவளை உண்மையாகவே நேசித்தேன் என்று நினைத்தேன். நான், “இருக்கட்டும்…” என்று எண்ணினேன். 86 இப்பொழுது, “நான் பெண்ணை வெறுப்பவன் என்று அழைக்கப்படுகிறேன்.” அது உங்களுக்கு தெரியும், ஏனென்றால் நான் எப்பொழுதும் ஒருவிதமாக பெண்களுக்கு எதிராக இருக்கின்றவன். ஆனால் உங்களுக்கு எதிராய் அல்ல சகோதரிகளே. நவீன ஸ்திரீகள் நடந்து கொள்ளுகிற விதத்திற்கு எதிராகத்தான் நான் இருக்கிறேன். இது உண்மை. நல்ல ஸ்திரீகள் அப்படியே தொடர்ந்து நல்லவிதமாய் நடந்து கொண்டு போக வேண்டும். 87 என்னால் நினைவு கூரமுடிகிறது, என்னுடைய தகப்பனார் அங்கே அதை இன்னும் நடத்திக் கொண்டிருப்பதினால் நான் போய் தண்ணீர் முதலான காரியங்களை அங்கே கொண்டு போக வேண்டியவனாயிருந்தேன். பதினேழு, பதினெட்டு வயதை கடக்காக வாலிபப் பெண்கள், என்னைப் போன்ற வயதுள்ள மனிதனோடு குடித்துக் கொண்டிருக்கிறதைப் பாருங்கள். அவர்களை அவர்கள் வீட்டுக்கு கொண்டுபோய் அவர்களுடைய புருஷன்களுக்கு இரவு ஆகாரம் சமைக்க அவர்களுக்கு கருப்பு காபி கொடுத்து தெளிய வைக்கப்பட வேண்டியவர்களாயிருக்கிறார்கள். ஓ, அதைப்போன்று ஏதோ ஒரு காரியம். நான், “நான்…” என்றேன். ஆனால் இது என்னுடைய கருத்துரையாக இருக்கிறது. “அவர்களைக் கொல்ல அவர்கள் ஒரு நல்ல சுத்தமான தோட்டாவுக்கும் தகுதியானவர்கள் அல்ல.” அது சரியே. நான் ஸ்திரீகளை வெறுத்தேன். அது உண்மை. இன்னும் சரியாக அதே காரியத்தை சிந்தியாமலிருக்க ஒவ்வொரு அசைவையும் நான் கவனிக்க வேண்டியவனாய் இருக்கிறேன். 88 எனவே, இப்பொழுது ஒரு நல்ல ஸ்திரீ ஒரு மனிதனின் கிரீடத்தில் ஒரு இரத்தினம் போலிருக்கிறாள். அவள் கெளரவிக்கப்பட வேண்டும். அவள்…என் தாயார் ஒரு ஸ்திரீயாயிருக்கிறாள். என் மனைவி ஒரு ஸ்திரீயாயிருக்கிறாள். அவர்கள் அழகானவர்கள். நான் உயர்வாக மதிக்கிற ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ சகோதரிகளை உடையவனாய் இருக்கிறேன். தேவன் அவர்களை என்னவாக உண்டாக்கினாரோ, அதாவது ஒரு தாயின் தன்மையாயும், ஒரு அருமையான ராணியாயும் உண்டாக்கினதை அவர்கள் மதிக்கமுடிந்தால் நலமாயிருக்குமே! அதெல்லாம் நல்லதுதான். தேவன் ஒரு மனிதனுக்கு கொடுக்ககூடிய மேலான காரியங்களில் அவள் ஒன்றாய் இருக்கிறாள். ஒரு மனைவி இரட்சிப்புக்கு அடுத்தப்படியாக, ஒரு மனைவியே மேலான காரியமாக இருக்கிறாள். அவள் ஒரு நல்ல மனைவியாக இருந்தால் நலமாயிருக்கும். ஆனால் அவள் அப்படியாய் இல்லையென்றால், சாலமோன், “ஒரு நல்ல ஸ்திரீயானவன் ஒரு மனிதனுடைய கிரீடத்திலுள்ள ஒரு இரத்தினமாய் இருக்கிறாள். ஆனால் ஒரு துர்நடத்தையுள்ள ஒருவளோ அல்லது நல்லவளாயிராத ஒருவளோ அவனுடைய இரத்தத்தில் தண்ணீராய் இருக்கிறாள்” என்றான். அது உண்மையே. அது சம்பவிக்கக்கூடிய மோசமான காரியமாய் இருக்கிறது. எனவே ஒரு நல்ல ஸ்திரீயானவள்…நீங்கள் நல்ல மனைவியைப் பெற்றிருந்தால், சகோதரனே, நீ உயர்வான மரியாதையை அவளுக்கு செலுத்தத்தான் வேண்டும். அது உண்மையே நீங்கள் அதை செய்தாக வேண்டும். ஒரு உண்மையான ஸ்திரீ, பிள்ளைகளே, நீங்கள் ஒரு உண்மையான தாயாரை, வீட்டிலேயே தரிகத்திருக்கிறவளைப் பெற்றிருந்தால், அவள் உங்களைக் குறித்து அக்கறை எடுக்க முயற்சிப்பவளாயிருந்தால், உங்களுடைய துணிகளை சுத்தமாக வைத்து, உங்களை பள்ளிக்கு அனுப்பி, இயேசுவைக் குறித்து உபதேசிப்பவளாய் இருந்தால் அந்த இனிமையான வயதான தாயாரை உன்னிடம் உள்ள எல்லாவற்றோடும் கனப்படுத்த வேண்டும். அந்த ஸ்திரீக்கு மரியாதை கொடுக்க வேண்டும். ஆம், ஐயா, ஏனென்றால் அவள் ஒரு உண்மையான தாயாக இருக்கிறாள். 89 கென்டகி மலைகளிலுள்ள எழுத்தறிவின்மையைக் குறித்து அவர்கள் பேசுகிறார்கள். நீங்கள் அதை இங்கே இந்த ஓட்டுப் போட்ட காரியத்தில் காண்கிறீர்கள். அந்த வயதான தாய்மார்களில் சிலரால் இங்கே ஹாலிவுட்டுக்கு வந்து இந்த நவீன தாய்மார்களுக்கு உங்களுடைய பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று போதிக்க முடியும். அவளுடைய பிள்ளை ஒரு இரவு தலைமுடி கலைந்து, குளிப்பு கால்சட்டை இவைகளோடு வரட்டும். நீங்கள் அதை என்னவென்று அழைப்பீர்கள். அவர்கள் அவர்களுடைய முகத்தில் பூசிக்கொள்ளும் அழகு சாதனங்கள் அவளுடைய ஆடையெல்லாம் ஒருபக்கமாக கசக்கப்பட்டதாய், இரவு முழுவதும் வெளியே இருந்து குடித்துவிட்டு ஓர் இரவு அவள் வந்தால், சகோதரனே, அவளை கனமான மர உச்சியின் கிளைகளில் ஒன்றை ஒடித்தெடுத்து அடித்தால் அதற்குப் பின்னர் அவள் ஒருபோதும் வெளியே போகவேமாட்டாள். நான் உங்களுக்கு சொல்லுகிறேன். அவள் அதைச் செய்வாள். அவ்விதமான எண்ணம் உங்களுக்கு சற்று இருந்தால் கூட உங்களுக்கு இங்கே ஒரு மேலான ஹாலிவுட்டும், இது ஒரு மேலான தேசமுமாயிருக்கும். அது சரியே. அது உண்மையே. “நவீனமாக இருக்க சற்றே முயற்சிப்பது” என்னவெனில், அது—அதுவே பிசாசின் தந்திரங்களில் ஒன்றாக இருக்கிறது. 90 இப்பொழுது இந்த சிறிய பெண், நான் அவளை நோக்கிப் பார்தபொழுது, அப்படியே என் இதயத்தில் இரத்தம் கசிந்தது போலிருந்தது. நான் “பாவம், இந்த சிறுபெண்” என்று நான் எண்ணினேன். அவள், “ஓ, பில்லி உனக்கு ஒரு சிகரெட் வேண்டுமா?” என்று கேட்டள். அதற்கு நான், “வேண்டாம். பெருமாட்டியே, நான் புகைப்பதில்லை” என்றேன். 91 அவள் அதற்கு, “நடனம் ஆடுவதில்லை என்றும் நீ கூறினாயே” என்றாள். அவர்கள் ஒரு நடனத்திற்குப் போக வேண்டும் என்றிருந்தார்கள். நான் அதை செய்ய விரும்பவில்லை. எனவே அவர்கள் அங்கே ஒரு நடனம் இருக்கிறது என்று கூறினர். அவர்கள் அதைக் காட்டத்திமர தோட்டங்கள் என்று அழைப்பார்கள். அப்பொழுது நான், “இல்லை, நான் நடனம் ஆடுவதில்லை” என்றேன். 92 அவள், “நீ நடனம் ஆடுவதில்லை. நீ புகைப்பதில்லை. நீ குடிப்பதில்லை, உன்னால் எப்படி உல்லாசமாக இருக்க முடியும்?” என்று கேட்டாள். 93 அதற்கு நான், “மீன் பிடிக்க விரும்புகிறேன். நான் வேட்டையாட விரும்புகிறேன்” என்றேன். அது அவளுக்கு ஆர்வமாய் இல்லை. எனவே அவள், “இந்த சிகரெட்டை எடுத்துக்கொள்” என்றாள். நான், “முடியாது, பெருமாட்டி, உனக்கு நன்றி, நான் புகைப்பதில்லை” என்றேன். 94 நான் மோட்டாரின் தீத்தாங்கியின் மேல் நின்று கொண்டிருந்தேன். அவர்கள் பழைய ஃபோர்ட் மோட்டார் வாகனங்களில் சுற்றிலும் ஒரு விளிம்பை வைத்திருந்தார்கள். அது உங்களுக்கு நினைவிருக்குமே. நான் மோட்டாரின் அந்த தீத்தாங்கியின்மேல் நின்று கொண்டிருந்தேன். பின்னர் நானும் அவளுமாய் பின் இருக்கையில் உட்கார்ந்து கொண்டிருந்தோம். அப்பொழுது அவள், “நீ ஒரு சிகரெட் கூட புகைக்க மாட்டேன் என்று கூறுகிறாயே, உன்னைக் காட்டிலும் பெண்களாகிய நாங்கள் அதிக தைரியமுடையவர்களாய் இருக்கிறோம்” என்றாள். அதற்கு நான், “இல்லை, பெருமாட்டியே, நான் அதைச் செய்ய வேண்டும் என்று எண்ணம் எனக்கு இல்லை” என்றேன். 95 அதற்கு அவள், “ஏன், நீ பெரிதும் பெண்மைத்தன்மை கொண்டவனாயிருக்கிறாயே!” என்றாள். ஓ என்னே! நான் மிக மோசமான பில்லியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆகையால் நான்—நான் நிச்சயமாகவே பெண்மைத் தன்மையையும் கொண்டவனாயிருக்க விரும்பவில்லை. பாருங்கள், நான் குத்துச்சண்டையிட்டு பரிசுபெறும் ஒருவனாக இருக்க விரும்பினேன். அதுதான் என்னுடைய வாழ்க்கையின் எண்ணமாக இருந்தது. எனவே நான்…“பெண்மைத்தன்மையா? பெண்மைத்தன்மையா?” என்றேன். 96 என்னால் அதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனவே நான், “அதை என்னிடம் கொடு என்றேன்.” என் கரத்தை நீட்டி, “நான் பெண்மைத்தன்மை வாய்ந்தவனா அல்லது இல்லையா என்பதை நான் உனக்கு காட்டுகிறேன்” என்று கூறினேன். பின்னர் நான் அந்த சிகரெட்டை வெளியே எடுத்து தீக்குச்சியால் கொளுத்த துவங்கினேன். இப்பொழுது நீங்கள் நீ யார்…என்று எனக்கு தெரியும். இப்பொழுது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதற்கு நான் பொறுப்பாளியல்ல, நான் உங்களுக்கு கூறுகின்ற உண்மைக்கு மட்டுமே நான் பொறுப்பாளியாயிருக்கிறேன். நான் இந்த வேதத்தை எடுக்க எவ்வளவு தீர்மானமாயிருக்கிறேனோ அவ்வளவு தீர்மானமாய் நான் அந்த சிகரெட்டை புகைப்பதற்காக கொளுத்த துவங்கினபோது பாருங்கள், ஏதோ காரியம், “உஷ்ஷ்ஷ்ஷ்!” என்று சென்றதை நான் கேட்டேன். நான் மீண்டும் முயற்சித்தேன். என்னால் அதை என் வாய்க்கு கொண்டுபோக முடியவில்லை. நான் அழ ஆரம்பித்து அந்த காரியத்தை தூக்கி கீழே எறிந்தேன். அவர்கள் என்னைப் பார்த்து சிரித்தனர். நான் வீட்டிற்கு நடந்து சென்றேன். வயல் வெளியினூடாக நடந்து சென்று அங்கே உட்கார்ந்து அழுது கொண்டிருந்தேன். அது ஒரு பயங்கரமான ஜீவியமாயிருந்தது. 97 எனக்கு நினைவிருக்கிறது. ஒரு நாள் என் தகப்பனார் பையன்களோடு ஆற்றுக்கு போய்க்கொண்டிருந்தார். என்னுடைய சகோதரனும், நானும் ஒரு படகை எடுத்துக் கொண்டு அந்த ஆற்றில் மேலும் கீழுமாய் சென்று விஸ்கியை புட்டிக்குள்ளே ஊற்றும்படியாக புட்டிகளை தேடவேண்டியதாய் இருந்தது. ஆற்றோரமான அவைகளை நாங்கள் பொறுக்குவதற்காக சென்றோம். பன்னிரெண்டு புட்டிகளுக்கு எங்களுக்கு ஒரு நிக்கல் பணம் கிடைத்தது. தகப்பனார் என்னோடிருந்தார். அவர் அவைகளில் தட்டையாயுள்ள ஒரு புட்டியை கண்டெடுத்தார்…அவைகளில் பாதி இருபது அவுன்சு அளவுகொண்ட புட்டிகள் என்று நான் நினைக்கிறேன். அங்கே ஒரு மரம் கீழே விழுந்து கிடந்தது. தகப்பனாரும் அவரோடு இந்த மனிதன் திரு.டிரான்புஷ் அவர்களும் இருந்தார். அவரிடம் ஒரு அருமையான படகு இருந்தது. அவரிடம் நட்பு ஆதரவை கண்டடைய விரும்பினேன். அதற்கு நல்லதொரு சுக்கான் இருந்தது. என்னுடையதிற்கோ சுக்கானே இல்லாதிருந்தது. பழைய பலகைகளிலான துடுப்புகள் எங்களிடத்தில் இருந்தன. அவர் மட்டும் என்னை அந்தப் படகை உபயோகிக்கச் சொன்னால் நலமாயிருக்குமே என்று நினைத்தேன். அவர் தகப்பனாருக்கு பற்றவைத்து சாராயத்தை காய்ச்சி வடித்திறக்கும் வாலைகளை உண்டாக்கித்தந்தார். அவர்கள் அவர்களுடைய கால்களை அந்த மரத்தினூடாக வைத்துக் கொண்டனர். தகப்பனார் அவருடைய பின் ஜோபியிலிருந்து ஒரு தட்டையான சிறிய விஸ்கி புட்டியை வெளியே எடுத்து, அதை அவரிடத்தில் கொடுத்தார். பின்னர் அவர் கொஞ்சம் குடித்துவிட்டு, புட்டியை என் தகப்பனிடம் திருப்பிக் கொடுத்தார். பின்னர் அவர் கொஞ்சம் குடித்தார். அவர் அதை ஒரு மரத்திலிருந்து வெளியே வந்த ஒரு சிறிய கிளையின் மேல் வைத்தார். திரு.டிரான்புஷ் அதை எடுத்துக்கொண்டு, “பில்லி இதோ இருக்கிறது” என்றார். நான், “நான் குடிப்பதில்லை, உமக்கு நன்றி” என்றேன். 98 அதற்கு அவர், “ஒரு பிரான்ஹாம் குடிப்பதில்லையா?” என்று கேட்டார். ஏறக்குறைய எல்லோருமே தங்களுடைய பழக்க வழக்கங்களிலேயேதான் மரித்தார்கள். மேலும் அவர், “ஓரு பிரான்ஹாமாக இருந்து குடிப்பதில்லையா?” என்று கேட்டார். நான், “இல்லை ஐயா” என்றேன். அப்பொழுது என் தகப்பனார், “இல்லை” என்று கூறி, “நான் ஒரு பெண்மைத்தன்மை கொண்டவனை பெற்றுவிட்டேன்” என்றார். 99 என் தகப்பனார் என்னை ஒரு பெண்மைத்தன்மை வாய்ந்தவன் என்று கூறுகிறாரே! எனவே நான், “அந்த புட்டியை என்னிடம் கொடுங்கள்” என்றேன். அதன் மேலிருந்த அந்த மூடியை எடுத்துவிட்டு அதை குடிக்க தீர்மானித்தேன். அதை, நான் அந்த மூடியை கழற்றும்படி திருப்பத் துவங்கினபோது, “உஷுஷ்” என்ற சத்தம் கேட்டது. நான் அந்த புட்டியை திருப்பிக் கொடுத்து விட்டு வயல்வெளிக்குள் வேகமாக ஓடிப்போய், என்னால் பொறுக்க முடியாமல் அழுதுகொண்டிருந்தேன். ஏதோ காரியம் என்னை அதை செய்ய அனுமதிக்கவில்லை. புரிகின்றதா? நான் நல்லவன் என்று என்னை கூறிக்கொள்ள முடியாது. நான அதை செய்ய தீர்மானித்திருந்தேன். ஆனால் அது, தேவனின் கிருபை, ஆச்சரியமான கிருபை அந்த காரியங்களை செய்வதிலிருந்து என்னை காத்துக்கொண்டது. நானே, நானே அவைகளைச் செய்ய விரும்பினேன். ஆனால் அவரோ என்னை அதை செய்யும்படி அனுமதிக்கவில்லை. 100 கொஞ்சம் கழித்து நான் சுமார் இருபத்திரெண்டு வயதுடையவனாய் இருந்தபொழுது, நான் ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் அருமையானவளாயிருந்தாள். அவள் ஜெர்மானிய லூத்தரன் சபைக்கு போகின்ற ஒரு பெண்ணாய் இருந்தாள். அவளுடைய பெயர் புரும்பா (Brumbach), அது புரும்பா (Brumbaugh) என்ற பெயரிலிருந்து வருகிறது. அவள் ஒரு அருமையான பெண்ணாயிருந்தாள். அவள் புகைக்கவில்லை, குடிக்கவில்லை, அவள் நடனம் ஆடவில்லை. அவளிடம் எந்த காரியமும் கிடையாது. ஒரு அருமையான பெண். நான் கொஞ்சம் காலமாக அவளுடன் சென்றேன்…அப்பொழுது எனக்கு சுமார் இருபத்திரெண்டு வயதிருக்கும். நான் ஒரு பழைய ஃபோர்ட் காரை வாங்குமளவிற்கு போதுமான அளவு பணத்தை உடையவனாயிருந்தேன். நாங்கள் நாள் குறித்துக் கொண்டு இருவருமாய் சேர்ந்து போவோம். எனவே அந்த சமயம் லூத்தரன் சபை ஏதும் அங்கு அருகாமையில் இல்லாதபடியால் அவர்கள் அங்கே ஹாவர்ட் பார்க் எனும் இடத்திலிருந்து வந்திருந்தார்கள். 101 எனவே மிஷனெரி பாப்டிஸ்ட் சபையில் என்னை நியமித்த ஒரு ஊழியக்காரர் வேத பண்டிதர் ராய் டேவிஸ் (Roy Davis) என்பவர் அங்கே இருந்தார். என்னைக் குறித்தும் பண்டிதர் ராய் டேவிஸைக் குறித்தும் சகோ. உப்ஷ அவர்களிடம் பேசி எங்களிடம் அவரை அனுப்பி வைத்தவள் சகோதரி உப்ஷாத் தான். எனவே அவர் பிரசங்கித்துக் கொண்டிருந்தார், அது முதல் பாப்டிஸ்டு சபையாய் இல்லை…அது தான் முதல் பாப்டிஸ்ட் சபையென்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் அது ஜெபர்சன்வில்லிலுள்ள மிஷன்…மிஷனெரி பாப்டிஸ்டு சபையென்று அழைக்கப்பட்டது. அவர் அந்த நேரத்தில் அந்த இடத்தில் பிரசங்கித்துக் கொண்டிருந்தார், நாங்கள் இரவு நேரத்தில் சபைக்கு போய் திரும்பி வருவோம். நான் ஒருபோதும் சபையை சேர்ந்து கொள்ளவில்லை. ஆனால் நான் அவளோடு சேர்ந்து போக விரும்பினேன். ஏனென்றால் முக்கிய எண்ணம் அவளோடு சேர்ந்து போக வேண்டும் என்பதே. நான் உத்தமமாய் இருக்க விரும்புகிறேன். 102 ஆக அப்பொழுது அவளோடு போய்க்கொண்டிருந்தேன், ஒரு நாள் நான்…அவள் ஒரு அருமையான குடும்பத்திலிருந்து வந்தவள். நான், “உங்களுக்கு தெரியும், உங்களுக்கு தெரியும், நான் அந்த பெண்ணின் நேரத்தை எடுக்க வேண்டியதில்லை. அது சரியானதல்ல. ஏனென்றால் அவள் ஒரு அருமையான பெண். நானோ ஏழை, நான்…” என்று சிந்திக்கத் துவங்கினேன். என்னுடைய தகப்பனார் சுகவீனமானார், நான்—நான்…அப்பேர்ப்பட்ட ஒரு பெண்ணோடு ஜீவியம் செய்திட எனக்கு எந்தவிதத்திலும் வழியே இல்லை. அவள் ஒரு அருமையான வீட்டில், தரையில் ஜமக்காளம் விரிக்கப்பட்ட வீட்டில் வசித்து வந்தாள். 103 நான் முதலாவதாக கண்ட ஜமக்காளம் எனக்கு நினைவிருக்கிறது. அது என்ன என்றே எனக்கு தெரியாது. நான் அதின் சுற்றுவாக்கில் நடந்தேன். என்னுடைய ஜீவியத்திலேயே நான் கண்ட அழகான காரியமாய் அது இருந்தது. “அப்பேர்ப்பட்டதான ஏதோ ஒரு காரியத்தை அவர்கள் எப்படி தரையின் மேல் போடமுடியும்?” அப்பேர்ப்பட்டதான ஒரு ஜமக்காளத்தை நான் முதன் முறையாக கண்டது அது தான். இவைகள் ஒன்றை…அவை “பாய்விரிகம்பளங்கள்” என்று அழைக்கப்படுகின்றன என்று நான் நினைக்கிறேன். ஒருக்கால் நான் அதை தவறாக கூறலாம். ஏதோ ஒரு விதமான ஒரு “பிரம்பினால்” பின்னப்பட்டதுபோன்று அல்லது ஏதோ காரியம் ஒன்றாக சேர்த்து பின்னப்பட்டது போன்று தரையின்மேல் கிடந்தது. அழகான பச்சையும், சிவப்பு நிறமும் கொண்ட பெரிய வரிசைகளைக் கொண்டதாய் அதன் நடுவில் பின்னப்பட்டு இருந்தது, உங்களுக்கு தெரியுமே. அது ஒரு அழகான பொருளாயிருந்தது. 104 ஆக அது எனக்கு நினைவிருக்கிறது. நான்—நான் என் மனதில் ஒரு தீர்மானம் எடுத்திருந்தேன். ஒன்று அவள் என்னை மணந்து கொள்ளும்படி கேட்க வேண்டும் அல்லது நான் அவளை விட்டு விலக, எந்த நல்ல மனிதனாவது அவளை மணந்து கொள்ளட்டும் எனபதேயாகும். அவளுக்கு நன்மையாயுள்ள யாரையாவது, அவளுக்கு ஒரு வாழ்க்கை கொடுக்கக்கூடியவனும், அவளிடம் தயவாய் இருக்கக்கூடியவனுமான் யாரையாவது மணந்து கொள்ளட்டுமே. என்னால் அவளிடம் தயவாய் இருக்கமுடியும். ஆனால் என்னால்—என்னால் ஒரு மணி நேரத்திற்கு இருபது செண்டுகள்தானே சம்பாதிக்க முடிந்தது. நான்…எனவே என்னால் அவளோடு ஜீவனம் பண்ண முடியாது. குடும்பம் எல்லாவற்றையும் நாங்கள் கவனிக்க வேண்டியவர்களாய் இருந்தோம். தகப்பனாரோ சுகவீனமாகிவிட்டார். எனவே குடும்பத்தினர் எல்லோரையும் நான் கவனித்துக்கொள்ள வேண்டியவனாயிருந்தேன். எனவே எனக்கு அது ஒரு மிக கடினமான நேரகமாக இருந்து கொண்டிருந்தது. 105 எனவே நான், “என்னால் செய்யக்கூடிய ஒரே ஒரு காரியம், நான்—நான்…அவள்…நான்—நான் திரும்பி வரமாட்டேன் என்று அவளிடம் கூறுவதே சரி என்று நினைத்தேன், ஏனென்றால் அவளுடைய வாழ்க்கையை பாழாக்க விரும்பவில்லை. மேலும் அவள் என்னோடு சுற்றுவதினால் நான் அவளைக்குறித்து அதிகமாக சிந்தித்தேன்.” பின்னர், நான், “யாராவது அவளைப் பற்றிக் கொண்டு, அவளை மணந்து கொண்டு ஒரு அருமையான குடும்பம் நடத்தினால் நலமாயிருக்குமே என்றும, ஒரு வேளை நான் அவளை அடையமுடியவில்லையென்றாலும் அவள் சந்தோஷமாய் இருப்பாள் என்று நான் அறிந்துகொள்ளமுடியுமே” என்று எண்ணினேன். 106 எனவே நான், “ஆனால் என்னால்—என்னால்—என்னால் அவளை விட்டுவிட முடியாதே” என்றும் எண்ணினேன். நான்—நான் ஒரு பயங்கரமான நிலையிலிருந்தேன். நாளுக்கு நாள் அதைக் குறித்தே நான் சிந்திப்பேன். எனவேஎன்னை மணந்து கொள் என்று அவளிடம் நான் கேட்க அதிக கூச்சமுள்ளவனாக இருந்தேன். ஆனாலும், “என்னை மணந்துகொள் என்று நான் அவளை கேட்கப்போகிறேன்” என்ற ஒவ்வொரு இரவும் நான் என்னுடைய சிந்தனையில் தீர்மானம் செய்வேன். நான், ஊ, அது என்ன, வண்ணத்துப்பூச்சிகள் அல்லது ஏதோ காரியத்தை நீங்கள்…உங்களில் பெற்றுள்ளீர்களா? அங்கே வெளியே இருக்கும் சகோதரர்கள் எல்லோரும் ஒருக்கால் அதே அனுபவத்தைப் பெற்றிருக்கலாம். ஒரு உண்மையான, வினோதமான உணர்வோடு, என்னுடைய முகம் கொந்தளிப்பாகிவிடும். எனக்கு—எனக்கு தெரியாது. ஏனெனில் என்னால் அவளை கேட்கமுடியவில்லை. 107 எனவே, எப்படி நான் அவளை திருமணம் செய்து கொண்டேன் என்று நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள் என்று நான் யூகிக்கிறேன். எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா? நான் ஒரு கடிதத்தை அவளுக்கு எழுதி அவளை கேட்டிருந்தேன். அதில், “அருமை குமாரி” என்றல்ல, அதைக்காட்டிலும் அன்பின் சார்பில் அதிகம் சார்ந்திருந்தது. (உங்களுக்கு தெரியுமே) அது வெறுமனே ஒரு ஒப்புதல் அல்ல. அது…என்னால் முடிந்த அளவு மேலான விதத்தில் அதை நான்—நான் எழுதினேன். 108 அவளுடைய தாயாரைக் குறித்து எனக்கு சிறிது பயமாயிருந்தது. அவளுடைய தாயார்…அவள் ஒருவிதமான கரடுமுரடானவள். அவளுடைய தகப்பனார் ஒரு பெருந்தன்மையான, வயதான ஹாலந்து நாட்டுக்காரர். ஒரு ஒருமையான, வயதான மனிதர். இருப்புப்பாதை இரயில் வண்டி பணியாளர்களின் சகோதரத்துவத்தில் அவர் ஒரு அமைப்பாளராக இருந்தார். அந்த நாட்களில் ஒரு மாதத்திற்கு சுமார் ஐநூறு டாலர்கள் சம்பாதிப்பார். ஒரு மணி நேரத்திற்கு இருபது சென்டுகள் சம்பாதிக்கும் நான் அவருடைய மகளை மணப்பதா? ஹு! அது ஒருக்காலும் கிரியை செய்யாது என்பதும் எனக்கு தெரியும். அவருடைய தாயார்…இப்பொழுது, ஒரு அருமையான அம்மாளாக இருந்தாள். அவளோ உயர்வகையான வகுப்பினங்கள் ஒன்றைச் சேர்ந்தவளாய் இருந்தாள். ஆச்சாரங்களை கைக்கொண்டு பழகவிரும்பாத முகபாவனையுடையவளைப் போன்று இருந்தாள். உங்களுக்குத் தெரியும். எனவே எந்தவிதத்திலும் எனக்கு அவள் பெரிதும் பிரயோஜனமுள்ளவளாக இல்லை. நானோ அந்த காலத்து ஒரு சாதாரண பழைய நாட்டுப்புற பையனாய் இருந்தேன். சற்று மேல்தரமான பையனோடு ஹோப் போக வேண்டும் என்று அவள் எண்ணினாள். அவள் நினைப்பது சரியே என்று நான்—நான்—நான் கருதினேன். ஆகையால்…ஆனால் நான்—நான் அதை அப்பொழுது நினைக்கவில்லை. 109 எனவே நான், “எப்படி என்று எனக்கு தெரியவில்லை. அவளுடைய தகப்பனாரை நான்—நான் கேட்கமுடியாது. அவளுடைய தாயாரை நிச்சயமாய் நான்—நான் கேட்கப்போவதில்லை. எனவே நான் முதாலவது அவளை கேட்டாக வேண்டும்” என்று நினைத்தேன். எனவே நான் எனக்காக ஒரு கடிதம் எழுதினேன். அன்று காலையில் வேலைக்குப் போகும் வழியில், நான் அதை தபால் பெட்டியில் போட்டேன். தபால்…புதன் இரவு நாங்கள் சபைக்கு போய்க்கொண்டிருந்தோம். அதுவோ திங்கள் காலையாயிருந்தது. ஞாயிறு முழுவதுமாய் நான் அவளை மணக்க விரும்புகிறேன் என்பதை அவளிடம் கூற முயற்சித்தேன். ஆனால் வெளிப்படுத்துவதற்கு எனக்கு போதிய தைரியம் வரவில்லை. 110 எனவே அப்பொழுது நான் அதை தபால் பெட்டியில் போட்டேன். அந்த கடிதம் அவளுடைய தாயாரின் கரத்தில் சிக்கிக்கொண்டால் என்னவாகும் என்று அந்த நாள் முழுவதுமே வேலையில் இருந்தபோது சிந்திக்க நேர்ந்தது. ஓ, என்னே! அது அவள் கரத்தில் சிக்கினால், நான் பாழாக்கப்பட்டுப்போவேன் என்று நான் அப்பொழுது அறிந்தேன். ஏனென்றால் அவள் என்னைக் குறித்து அதிகம் கவலைப்படவில்லை. எனக்கு அப்படியே வியர்த்துக் கொட்டியது. 111 அந்த புதன்கிழமை நான் வந்தபொழுது, ஓ என்னே, “நான் எப்படி அங்கே போகப்போகிறேன் என்று நான் நினைத்தேன். அவளுடைய தாயாருடைய கரத்தில் அந்த கடிதம் சிக்கியிருந்தால் அவள் உண்மையாகவே என்னை அதிகம் பாடுபட வைப்பாள். எனவே அவள் அதை பெற்றுகொண்டாள் என்று நான் நம்புகிறேன்” என்று நான் எண்ணினேன். எனினும் நான் அதை “ஹோப்” என்ற பெயருக்குத்தான் அனுப்பியுள்ளேன். ஹோப் அதுதான் அவளுடைய பெயர். எனவே, “நான் இங்கே வெறுமனே ஹோப் என்று எழுதலாமே” என்றேன். எனவே…அது ஒருவேளை அவளுடைய கரத்தில் சிக்கியிருக்காது என்று நான் நினைத்தேன். 112 ஆக வெளியே நின்று கொண்டு அவளை வெளியே அழைக்கும்படி எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவியினால் சத்தத்தை எழுப்புவது மேலானது என்று நான் அறிந்து கொண்டேன். ஓ, என்னே! வீட்டிற்கு நடந்துபோய் கதவை தட்டி அந்தப் பெண்ணை கேட்க போதுமான தைரியமில்லாத ஒரு பையனுக்கு, அவளோடு கூட இருக்க எந்த விதத்திலும் அவனுக்கு எந்த வேலையும் இல்லை. அது முற்றிலும் உண்மையே. அது மிகவும் அற்பமாக இருக்கிறதே. அது தரக்குறைவானது. 113 எனவே நான் என்னுடைய பழைய ஃபோர்ட் காரை நிறுத்தினேன், உங்களுக்கு தெரியும். நான் அது முழுவதையுமே பளபளப்பாய் துடைத்திருந்தேன். எனவே நான் போய் கதவை தட்டினேன். இரக்கம், அவளுடைய தாயார் கதவண்டை வந்தார்கள். எனக்கோ என்னுடைய சுவாசத்தையே சுவாசிக்கவே முடியாதபடி கடினமாயிருந்தது. நான், “எப்படி—எப்படி—நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் திருமதி புரும்பா?” என்று கேட்டேன். ஆம். 114 பின்னர் அவள், “வில்லியம் நீ எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டாள். நான், “ஓ, வில்லியமா!” என்று எண்ணினேன். அவள், “உள்ளே வருகிறாயா?” என்று கேட்டாள். 115 அதற்கு நான், “உங்களுக்கு நன்றி” என்றேன். நான் கதவைத்தாண்டி உள்ளே சென்றேன். நான் “ஹோப் ஆயத்தமாய் இருக்கிறாளா?” என்று கேட்டேன். 116 சரியாக அப்பொழுது ஹோப் வீட்டிற்குள் குதித்துக் கொண்டே வந்தாள். சுமார் பதினாறு வயது பெண். அவள், “ஹீ பில்லி” என்றாள். 117 நான், “ஹீ, ஹோப்” என்றேன். நான், “நீ சபைக்கு போக ஆயத்தமாயிருக்கிறாயா?” என்று கேட்டேன். அவள், “வெறுமனே ஒரு நிமிடம் பொறும்” என்றாள். 118 நான், “ஓ, என்னே! அது அவளிடம் கிடைக்கவேயில்லை. அவள அதை பெற்றுக்கொள்ளவே இல்லை. நல்லது. நல்லது, நல்லது. ஹோப்பிடம் அது ஒருபோதும் கிடைக்கவில்லை. எனவே பரவாயில்லை. இல்லையென்றால் அவள் மீண்டும் அதை என் பெயருக்கு எழுதி இருப்பாளே” என்று நினைத்தேன். எனவே நான் நல்லுணர்வை அடைந்தேன். 119 பின்னர் நான் சபையண்டை கீழே இறங்கினதும், நான், “அவள் அதைப் பெற்றிருந்தால் என்னவாயிருக்கும்” என்று யோசிக்க நேர்ந்தது. புரிகின்றதா? வேத பண்டிதர் டேவிஸ் என்ன கூறிக்கொண்டிருந்தார் என்பதை என்னால் கேட்கவே முடியவில்லை. நான் அவளை நோக்கிப் பார்த்தேன், நான், “ஒருக்கால் அவள் அதை தன்னிடமே வைத்திருந்து, நான் வெளியே சென்றவுடன், அதை அவளிடம் கேட்டால் அப்பொழுது அவள் உண்மையாகவே அதை என்னிடம் கூறப்போகிறாளோ” என்றும் எண்ணினேன். சகோதரன் டேவிஸ் என்ன கூறிக்கொண்டிருந்தார் என்று என்னால் கேட்கவே முடியவில்லை. நான், “அவளை நோக்கிப் பார்த்து, என்னே, நான் அவளை இழக்கவும் விரும்பவில்லை. ஆனால்…எனக்கு—எனக்கு…பகிரங்கமான சச்சரவு நிச்சயம் வர இருக்கிறது” என்று எண்ணினேன். 120 எனவே சபை முடிந்ததும் நாங்கள் சேர்ந்தாற்போல் வீட்டிற்கு போக வீதியில் நடந்து போய்க்கொண்டிருந்தோம். ஆக நாங்கள் எங்கள் பழைய ஃபோர்ட் வண்டியை நோக்கி நடந்தோம். சந்திரனோ தொடர்ந்து பிரகாசித்துக் கொண்டிருந்தது. உங்களுக்கு தெரியும், நான் அவளை நோக்கிப் பார்த்தேன். அவள் அழகாய் இருந்தாள். பையனே, நான் அவளை நோக்கிப் பார்த்தேன். பின்னர் நான், “என்னே, அவளை என்னுடையவளாய் ஆக்கிக்கொள்ள எனக்கு அவ்வளவு விருப்பம். ஆனால் என்னால் அதை யூகிக்கவும் முடியவில்லையே” என்று எண்ணினேன். 121 நான் சற்றுதூரம் நடந்தது, உங்களுக்குத் தெரியுமா, மீண்டுமாய் அவளை நோக்கிப் பார்த்தேன். நான், “இன்றிரவு நீ எப்படி—எப்படி உணருகிறாய்?” என்று கேட்டேன். அவள், “ஓ, நான் நன்றாக இருக்கிறேன்” என்றாள். 122 நாங்கள் அந்த பழைய ஃபோர்ட் வண்டியை நிறுத்தி கீழே இறங்கினோம். உங்களுக்குத் தெரியுமா? பக்கவாட்டிலிருந்து சுற்றிக் கொண்டு வந்து, அப்படியே சுற்றிக்கொண்டு மூலைக்கு வந்து அவளுடைய வீட்டிற்குப் போக நடந்தோம். கதவு வரை நான் அவளோடு நடந்து சென்றேன். நான், “உங்களுக்கு தெரியும், நான் ஒருக்கால் அந்த கடிதமே அவளிடம் கிடைத்திருக்காது. எனவே நான் அதை அப்படியே மறந்துவிடுவது நல்லது. எப்படியாவது எனக்கு கிருபையான மற்றொரு வாரம் இருக்கும்” என்று எண்ணிக் கொண்டேன். எனவே ஒருவிதமான நல் உணர்வு எனக்கு உண்டானது. அவள், “பில்லி?” என்றான். நான், “என்ன?” என்றேன். அவள், “உன்னுடைய கடிதம் கிடைத்தது” என்றாள். ஓ, என்னே! நான், “உனக்கு கிடைத்துவிட்டதா?” என்று கேட்டேன். 123 அவள், “ஹீ, ஹீ” என்றாள். அவளோ தொடர்ந்து நடக்கலானாள், மற்றெந்த வார்த்தையும் கூறவில்லை. 124 அப்பொழுது நான், “பெண்ணே, ஏதாவது காரியத்தை என்னிடம் சொல். என்னை வெளியே துரத்து அல்லது நீ அதைக் குறித்து என்ன நினைக்கிறாய் என்பதை எனக்கு கூறு” என்று எண்ணினேன். நான், “நீ—நீ அதை வாசித்தாயா?” என்று கேட்டேன். அதற்கு அவள், “ஹூ, ஹூ” என்றாள். 125 என்னே, ஒரு பெண் உங்களை எப்படி இரகசியமாக வைத்திருக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியும். ஓ, நான் அதை அந்தக் கருத்தில் கூறவில்லை. நீங்கள் பாருங்கள், புரிகின்றதா? ஆனால் எப்படியிருந்தாலும் உங்களுக்குத் தெரியும், நான், “ஏன் எதையாவது நீ சொல்லக்கூடாதா?” என்று நினைத்தேன். பாருங்கள். நான் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தேன். நான், “அதை முழுவதுமாய் படித்தாயா?” என்று கேட்டேன். அவள்…[ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] “உ—ஊ” 126 ஆக நாங்கள் கதவுவரை வந்துவிட்டோம். நான், “பையனே! முன்கூடம் வரை போகாதே, ஏனென்றால் அவர்களை என்னால் தாண்டிக்கொண்டு ஓடமுடியாது. எனவே நீ இப்பொழுது என்னிடம் கூறு” என்பதுபோல் நினைத்தேன். எனவே நான் அங்கே காத்திருந்தேன். 127 அவள், “பில்லி, எனக்கு அதைச் செய்ய விருப்பம்” என்றாள். அவள், “நான் உன்னை நேசிக்கிறேன்” என்றாள். இப்பொழுது தேவன் அவளுடைய ஆத்துமாவை ஆசீர்வதிப்பாராக. அவள் மகிமையில் இருக்கிறாள். அவள், “நான் உன்னை நேசிக்கிறேன்” என்றாள். அப்பொழுது நான், “அதைக் குறித்து நம்முடைய பெற்றோர்களிடத்தில்…பெற்றோர்களிடத்தில் சொல்லியாக வேண்டுமே என்று நான் நினைக்கிறேன், நீ அப்படி நினைக்கவில்லையா?” என்றேன். 128 நான், “தேனே, கவனி நாம் ஐம்பத்துக்கு ஐம்பது என்ற கணக்கில் இதை தெரிவிக்கும்படி துவங்குவோம். எனவே நீ உன்னுடைய தாயாரிடம் இதை கூறினால், நான், நான் உன்னுடைய தகப்பனாரிடம் இதை கூறுவேன்” என்றேன். இதைத் துவங்க நான் கடினமான பாகத்தை அவளுடைய பேரில் சுமத்தினேன். அதற்கு அவள், “சரி, நீங்கள் முதலாவது தகப்பனாரிடம் கூறுங்கள்” என்றாள். நான், “சரி, ஞாயிறு இரவு நான் அவரிடம் கூறுவேன்” என்றேன். 129 ஆக ஞாயிறு இரவு வந்தது. சபையிலிருந்து அவளை வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வந்தேன். அவள் என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டே இருந்தாள். நானும் அவளை நோக்கிப் பார்த்தேன். மணி ஒன்பது முப்பதாயிருந்தது. அது நான் புறப்பட்டுப் போவதற்கான நேரமாய் இருந்தது. ஆக சார்லி மேஜையில் உட்கார்ந்து தட்டெழுத்தை அடித்துக் கொண்டிருந்தார். திருமதி புரும்பா மூலையில் உட்கார்ந்து கொண்டு ஏதோ ஒரு விதமான கொக்கி ஊசியைக் கொண்டு பின்னிக்கொண்டிருந்தாள். உங்களுக்கு தெரியுமே, ஏதாவது சாமான்களை போட்டுவைக்க பின்னி தொங்க வைப்பார்களே, அதை செய்துகொண்டு இருந்தாள். நீங்கள் அதை என்னவென்று அழைப்பீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆக அதைப்போன்று ஏதோ காரியத்தை அவள் செய்து கொண்டிருந்தாள். ஹோப்போ என்னையே நோக்கி பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் என்னிடம் கோபப்படுவாள் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவளுடைய தகப்பனாருக்கு ஜாடை காட்டினாள். நான்…ஓ, என்னே! நானோ, “அவர் முடியாது என்று கூறிவிட்டால் என்ன செய்வது” என்று நினைத்தேன். எனவே நான் கதவை நோக்கி நடக்கலானேன். அப்பொழுது, “நான் புறப்பட்டுப்போவதே மேலானது” என்றே யூகித்துக் கொண்டேன். 130 நான் கதவுவரை நடந்தேன். அவளும் கதவண்டைக்கு என்னோடு புறப்பட்டாள். அவள் எப்பொழுதுமே கதவுவரை வந்து எனக்கு “இரவு வணக்கத்தை” கூறுவாள். எனவே நான் கதவண்டை நோக்கி புறப்பட்டேன். அவள், “நீங்கள் அவரிடத்தில் கூறப்போவதில்லையா?” என்றாள். 131 நான், “ஆமாம்” என்றேன். நான், “நான் நிச்சயமாக முயற்சிக்கிறேன். ஆனால் நான் அதை எப்படி சொல்லப்போகிறேன் என்று எனக்கே—எனக்கே—எனக்கேத் தெரியவில்லை” என்று கூறினேன். 132 அவள், “நான் பின்புறமாக போனவுடன், நீர் அவரைக் கூப்பிடும்” என்றாள். எனவே அவள் திரும்பிப் போய், என்னை அங்கே நின்று கொண்டிருக்கும்படி விட்டுவிட்டாள். நான், “சார்லி” என்று கூப்பிட்டேன். அவர் சுற்றும் முற்றும் பார்த்து, “என்னையா, பில்லி” என்று கேட்டார். அதற்கு நான், “உம்மிடம் ஒரு நிமிடம் பேச முடியுமா?” என்று கேட்டேன். 133 அவர் “நிச்சயமாக” என்றார். அவர் தன்னுடைய மேஜையை விட்டு அப்படியே திரும்பினார். திருமதி புரும்பா அவரை நோக்கிப் பார்த்தார்கள். ஹோப்பை நோக்கிப் பார்த்தார்கள். என்னையும் நோக்கிப் பார்த்தாள். அப்பொழுது நான், “நீர் வெளி முற்றத்திற்கு சற்று வருவீரா?” என்று கேட்டேன். அவர், “ஆம், நான் வெளியே வருகிறேன்” என்றார். ஆக அவர் வெளிமுற்றத்திற்கு நடந்து வந்தார். நானோ, “நிச்சயமாக, இது ஒரு அழகான் இரவல்லவா?” என்றேன். அவர், “ஆம், அப்படித்தான் உள்ளது” என்றார். நான், “உண்மையாகவே மிக உஷ்ணமாய் இருக்கிறது” என்றேன். அவர், “நிச்சயமாக அப்படித்தான் இருக்கிறது” என்று கூறி என்னை நோக்கிப் பார்த்தார். 134 அப்பொழுது நான், “நான் எவ்வளவு கடினமாக வேலை செய்கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா? என்னுடைய கரங்கள் மரமரப்பாய் அவ்வளவு கடினமாகிவிட்டிருக்கின்றன” என்று கூறினேன். அப்பொழுது அவர், “பில்லி, நீ அவளை மணந்து கொள்ளலாம்” என்றார். ஓ, என்னே! “நீ, அவளை மணந்து கொள்ளலாம்” என்று கூறிவிட்டார். 135 அப்பொழுது நான், “ஓ, அது மேலானது” என்று எண்ணிக் கொண்டேன். நான், “சார்லி, நீர் அதை உண்மையாகவே கூறுகிறீரோ” என்று கேட்டேன். அவர் கூறினார்…பின்னர் நான், “சார்லி, இங்கே பாருங்கள், அவள் உம்முடைய குமாரத்தி, உம்மிடத்தில் பணம் இருக்கிறது என்று எனக்கு தெரியும்” என்றேன். 136 அவர் தன் கரத்தை நீட்டி என்னுடைய கரத்தைப் பிடித்தார். அவர், “பில், கவனி, மானிட ஜீவியத்தில் உள்ள எல்லா காரியங்களும் பணம் அல்ல” என்று கூறினார். அவர் கூறியதோ… 137 நான், “சார்லி, நான்—நான் ஒரு மணி நேரத்திற்கு இருபது சென்டுகள் மாத்திரமே சம்பாதிக்கிறேன். நான் அவளை நேசிக்கிறேன். அவள் என்னை நேசிக்கிறாள். அப்பொழுது சார்லி, நான் உமக்கு வாக்குபண்ணுகிறேன், அதாவது என்னுடைய கரத்திலிருக்கும் மரமரப்பாய் உள்ள கடினமான பாகங்களெல்லாம் தேய்ந்து போகும் அளவுக்கு நான் கஷ்டப்பட்டு வேலை செய்து அவளோடு ஜீவியம் செய்வேன். என்னால் இருக்க முடிந்த அளவிற்கு நான் அவளிடத்தில் உண்மையாய் இருப்பேன்” என்றேன். 138 அவர், “பில், நான் அதை விசுவாசிக்கிறேன்” என்றார். மேலும் அவர், “பில், கவனி, நான் உனக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்” என்றார். தொடர்ந்து, “உனக்குத் தெரியும், சந்தோஷம், முற்றிலுமாக சந்தோஷமாக இருக்க பணம் அவசியமில்லையே” என்றார். தொடர்ந்து அவர், “நீ அவளிடத்தில் நல்லவனாக இரு. நீ அப்படி இருப்பாள் என்று எனக்குத் தெரியும்” என்றார். நான், “சார்லி, உமக்கு நன்றி. நான் நிச்சயமாய் அதைச் செய்வேன்” என்றேன். 139 பின்னர் அதுவோதாயாரிடம் சொல்ல வேண்டிய அவளுடைய நேரமாய் இருந்தது. அதை அவள் எப்படி செய்தாள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். 140 எனவே நாங்கள் திருமணம் செய்தபோது, எங்களிடத்தில் ஒன்றுமேயில்லை. வீட்டி கவனித்துக்கொள்ள எங்களிடம் ஒன்றுமே இல்லை. நான் நினைக்கிறேன், நாங்கள் இரண்டு அல்லது மூன்று டாலர்கள் வைத்திருந்தோம். எனவே நாங்கள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தோம். அது எங்களுக்கு ஒரு மாதத்திற்கு நான்கு டாலர்கள் செலவாயிருந்தது. அது ஒரு சிறிய பழைய இரண்டு அறைகள் கொண்ட இடமாக இருந்தது. யாரோ எங்களுக்கு ஒரு பழைய மடக்கும் கட்டிலை கொடுத்தார்கள். யாராவது எப்பொழுதாவது ஒரு மடிக்கும் கட்டிலை பார்த்திருக்கிறீர்களா என நான் வியக்கிறேன். அவர்கள் அதை எங்களுக்கு கொடுத்தனர். நான் சியர்ஸ் அன்ட் ரோபக் (Sears and Roebuch) என்ற கடைக்குச் சென்று ஒரு மேஜையுடன் சேர்த்து நான்கு நாற்காலிகளை வாங்கினேன். உங்களுக்கு தெரியும், அது வர்ணம் தீட்டப்படாதிருந்தது. அதை நாங்கள் அந்த நேரத்தில் வாங்கினோம். நான் ஒரு பழைய சாமான் வியாபாரி (Mr.Weber) திரு.வெப்பரிடம் சென்று ஒரு சமைக்கும் செயற்கை வெப்ப அடுப்பை வாங்கினேன். நான் அதற்காக எழுபத்தைந்து சென்டுகள் கொடுத்தேன். அதற்குள்ளாக போகும்படியான தீத்தட்டுகளை ஒரு டாலருக்கு வாங்கினேன். நாங்கள் ஒரு குடும்பம் நடத்துதலை ஒழுங்கு செய்தோம். நான் நாற்காலிகளுக்கு வர்ணம் பூசும் போது மூவிலை சித்திர ஒப்பனை பாணியில் எடுத்துக் கொண்டு வர்ணம் பூசியது எனக்கு நினைவிருக்கிறது. ஓ, இருந்தாலும் நாங்கள் சந்தோஷமாய் இருந்தோம். ஆக எங்களுக்கு தேவையாய் இருந்ததெல்லாம் அவ்வளவுதான். தேவனுடைய இரக்கத்தினாலும், அவருடைய நன்மையினாலும் நாங்கள் பூமியின் மேலிருந்த சந்தோஷமான சிறிய ஜோடிகளாயிருந்தோம். 141 நான் இதை கண்டறிந்தேன். அதாவது சந்தோஷம் என்பது எவ்வளவு உலக பொருட்கள் நமக்கு சொந்தமாய் இருக்கிறது என்பதை பொருத்ததல்ல. ஆனால் உனக்கு அளிக்கப்பட்ட பாகத்தில் நீ எவ்வளவு திருப்தியாய் இருக்கிறாய் என்பதைப் பொருத்ததாய் இருக்கிறது என்பதாகும். 142 கொஞ்சம் கழித்து தேவன் கீழே இறங்கி வந்து எங்களுடைய சிறிய வீட்டை ஆசீர்வதித்தார். எங்களுக்கு ஒரு குட்டிப்பையன் இருந்தான். அவனுடைய பெயர் பில்லிபால். அவன் இப்பொழுது இங்கே இந்த ஆராதனையில் இருக்கிறான். அப்பொழுதிலிருந்து கொஞ்சம் கழித்து சுமார் பதினொரு மாதங்களுக்குப் பிறகு அவர் எங்களை மீண்டுமாய் சாரோன் ரோஜா என்றழைக்கப்பட்ட ஒரு சிறிய பெண் பிள்ளையோடு ஆசீர்வதித்தார். இந்தப் பெயர் “சாரோனின் ரோஜா” என்ற வார்த்தையில் இருந்து எடுக்கப்பட்டது. 143 நான் சிறிது பணம் சேமித்து வைத்திருந்தது எனக்கு நினைவிருக்கிறது. ஒரு நாள் நான் சிறிது ஓய்வெடுக்கப் போவதாக இருந்தேன். எனவே பா பா (Paw Paw) ஏரி என்ற இடத்திற்கு மீன் பிடிக்கும்படி போய்க் கொண்டிருந்தேன். பின்னர் நான் திரும்பி வழியில் வந்து கொண்டிருக்கையில்… 144 இந்த சமயத்தின்போது, என்னுடைய மனமாற்றத்தை நான் இங்கே விட்டுவிடுகிறேன். நான் மனமாற்றமடைந்தேன். வேத பண்டிதர் ராய் டேவிஸ் அவர்களால் மிஷனெரி பாப்டிஸ்டு சபையில் நியமனம் செய்யப்பட்டேன். இப்பொழுது ஜெபர்சன்வில்லில் நான் பிரசங்கித்துக் கொண்டிருக்கும் கூடாரத்திற்கு ஒரு ஊழியக்காரனானேன். நான் அந்த சிறிய சபைக்கு போதகனாயிருந்து கொண்டிருந்தேன். நான்… 145 சம்பளமே வாங்காமல் நான் அந்த சபைக்கு பதினேழு வருடங்கள் போதகராக இருந்து வந்தேன். ஒரு சல்லிக்காசும் ஒரு போதும் வாங்காமலிருந்தேன். எனக்கு காணிக்கை எடுப்பதில் நம்பிக்கை கிடையாது. அதில் காணிக்கைத் தட்டும்கூட இருந்ததில்லை. தசமபாகங்கள், வேலையிலிருந்து எனக்கு கிடைத்திருந்தவை முதலானவைகளைப் போட கட்டிடத்தின் பின் பாகத்தில் நான் ஒரு சிறிய பெட்டியை வைத்திருந்தேன். அதின் மேல் ஒரு அடையாளம் இருந்தது. “அதாவது மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்றிருந்தது.” அந்த விதமாகத்தான் சபையானது பணம் செலுத்தினது. நாங்கள் பத்து வருடங்கள் கடன் தொகையை செலுத்த வேண்டியவர்களாக இருந்தோம். அதை இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே செலுத்திவிட்டோம். நான் எந்தவிதமான காணிக்கையும் எடுத்ததேயில்லை. 146 அப்பொழுது என்னிடம் இருந்தது, ஓ, ஒருசில டாலர்களே நான் அவைகளை என்னுடைய விடுமுறை செலவுக்காக சேமித்து வைத்திருந்தேன். அவளும் கூட பைன்ஸ் சட்டை தொழிற்சாலையில் வேலை செய்தாள். ஒரு அழகான அருமையான பெண். அவளுடைய கல்லறை ஒருக்கால் இன்றைக்கு பனியால் மூடப்பட்டிருக்கும். ஆனால் அவள் இன்னமும் என் இருதயத்தில் இருக்கிறாள். மீன் பிடிப்பதற்கு இந்த ஏரியண்டை போவதற்கு போதுமான பணம் உண்டாயிருக்கும்படி அவள் மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்தது எனக்கு நினைவிருக்கிறது. 147 நான் ஏரியிலிருந்து திரும்பி வந்து கொண்டிருக்கையில், இந்தியானாவிலுள்ள மிஷ்வாக்கா தென்வளைவவில் வரும்பொழுது நான் ஒன்றை காணத்துவங்கினேன். கார்களின் பின்னால் “இயேசு மாத்திரம்” என்ற எழுதப்பட்ட விளம்பர அட்டைகள் ஒவ்வொரு காரிலும் தொங்கிக் கொண்டிருப்பதை நான் கவனிக்கத் துவங்கினேன். “இயேசு மாத்திரம்” என்பது வினோதமாக இருக்கிறதே என்று நான் நினைத்தேன். அந்த அடையாளங்களை நான் கவனிக்கத் துவங்கினேன். அது எங்கும் காணப்பட்டது. இருசக்கர மிதிவண்டி துவங்கி ஃபோர்ட் கார்கள், மற்றும் காடிலாக் கார்கள் இன்னும் எல்லா வண்டிகளின் மேலும் “இயேசு மாத்திரம்” என்றிருந்தது. நான் அவைகளில் சிலவற்றை பின் தொடர்ந்து சென்றேன். அவைகள் ஒரு மகத்தான பெரிய சபையண்டைக்கு வந்தன. அவர்கள் பெந்தேகோஸ்துக்களாய் இருந்தனர் என்பதை நான் கண்டறிந்தேன். 148 நான் பெந்தேகோஸ்துக்களை குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவர்கள் ஒரு தரையில் கிடந்து “அவர்களுடைய வாயில் நுரைதள்ளும் ஒரு கூட்ட பரிசுத்த உருளைகள்” என்றும், அவர்கள் இவர்களை குறித்து என்னிடம் கூறியிருந்தனர். அவர்களைக் குறித்த ஒவ்வொரு காரியத்தையும் கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே அதனோடு எதையும் செய்ய நான் விரும்பவில்லை. 149 எனவே அவர்கள் இவைகளை எல்லாம் அங்கே உள்ளே செய்து கொண்டிருக்கிறதை நான் கேட்டேன். நான், “விசுவாசத்தோடு உள்ளே செல்லலாமே” என்றே எண்ணினேன். எனவே நான் என்னுடைய பழைய ஃபோர்ட் காரை வெளியில் நிறுத்திவிட்டு உள்ளே நடந்து சென்றேன். உங்களுடைய ஜீவியத்தில் நீங்கள் எப்பொழுதுமே கேட்கின்ற எல்லா பாடல்களையுமே அவர்கள் பாடிக் கொண்டிருந்தனர். அங்கே இரண்டு மகத்தான சபைகள் இருந்தன என்பது எனக்கு தெரியவந்தது. அவைகளில் ஒன்று பி.ஏ.ஆப்.ஜெ.சி. என்றும் மற்றொன்று பி.ஏ.ஆப்.டபிள்யூ. என்றும் அழைக்கப்பட்டது. உங்களில் அநேக ஜனங்களுக்கு ஒருக்கால் அந்த பழைய ஸ்தாபனங்…நினைவிருக்கலாம். அவர்கள் இணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது அவர்கள் ஐக்கிய பெந்தெகோஸ்தே சபை என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களுடைய போதகர் சிலர் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். அவர்கள் அங்கே நின்று கொண்டிருந்தார்கள். ஓ, அவர்கள் இயேசுவைப் பற்றியும், அவர் எவ்வளவு மகத்தானவராய் இருந்தாரென்றும், ஒவ்வொரு காரியமும் எவ்வளவு மகத்தானதாய் இருந்ததென்றும், “பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக்” குறித்தும் போதித்துக் கொண்டிருந்தார்கள். நான் “அவர்கள் எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்று யோசித்துப் பார்த்தேன். 150 கொஞ்சம் நேரம் கழித்து யாரோ ஒருவர் குதித்தெழுந்து அன்னிய பாஷைகளில் பேசத் துவங்கினார். அதைப் போன்ற எதையுமே நான் என் ஜீவியத்தில் கேட்டதே கிடையாது. அங்கே சில பெண்கள் அவர்களால் முடிந்த அளவு கஷ்டத்தோடு மேலே ஓடிவந்தார்கள். பின்னர் அவர்களெல்லோருமே ஓடத்துவங்கினர். அப்பொழுது நான், “சகோதரனே, அவர்களிடத்தில் நிச்சயமாக சபை முறைமைகளே கிடையாது” என்று நினைத்தேன். அலறிக்கொண்டும், சத்தமிட்டுக்கொண்டும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தனர். எனவே நான், “இது என்ன ஒரு கூட்டமாய் இருக்கும்” என்று நினைத்தேன். ஆனால் உங்களுக்கு அதைக் குறித்து ஏதோ காரியம் தெரிந்திருக்கும். எவ்வளவு நேரம் நான் அங்கே உட்கார்ந்திருந்தேனோ அவ்வளவாய் நான் அதை விரும்பினேன். அங்கே ஏதோ காரியம் உண்மையாய் இருக்கிறது போன்று தோன்றியது. நான் அவர்களை கவனிக்கத் துவங்கினேன். அது தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது நான், “அவர்களோடு இன்னும் கொஞ்சம் பொறுமையாயிருக்கலாமே. ஏனென்றால் நான் கதவுக்கு நெருக்கமாக இருக்கிறேன். ஏதாவது காரியம் மூடத்தனமாய் நடக்கத் துவங்கினால் நான் நேராக கதவுக்கு வெளியே வந்து ஓடிவிடலாம். எனவே என்னுடைய கார் அங்கே நிறுத்தப்பட்டிருக்கிறதை, அந்த மூலையில் நிற்பதை அறிந்தவனாய் அமர்ந்திருந்ததையும்” எண்ணிப் பார்த்தேன். 151 அந்த போதகர்களில் சிலர் பேசுவதை நான் கேட்க துவங்கினேன். அவர்கள் பாண்டித்தியம் பெற்றவர்களும், மாணாக்கர்களுமாய் இருந்தனர். ஏன், நானோ, “அது அருமையாயிருக்கிறது” என்று எண்ணினேன். ஆக இரவு சாப்பாட்டிற்கான நேரம் வந்து விட்டது. “எல்லோரும் சாப்பிட வாருங்கள்” என்றும் கூறப்பட்டது. 152 ஆனால் நான், “ஒரு நிமிடம் பொறுத்துப் பார்த்தேன். நான்…வீட்டிற்கு போவதற்கு என்னிடத்தில் ஒரு டாலரும் எழுபத்தைந்து சென்டுகளும்தான் உள்ளனவே” என்று எண்ணிக் கொண்டேன். எனவே என்னிடம் பெட்ரோலுக்கு இருந்த பணமெல்லாம் அவ்வளவுதான். நான் வீட்டிற்கு திரும்ப செல்லும்படிக்கு அதை எடுத்து வைத்துவிட்டேன். நான் பழைய ஃபோர்ட் காரை வைத்திருந்தேன். அது அருமையான நல்ல பழைய ஃபோர்ட் கார். அது ஒன்றும் கெட்டுப்போனதல்ல. அதோ வெளியே இருக்கிறதே அதைப்போன்றது. வெறுமனே தேய்ந்து போனது. ஃபோர்ட் ஒரு மணிக்கு முப்பது மைல் வேகம் ஓடும் என்று நான் உண்மையாகவே நம்பியிருந்தேன். அது…ஆனால் நிச்சயமாக இந்த வழியாய் பதினைந்து அந்த வழியாய் பதினைந்து. நீங்கள் பாருங்கள், அது இரண்டையும் ஒன்றாய் சேர்த்தால் உங்களுக்கு முப்பது கிடைக்கும். எனவே…நான், “அந்த இரவு நான் வெளியே போய் விடலாம்…” என்று எண்ணினேன். நான் இரவு ஆராதனைக்காக தங்கியிருந்தேன். 153 ஓ, அவர், “எல்லா பிரசங்கிமார்களும், எந்த ஸ்தாபனத்தவர்களாயிருந்தாலும் மேடைக்கு வாருங்கள்” என்றார். நாங்கள் சுமார் இருநூறு பேர்களாய் எல்லோரும் அங்கே சென்றோம். நான் உயரே சென்றேன். எனவே அவர், “இப்பொழுது நீங்களெல்லோரும் இங்கே பிரசங்கிக்க எங்களிடம் நேரம் இல்லை” என்றார். அவர், “அப்படியே நடந்து வந்து நீங்கள் யாரென்றும், எங்கிருந்து வந்தீர்கள் என்றும் கூறிவிட்டுச் செல்லுங்கள்” என்றார். 154 என்னுடைய நேரம் வந்தது. நான், “வில்லியம் பிரான்ஹாம், பாப்டிஸ்டு, ஜெபர்சன்வில், இந்தியானா” என்று கூறிவிட்டு நடந்தேன். 155 மற்ற யாவரும் அவர்களைப் பற்றி கூற நான் கேட்டேன். அவர்களோ, “பெந்தெகோஸ்தே, பெந்தெகோஸ்தே, பெந்தெகோஸ்தே பி.ஏ.ஆப்.டபிள்யூ., பி.ஏ.ஜெ.சி., பி.ஏ.டபிள்யூ., பி…” என்றெல்லாம் கூறினர். 156 நான் நடந்து போனபோது, “நான் ஒரு அசிங்கமான வாத்து குஞ்சைப் போன்று இருப்பதாக” நானே யூகித்துக் கொண்டேன். பின்னர் நான் போய் உட்கார்ந்து, காத்திருந்தேன். 157 அந்த நாளன்று அவர்கள் அருமையான வாலிப பிரசங்கிமார்களை உடையவர்களாயிருந்தார்கள். அவர்கள் வல்லமையாய் பிரசங்கித்தார்கள். பின்னர் அவர்கள், “இன்றிரவுக்கு ஒருவர் செய்தியை கொண்டு வரப்போகிறார்…” என்றார். அவர்கள் அவரை “மூப்பர்” என்று அழைத்தார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்களுடைய ஊழியக்காரர்களை ‘சங்கை’ என்பதற்குப் பதிலாக அது ‘மூப்பர்’ என்பதாய் இருந்தது. அவர்கள் ஒரு கருத்த மனிதனை அங்கே கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவர் அந்த பழைய பாணியிலான பிரசங்கிமார்களுடைய மேல் அங்கிகளில் ஒன்றை அவர் அணிந்து கொண்டிருந்தார். எப்பொழுதாவது நீங்கள் அந்த ஒன்றை பார்த்திருக்க முடியும் என்று நான் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை. பின்னாக நீண்ட புறா வாலைப் போன்று, உங்களுக்கு தெரியுமா? ஒரு வெல்வெட் காலருடன், அவருடைய தலையைச் சுற்றி ஒரு வளையம் போன்று சிறிது வெள்ளை தலைமுடியை உடையவராய் இருந்தார். வயதான ஏழை நபர், இந்தவிதமாக அவர் வெளியே வந்தார். உங்களுக்குத் தெரியுமா? அவர் அங்கே நின்று அப்படியே சுற்றிப்பார்த்தார். எல்லா பிரசங்கிமார்களும் இயேசுவைக் குறித்து பேசினார்கள். அவர் எவ்வளவு மகத்தானவர் என்ற பல காரியங்களைப் பற்றி கூறி, பின்னர் அந்த வயதான மனிதன் தன்னுடைய பிரசங்க பாகத்தை ஜோபியிலிருந்து எடுத்தார். அவர், “நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது அதாவது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய் பாடி, தேவ புத்திரர்கள் எல்லொரும் கெம்பீரித்தபோது நீ எங்கே இருந்தாய்?” என்பதை எடுத்தார். 158 இந்த ஏழ்மையான வயதான மனிதனை பார்த்து நான், “இவர்கள் ஏன் யாராவது வாலிபமான யாரையாவது அங்கே பிரசங்கிக்க அனுப்பக்கூடாதா?” என்று எண்ணினேன். மகத்தான…இடமோ நிரம்பி வழிந்தது. நான், “இவர்கள் ஏன் அதை செய்யவில்லை” என்று எண்ணினேன். 159 ஆக அப்பொழுது இந்த வயதானவர், பூமியின் மேல் என்ன நடக்கப்போவதாக இருந்தது என்பதைக் குறித்து பிரசங்கிப்பதற்கு பதிலாக பரலோகத்தில் எல்லா நேரங்களிலும் என்ன நடக்கப் போவதாக இருந்தது என்பதைக் குறித்து பிரசங்கிக்கத் துவங்கினார். துவக்க காலத்தின்—துவக்கத்திலே அவரை இவர் எடுத்து அவரை அடிவானத்திலுள்ள வானவில்லுக்கும் அவருடைய இரண்டாவது வருகையையும் திரும்ப கொண்டு வந்தார். ஏன்? என்னுடைய ஜீவியத்திலேயே அப்பேர்ப்பட்ட பிரசங்கத்தை நான் கேட்டதேயில்லை. சரியாக அந்த நேரத்தில் ஆவி அவரைத் தொட்டது. அவர் அவ்வளவு உயரத்திற்கு குதிக்க அவருடைய இரண்டு குதிகால்களும் ஒன்று சேர்ந்து மோதின. அவருடைய தோள்களை பின்னாக தள்ளி, நுனிகாலில் நடந்து மேடையை விட்டுச் சென்று நான் பிரசங்கிக்க இங்கே மேடையில் எனக்கு போதுமான இடவசதி இல்லையே என்று கூறினார். எனக்கு இங்கே இருக்கின்ற இடத்தைக் காட்டிலும் அங்கே அவருக்கு அதிக இடமிருந்தது. 160 நான், “அது ஒரு வயதான மனிதனையே அந்தவிதமாக கிரியை செய்ய வைத்தது என்றால், அது என்மேல் வந்தால் அது என்ன செய்யும்?” என்று யோசித்தேன். பின்னர் நான்—நான், “எனக்கு அதில் கொஞ்சம் தேவைப்படலாம்” என்று எண்ணினேன். ஏன், அவர் இங்கே வெளியே வந்தார், அந்த வயதானவருக்காக, நான் முதலில் மிகவும் வருத்தப்பட்டேன். ஆனால் அவர் போனபோது, நான் எனக்காக வருத்தப்பட்டேன். அவர் அங்கிருந்து போகும்போது நான் அவரை நோக்கிப் பார்த்தேன். 161 அந்த இரவு நான் வெளியே சென்றேன். இப்பொழுது நான், “அடுத்தநாள் காலையில் நான் யார் என்பதை ஒருவரும் அறிந்து கொள்ளாதபடி நான் யாருக்கும் என்னைக் குறித்துக் கூறப்போவதில்லை” என்று நினைத்தேன். எனவே நான் சென்றேன். அந்த இரவு நான் என் கால்சட்டையை ஸ்திரிபோட்டது போலிருக்க அழுத்தி வைத்திருந்தேன். நான்…நேராக சோள வயலுக்கு சென்று தூங்கினேன். நான் போய் சில தின்பண்டங்களை எனக்கு வாங்கி வந்தேன். நீங்கள்…நான் ஒரு நிக்கலுக்கு அவைகளை நிறைய வாங்கி வந்தேன். அங்கே ஒரு குழாய் இருந்தது. நான் அங்கிருந்து தண்ணீர் கொண்டு வந்தேன். எனவே எனக்குத் தெரியும், அது கொஞ்ச நேரத்திற்குத் தான் தாங்கும். எனவே நான் போய் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து அதைக்குடித்துவிட்டு, மீண்டும்போய் என்னுடைய ரோல்கள் போன்ற தின்பண்டங்களை சாப்பிட்டேன். திரும்பி வந்து இன்னொரு முறை போய் தண்ணீர் குடித்துவிட்டு வந்தேன். சோள வயலுக்குள் சென்று இரண்டு இருக்கைகளை எடுத்து என்னுடைய சிறிய கோடிட்ட பருத்தி நூலினாலான கால்சட்டைகளை உள்ளே வைத்து அவைகளை இருக்கைகளின் நடுவில் வைத்து அழுத்தினேன். 162 நான் ஏறக்குறைய அந்த இரவு முழுவதும் ஜெபித்தேன். நான், “கர்த்தாவே, நான் நுழைத்திருக்கிறேனே இது என்ன? இந்த விதமான பயபக்தியுள்ள ஜனங்களை என் ஜீவியத்தில் நான் கண்டதேயில்லை” என்றேன். நான், “இதெல்லாம் என்னவென்று நான் அறிந்துகொள்ளும்படி எனக்கு உதவி செய்யும்” என்றேன். 163 அடுத்தநாள் காலையில் நான் அங்கே சென்றேன். எங்களை காலை ஆகாரத்திற்கு அழைத்தார்கள். உண்மையிலேயே நான் அவர்களோடு சாப்பிடச் செல்ல மனதில்லாதிருந்தேன். ஏனென்றால் காணிக்கைப் பெட்டியில் போட என்னிடத்தில் பணம் ஏதும் இல்லாதிருந்தது. நான் வெறுமனே திரும்பிச் சென்றேன். அடுத்த நாள் காலையில் நான் உள்ளே சென்றபொழுது ஏன், (நான் அந்த தின்பண்டங்கள் சிலவற்றை சாப்பிட்டுவிட்டு), போய் அமர்ந்தேன். அவர்கள் ஒலிபெருக்கியை வைத்திருந்தனர். அதற்கு முன்பாக நான் ஒரு மின்சார ஒலிபெருக்கியை கண்டதேயில்லை. அந்த காரியத்தைக் குறித்து நான் பயந்து போனேன். எனவே அவர்கள்…அது ஏதோ ஒரு கம்பியில் தொங்கிக் கொண்டிருந்தது. அது கீழ்நோக்கி தொங்கிக் கொண்டிருந்தது. தொங்கும் ஒலிபெருக்கிகளில் ஒன்றைப் போன்று இருந்தது. அவர், “கடந்த இரவு மேடையின் மேல் அங்கே ஒரு பாப்டிஸ்டு பிரசங்கியார் இருந்தார்” என்றார். அப்பொழுது நான், “இப்பொழுது ஏதாவது செய்வது எனக்கு நல்லது” என்று நினைத்தேன். 164 அவர், “மேடையின் மேல் இருந்ததிலேயே அவர்தான் வாலிபமான பிரசங்கி. அவருடைய பெயர் பிரான்ஹாம். அவர் எங்கே இப்பொழுது இருக்கிறார் என்பதை பற்றி யாருக்காவது தெரியுமா? அவரை வரும்படியாய் சொல்லுங்கள். காலை செய்தியை அவர் கொண்டுவர நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறினார். 165 ஓ, என்னே! நான் ஒரு பருத்தி நூல் கால்சட்டையும், ஒரு T சட்டையும் அணிந்திருந்தேன். உங்களுக்கு தெரியும். பாப்டிஸ்டுகளாகிய நாம் பிரசங்க பீடத்திற்கு போகும்போது ஒரு சூட் அணிய வேண்டும் என்று நினைக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் அப்படியே அமைதியாக உட்கார்ந்திருந்தேன். சரியாக அந்த நேரத்தில்…அவர்கள் அந்த கூட்டத்தை அப்பொழுது வடக்கு பாகத்தில் வைத்திருந்தார்கள். ஏனென்றால் அது (அவர்களுடைய சர்வதேச கூட்டம்.) அது தென்பாகத்தில் நடந்திருந்தால் அதில் கறுப்பர்கள் கலந்துகொள்ளக் கூடாமற்போயிருக்கும். அங்கே அவர்களோடு கறுப்பர்கள் இருந்தார்கள். நான் ஒரு தெற்கத்தியன். இருந்தாலும் மற்றவர்களைக் காட்டிலும் நான் மேலானவன் என்ற எண்ணமே எனக்கிருந்தது. நீங்கள் பாருங்கள், எனக்கு அந்த வெற்று வீராப்பு இருந்தது. பின்னர் அந்த காலையில் ஒரு கறுப்பு மனிதன் என் பக்கத்தில் உட்கார்ந்திருக்க நேர்ந்தது. எனவே நான் உட்கார்ந்து அவரை நோக்கிப் பார்த்தேன். நான், “அவர் ஒரு சகோதரன்” என்றே நினைத்தேன். 166 அவர், “வில்லியம் பிரான்ஹாம் எங்கே இருக்கிறார் என்று யாருக்காவது தெரியுமா?” என்று கேட்டார். நான் இந்த விதமாக என் இருக்கையில் குனிந்து கொண்டேன். அப்பொழுது அவர் இரண்டாவது முறையாக அதை அறிவித்தார். அவர் அந்த சிறிய ஒலிபெருக்கியை இழுத்து, “வெளியே இருக்கின்ற யாருக்காவது வில்லியம் பிரான்ஹாம் எங்கே இருக்கிறார் என்று தெரியுமா?” என்று கேட்டார். மேலும், “இன்றைய காலை செய்திக்காக அவர் மேடையின் மீது தேவைப்படுகிறார் என்று அவரிடம் கூறுங்கள். அவர் தெற்கு இந்தியானாவிலிருந்து வந்த ஒரு பாப்டிஸ்டு பிரசங்கியார்” என்றார். 167 நான் அப்படியே அமைதியாக உட்கார்ந்து கீழாக குனிந்து கொண்டேன். உங்களுக்குத் தெரியுமா? எப்படி இருந்தாலும் யாருக்கும் என்னைத் தெரியவில்லை. அந்த கறுப்பு பையன் என்னை உற்றுப்பார்த்து, “அவர் எங்கே இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டான். 168 நான், “ஒன்று நான்—நான் பொய் சொல்ல வேண்டும் அல்லது ஏதாவது காரியம் செய்ய வேண்டும்” என்று நினைத்தேன். எனவே நான், “இங்கேயே உட்கார்ந்திரு” என்றேன். அவர், “சரி ஐயா” என்றான். நான், “உன்னிடம் ஏதோ காரியத்தை கூற நான் விரும்புகிறேன், நான்—நான், நான்தான் அது” என்றேன். அவன், “அப்படியானால் அங்கே மேலே போங்கள்” என்றான். 169 நான், “இல்லை, என்னால் முடியாது பார்,” என்றேன். மேலும் “நான், நான் இந்த பழைய சாதாரண பருத்தி கால்சட்டையையும், இந்த சிறிய T சட்டையும் அணிந்திருக்கிறேன்” என்றேன். எனவே நான், “என்னால் அங்கே மேடைக்கு போகமுடியாது” என்றேன். 170 அதற்கு அவன், “நீர் எப்படி உடுத்தியிருக்கிறீர் என்பதைப் பற்றி அந்த ஜனங்கள் கவலைப்படமாட்டார்கள். அங்கே மேலே போங்கள்” என்றான். நான், “முடியாது, முடியாது” என்றேன். பின்னர் நான், “அமைதியாய் இரு. ஒன்றையும் நீ இப்பொழுது சொல்லாதே” என்றேன். 171 அவர்கள் ஒரு நிமிடத்தில் மீண்டும் ஒலிபெருக்கியண்டை வந்து, “வில்லியம் பிரான்ஹாம் எங்கே இருக்கிறார் என்று யாருக்காவது தெரியுமா?” என்று கேட்டார்கள். 172 அவன், “அவர் இங்கே இருக்கிறார். அவர் இங்கே இருக்கிறார், அவர் இங்கே இருக்கிறார்” என்றான். ஓ, என்னே! உங்களுக்குத் தெரியுமா? அங்கே நான் அந்த சிறிய T சட்டையுடன் எழும்பி நின்றேன். இங்கே நான்… 173 அவர், “திரு.பிரான்ஹாம், மேலே வாரும், நீர் செய்தியை கொண்டுவர நாங்கள் விரும்புகிறோம்” என்றார். ஓ, என்னே! அந்த பிரசங்கிமார்கள் எல்லோர் முன்னிலையிலுமா? உம், அந்த எல்லா ஜனங்களின் முன்னிலையிலுமா? உங்களுக்குத் தெரியுமா? நான் அப்படியே நழுவி மேலே சென்றேன். என்னுடைய முகம் சிவந்து காதுகள் எரிய துவங்கியது. சாதாரண கால்சட்டையோடும், T சட்டையோடும் பிரசங்கியாராக நான் மேடை மேல் நழுவிச் சென்றேன். நீங்கள் பாருங்கள், இதற்கு முன்னர் கண்டிராத ஒரு மின்சார ஒலிபெருக்கிக்கு முன்னால் பாப்டிஸ்டு பிரசங்கியார் சென்றார். 174 நான் அங்கே எழும்பி நின்று, நான், “நல்லது, நான்—நான்—நான் இதைக்குறித்து அறியேன்” என்றேன். உங்களுக்குத் தெரியுமா? உண்மையாகவே பயத்துடன், நான் வார்த்தையில் தடுமாறிக்கொண்டிருந்தேன்…நான் இங்கே லூக்கா 16-ம் அதிகாரத்தை எடுத்து, நான் நினைத்தேன், “நல்லது இப்பொழுது…” நான்—நான் பேசும் பொருளை எடுத்து, “அவன் பாதாளத்தில் தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து கதறினான்.” நான்…எனவே உங்களுக்கு தெரியுமா, நான் அதை பிரசங்கிக்கத் தொடங்கினேன். நான் பிரசங்கிக்கையில் சற்று மேலான உணர்வையடைந்தேன். நான், “ஐசுவரியான் பாதாளத்திலிருந்து கூக்குரலிட்டான்” என்றேன். அந்த மூன்று சிறிய வார்த்தைகள். அதைப்போன்ற அனேக செய்திகள் என்னிடம் உண்டு. உதாரணமாக, “இதை நீ விசுவாசிக்கிறாயா?” “கன்மலையைப் பார்த்துப் பேசு” போன்றவை. எனவே நான் அவைகளை பிரசங்கிக்க நீங்கள் கேட்டிருக்கிறீர்களே. நான், “அப்பொழுது அவன் அழுதான்” என்பதை எடுத்து வைத்திருந்தேன். நான், “அங்கே பிள்ளைகளே கிடையாது. நிச்சயமாக நரகத்தில் கிடையாது. அப்பொழுது அவன் கதறினான்” என்றேன். மேலும் நான், “அங்கே பூக்கள் ஏதும் இல்லை. அப்பொழுது அவன் கதறினான். அங்கே தேவன் இல்லை. அப்பொழுது அவன் கதறினான். அங்கே கிறிஸ்து இல்லை. அப்பொழுது அவன் சத்தமிட்டான்” என்றேன். பின்னர் நான் சத்தமிட்டான். ஏதோ காரியம் என்னை பற்றிக் கொண்டது. என்னே, ஓ! என்னே! பிறகு என்ன சம்பவித்தது என்று எனக்கு தெரியாது. பின்னர் நான் என் சுயநினைவுக்கு வந்தபோது நான் வெளிப்பக்கமாக நின்று கொண்டிருந்தேன். அந்த ஜனங்கள் அலறிக்கொண்டும், சத்தமிட்டுக்கொண்டும், அழுதுகொண்டும் இருந்தனர். நான், நாங்கள் ஒரு பயங்கரமான நேரத்தை உடையவர்களாக இருந்தோம். 175 நான் வெளியே வந்தபோது, அங்கே ஒருவன் ஒரு மகத்தான பெரிய டெக்ஸாஸ்தொப்பியும், பெரிய காலணிகளும் அணிந்தவனாய் என்னிடம் நடந்து வந்து, “நான் மூப்பர், இன்னார்—இன்னார்” என்றார். பிரசங்கியாரோ மாட்டுக்கார பையன் உடையையும், மாட்டுக்கார பையன் காலணிகளையும் அணிந்திருந்தார். எனவே நான், “சரி, அப்படியானால் என் சாதாரண கால்சட்டை ஒன்றும் அப்பொழுது அவ்வளவு மோசமானதல்ல” என்று நினைத்தேன். 176 அவர், “நீர் டெக்ஸாஸூக்கு வந்து அங்கே எனக்கு ஒரு எழுப்புதல் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றார். 177 “திருவாளரே, ஹூ, ஹூ நான் அதைக் குறித்துக் கொள்ளட்டுமே ஐயா,” என்றார். அதைப்போலவே நானும் குறித்துக் கொண்டேன். 178 அங்கே ஒருவன் ஒருவிதமான குழி பந்தாட்ட கால்சட்டைகள் ஒன்றை அணிந்தவனாய் வந்தான். குழி பந்தாட்டம் விளையாடும் போது அவர்கள் அதை வழக்கமாக அணிந்து கொள்வார்கள். உங்களுக்கு தெரியுமே, அவைகள் சிறிய கச்சையிட்ட தளர் முழு கால்சட்டைகளாய் இருந்தன. அவன் “நான் மூப்பர் இன்னார்—இன்னார் மியாமிலிருந்து வருகிறேன். நானும் அவ்விதமான எழுப்புதல் கூட்டத்தை விரும்புகிறேன்” என்றான். 179 எனவே நான், “என்னே! ஒருக்கால் உடுத்திக் கொள்வது அவ்வளவு பெரியதல்ல” என எண்ணினேன். நான் அதை நோக்கிப் பார்த்தேன். அப்பொழுது நான், “எல்லாம் சரிதான்” என எண்ணினேன். 180 எனவே நான் இவைகளை எடுத்துக்கொண்டு வீடு நோக்கிச் சென்றேன். மனைவி என்னை சந்தித்து, “பில்லி நீங்கள் எதற்காக இவ்வளவு சந்தோஷமாய் காணப்படுகிறீர்கள்?” என்று கேட்டாள். 181 நான், “ஓ விளைச்சலின் சிறந்த பகுதியை நான் சந்தித்தேன். என்னே! நீ கண்டதிலேயே மேலானது. அந்த ஜனங்கள் அவர்களுடைய மார்க்கத்தைக் குறித்து வெட்கப்படவில்லை” என்றேன். ஓ, நான் அதெல்லாவற்றையும் குறித்து அவளிடம் கூறினேன். நான், “இங்கே பார், தேனே, ஒரு தொடர்ச்சியான அழைப்புகள். அந்த ஜனங்கள் என்னை அழைத்திருக்கிறார்கள்” என்றேன். அவள், “அவர்கள் பரிசுத்த உருளைகள் அல்லவா? அவர்கள் அப்படித்தானா?” என்று கேட்டாள். 182 நான், “அவர்கள் எந்தவிதமான உருளைகள் என்று எனக்கு தெரியாது. ஆனால் எனக்குத் தேவையான ஏதோ காரியத்தை அவர்கள் உடையவர்களாய் இருக்கிறார்கள்” என்றேன். புரிகின்றதா? நான், “அந்த ஒரு காரியத்தில் நான் நிச்சயமுடையவனாய் இருக்கிறேன்” என்றேன். நான், “தொண்ணூறு வயது நிரம்பிய ஒரு வயதான மனிதன் மீண்டும் வாலிபனாய் வந்ததை நான் கண்டேன்” என்று கூறினேன். நான், “என்னுடைய ஜீவியத்தில் அப்படிப்பட்ட பிரசங்கத்தை நான் கேட்டதேயில்லை” என்றேன். “ஏன் ஒரு பாப்டிஸ்டு அந்தவிதமாக பிரசங்கித்ததை நான் கண்டதேயில்லை” என்றும், “அவர்கள் மூச்சு திணறிப்போகும் வரை பிரசங்கிக்கிறார்கள். அவர்களுடைய முட்டிகளை தரைமட்டுமாய் வளைத்து, திரும்பி எழும்பி அவர்களுடைய மூச்சை பிடிக்கிறார்கள் என்றும் நான் கூறினேன். மேலும், இரண்டு வட்டார தூரத்திற்கு அப்பாலேயே அவர்கள் இன்னும் பிரசங்கிக்கிறதை நீங்கள் கேட்கலாம்” என்றும் கூறினேன். நான், “என்னுடைய ஜீவியத்தில் அப்படியாய் நான்—நான் கேட்டதேயில்லை” என்றேன். நான், “அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசுகிறார்கள். இன்னொருவன் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைக் குறித்து கூறுகிறான். என் ஜீவியத்தில் நான் அந்தவிதமாய் கேட்டதேயில்லை” என்று கூறினேன். நான், “நீ என்னுடன் வருகிறாயா?” என்று கேட்டேன். 183 அவள், “தேனே, நான் உம்மை மணந்துகொண்டபோது, மரணம் நம்மை பிரிக்கும்வரை நான் உம்மோடு கூட இருப்பேன்” என்று கூறினேன். அவள், “நான் வருவேன்” என்றாள். அவள், “இப்பொழுது நாம் குடும்பத்தாரிடம் கூறுவோம்” என்றாள். 184 நான், “நீ உன் தாயாரிடம் கூறு, நான் என் தாயாரிடம் கூறுவேன்” என்றேன். எனவே நாங்கள்…நான் போய் அம்மாவிடம் கூறினேன். 185 அதற்கு அம்மா, “நல்லது பில்லி நிச்சயமாக என்னவெல்லாம் செய்யும்படி கர்த்தர் உன்னை அழைக்கிறாரோ போய் அதை செய்” என்றார். 186 எனவே திருமதி.புரும்பா என்னை வரும்படி அழைத்திருந்தாள். நானும் போனேன். அவள், “நீ பேசிக்கொண்டிருக்கிறாயே, அதைக் குறித்து என்ன?” என்று கேட்டாள். 187 அப்பொழுது நான், “ஓ, திருமதி.புரும்பா, நீங்களெல்லோரும் அப்படிப்பட்ட ஜனங்களை கண்டதேயில்லை” என்றேன். அவள், “அமைதியாய் இரு! அமைதியாய் இரு!” என்றாள். நான், “சரி பெருமாட்டியே” என்றேன். பின்னர் நான், “வருந்துகிறேன்” என்றேன். அவளோ, “அவரகள் ஒரு கூட்ட பரிசுத்த உருளைகள் என்பது உனக்கு தெரியுமா?” என்று கேட்டாள். 188 நான், “தெரியாது பெருமாட்டியே. அது எனக்கு தெரியாது” என்றேன். நான், “அவர்கள்—அவர்கள் அருமையான ஜனங்கள்” என்றேன். 189 அவள், “அந்த விதமான எண்ணம் உண்டாயிற்றோ! அதைப் போன்ற காரியத்திற்குள் என்னுடைய மகளை எங்கள் மத்தியிலிருந்து இழுத்துக் கொள்ளலாம் என்று நீ நினைக்கிறாயா?” என்று கேட்டாள். மேலும், “அவர்கள் மற்ற சபைகள் வெளியே தூக்கி எறிந்த முட்டாள்தனமான குப்பையேயன்றி வேறொன்றுமில்லை” என்றாள். அவள், “நிச்சயமாக அதைப் போன்றதிலிருந்து என்னுடைய மகளை நீ வெளியே கொண்டு வரமாட்டாய்” என்றாள். 190 நான், “ஆனால் உங்களுக்கு தெரியுமா? திருமதி புரும்பா, என்னுடைய இருதயத்தின் ஆழத்தில் கர்த்தர் என்ன அந்த ஜனங்களோடு போகும்படியாய் விரும்புகிறதை நான் உணருகிறேன்” என்றேன். 191 அதற்கு அவள், “நீ உன்னுடைய திருச்சபைக்கு திரும்பிப் போய் அவர்கள் உனக்கு ஒரு போதகர் இல்லத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நிலைக்கு வரும்வரைக்கும், புத்தியுள்ள ஒரு மனிதனைப் போன்று நடந்துகொள்” என்றாள். மேலும், “நீ என்னுடைய மகளை அங்கே கொண்டு போகக்கூடாது” என்றாள். நான், “சரி பெருமாட்டியே” என்றேன். நான் அப்படியே திரும்பி வெளியே நடந்தேன். 192 ஹோப்போ அழ ஆரம்பித்துவிட்டாள். அவள் வெளியே வந்து, “பில்லி, அம்மா கூறினது என்னவாயிருந்தாலும் நான் உன்னோடு சார்ந்து இருப்பேன்” என்றாள். தேவன் அவளுடைய இருதயத்தை ஆசீர்வதிப்பாராக! நான், “ஓ, அதெல்லாம் பரவாயில்லை, தேனே” என்றேன். 193 நான் அதை அப்படியே விட்டுவிட்டேன். அப்பேர்ப்பட்டதான் ஒரு கூட்ட ஜனத்தோடு அவளுடைய மகள் போக அனுமதிக்கவில்லை. ஏனென்றால் “அது குப்பையேயன்றி வேறொன்றுமில்லை” என்று கூறிவிட்டாள். எனவே நான் அதை அப்படியே விட்டுவிட்டேன். என் ஜீவியத்தில் நான் செய்த மோசமான தவறாக அது இருந்தது. மோசமானவைகளில் ஒன்றே. 194 கொஞ்சம் கழித்து, ஒரு சில வருஷங்களுக்குப் பிறகு பிள்ளைகள் வளர்ந்து வந்தனர். ஒரு நாள் நாங்கள்…1937-ல் அங்கே ஒரு வெள்ளம் வந்தது. அங்கே ஒரு வெள்ளம் உண்டானது. எங்களுடைய…அந்த நேரத்தில் நான் ரோந்தில் இருந்தேன். என்னால் முடிந்த அளவுக்கு பிளந்து கொண்டு விழும் வீடுகளிலிருக்கும் ஜனங்கள் வெள்ளத்திலிருந்து வெளியே கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய சொந்த மனைவி சுகவீனமானாள். அவள் உண்மையாகவே, உண்மையாகவே சளி காய்ச்சலால் சுகவீனமாயிருந்தாள். அவளை வெளியே கொண்டு சென்றனர்…வழக்கமாக செல்லும் மருத்துவமனை நிரம்பியிருந்ததினால் அவளை அங்கே சேர்க்க முடியவில்லை. எனவே நாங்கள் அவளை அரசாங்க மருத்துவ மனைக்கு கொண்டு சென்றோம். அங்கே அவர்கள் ஒரு அறை வைத்திருந்தனர். எனவே அவர்கள் அதன் பிறகு என்னை திரும்பி வெளியே அழைத்து வந்தனர். நான் ஒரு படகோட்டியைப் போன்று எப்பொழுதும் ஆற்றிலேயே ஜீவித்தேன். எனவே நான் எப்பொழுதும் ஜனங்களை வெள்ளத்திலிருந்து காப்பாற்ற முயற்சித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது நான்…ஒன்று… 195 அவர்கள் என்னை அழைத்து, “செஸ்ட்நட் (Chestnut) வீதியில் அங்கே ஒரு வீடு இருக்கிறது என்றும், அது கிட்டத்தட்ட விழுந்துபோக ஆயத்தமாயிருக்கிறது என்றும், அங்கே ஒரு தாயும், ஒரு கூட்ட பிள்ளைகளும் உள்ளே இருக்கின்றனர். உங்களுடைய மோட்டார் படகினால் அங்கே உள்ளே அவர்களைக் கொண்டு வரும்படி அவர்களிடத்தில் போகக்கூடுமானால் நலமாயிருக்குமே” என்று கூறினார்கள். நான், “என்னால் முடிந்த எல்லாவற்றையும் நான் செய்வேன்” என்றேன். 196 நான் அந்த அலைகளுக்கு எதிராக படகை ஓட்டினேன். அங்கே வெள்ளத்தடை உடைந்துவிட்டது. ஓ, என்னே…பட்டணத்தை அப்படியே அடித்துக்கொண்டு போய்விட்டது. நான் என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்து முடிவிலே சந்துகளினூடாகவும், மற்ற இடங்களினூடாகவும் சென்றேன். அவர்கள் ஜீவிக்கின்ற இடத்திற்கு நெருக்கமாக அந்த பழைய வெள்ளகாப்புக்குரிய அணையின் கரையண்டையே சென்றேன். தண்ணீரோ கொட்டிக்கொண்டே இருந்தது. யாரோ ஒருவர் அலறும் சத்தத்தை நான் கேட்டேன். முன் மண்டபத்தில் ஒரு தாயார் நின்று கொண்டு இருக்கிறதையும் கண்டேன். அங்கே பெரிய உருளைகள் அதனூடாக அந்தவிதமாக போய்க்கொண்டிருந்தன. நான் இந்த வழியாக என்னால் முடிந்த அளவிற்கு சென்று ஓடையை தொட்டு திரும்பி வந்து அடுத்த பக்கத்தை அடைந்தேன். சரியாக முன் மண்டபத்தின் கம்பம், அதாவது கதவின் கம்பத்திலிருந்து தூணண்டையில் நான் சரியான நேரத்தில் என் படகை அதில் கட்டுவதற்கு நிறுத்தினேன். நான் உள்ளே ஓடி அந்த தாயாரை பற்றிப்பிடித்து அவளை வெளியே கொண்டு வந்து இரண்டு அல்லது மூன்று பிள்ளைகளையும் வெளியே கொண்டு வந்தேன். நான் என்னுடைய படகை கட்டவிழ்த்து அவளை படகில் ஏற்றிக்கொண்டு திரும்பினேன். கீழேயுள்ள வழியாக வெளியே வந்து அவளை கரைக்கு கொண்டுவர முயற்சித்தேன். நான் அவளை கரை சேர்க்கும்வரை…அது சுமார் பட்டணத்தினூடாக ஒன்றரை மைல் தூரமாய் இருந்தது. பின்னர் நான் அங்கே வந்தபோது அவள் மயங்கிப் போயிருந்தாள். அவள்…அவள், “என்னுடைய குழந்தையாயிற்றே! என்னுடைய குழந்தையாயிற்றே!” என்றே அலறிக்கொண்டிருந்தாள். 197 நான், “வீட்டில் அவளுடைய குழந்தையை விட்டுவிட்டாள் போலும்” என்றே எண்ணினேன். ஓ, என்னே! அவர்கள் அவளை கவனித்துக் கொண்டிருக்க முயற்சிக்கையில் நான் திரும்பவும் அந்த இடத்திற்குச் சென்றேன். நான் அறியவந்தது என்னவென்றால்…அதாவது அவளுடைய குழந்தை அங்கு எங்கோ இருந்தது என்பதையே அறிந்து கொள்ள விரும்பினாளாம். அங்கே சுமார் மூன்று வயதுள்ள ஒரு சிறுவன் இருந்தான். அவளோ ஏதோ ஒரு சிறு பால் குடிக்கும் குழந்தையை அல்லது அதைப் போன்றதை கூறுகின்றாள் என்றே நினைத்தேன். 198 எனவே நான் திரும்பிப்போய் அந்த இடத்தை அடைந்தேன். நான் அந்த படகைக் கொண்டு அங்கே, உள்ளே சென்றபோது எந்த குழந்தையையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. முன்கூடம் உடைந்து, வீடும் விழுந்து போயிருந்தது. நான் துரிதமாய் ஒடி, என்னுடைய படகை மிதக்க வைத்துக் கொண்டிருக்கும் அந்த பலகை துண்டை வேகமாய் பற்றிப்பிடித்து படகுக்குள் சென்று அதை இழுத்து கட்டவிழ்த்தேன். 199 ஓடுகிற ஆற்றின் ஆழத்திற்குள் அது என்னை கொண்டு சென்றது. அப்பொழுது அது ஏறக்குறைய இரவு பதினொன்று மணி முப்பது நிமிடமாய் இருக்கும். அப்பொழுது பனி பெய்து கொண்டும், ஆலங்கட்டி விழுந்து கொண்டும் இருந்தது. நான் படகின் இயந்திரத்தை துவக்கும் கயிற்றை பற்றிப்பிடித்து படகை இழுக்க முயற்சித்தேன். அது இயங்க துவங்கவில்லை. நான் முயற்சித்தும் அது இயங்க துவங்கவில்லை. நான் மீண்டுமாக முயற்சித்தேன். அப்பொழுது அந்த தண்ணீர் ஓடும் வேகத்தில் தூரமாய் போய்விட்டேன். நீர்விழ்ச்சியோ எனக்கு கீழாக இருக்கிறது. நான் உண்மையாகவே கஷ்டத்தோடு முயற்சித்துக் கொண்டிருந்தேன். நான், “ஓ, என்னே, என்னுடைய முடிவு இதோ இருக்கிறதே. இதுதானா அது,” என்று எண்ணினேன். நான் உண்மையாகவே கஷ்டப்பட்டு முயற்சித்தேன். நான், “கர்த்தாவே இந்தவிதமான ஒரு மரணத்தில் என்னை மரிக்கவிடாதேயும்” என்று கூறி, நான் இழுத்து, இழுத்துப் பார்த்தேன். 200 “நீ போகக்கூடாது என்ற அந்த குப்பைக் கூட்டத்தைக் குறித்து என்ன?” என்ற காரியம் என் நினைவுக்கு திரும்பவும் வந்தது? புரிகின்றதா? ஹூ—ஹூ 201 நான் என் கரத்தை திருப்பி படகின் மேல் வைத்து, நான், “தேவனே என் மேல் இரக்கமாயிரும். இந்தவிதமான என் மனைவியையும், என் குழந்தையையும் விட்டுவிட அனுமதியாதேயும், அவர்கள் அங்கே வியாதியாயிருக்கிறார்கள். தயவு செய்யும்” என்றேன். நான் தொடர்ந்து இந்த விதமாக இழுத்துக் கொண்டேயிருந்தேன். அதுவோ இயங்கவில்லை. கீழே அங்கே கொந்தளிக்கிறதை என்னால் கேட்க முடிந்தது. ஏனென்றால் நான்…வெறும் சில நிமிஷங்கள்தான். ஓ, என்னே! அது அந்தவிதமாகவே இருந்தது. அப்பொழுது நான், “கர்த்தாவே, நீர் என்னை மன்னிப்பீரானால் நான் எந்த காரியத்தையும் செய்வேன் என்று உமக்கு வாக்களிக்கிறேன்” என்றேன். அந்த படகில் அங்கேயே முழங்காற்படியிட்டேன். அப்பொழுது பனிக்கட்டி மழையோ என் முகத்தில் விழுந்து கொண்டிருந்தது. நான், “நீர் செய்ய வேண்டுமென்று விரும்புகிற எந்த காரியத்தையும் நான் செய்வேன்” என்றேன். நான் மறுபடியும் கயிற்றை இழுத்தேன். அது இயங்கத் தொடங்கியது. அதில் இருந்த எல்லா பெட்ரோலையும் என்னால் முடிந்தவரை திறந்துவிட்டு விட்டு, முடிவிலே கரைக்கு வந்து சேர்ந்தேன். 202 நான் ரோந்து வண்டியை கண்டுபிடிக்க திரும்பிச் சென்றேன். அப்பொழுது நான் நினைத்துப் பார்த்தேன்…அவர்களில் சிலர் அங்கே, “அரசாங்கமே அப்படியே அடித்துக்கொண்டு போய்விட்டது” என்று கூறினார்கள். என்னுடைய மனைவியும், குழந்தையும், இரண்டு குழந்தைகளும் உள்ளே அங்கே இருந்தனர். 203 என்னால் முடிந்த அளவு கடினப்பட்டு அரசாங்க மருத்துவமனையை நோக்கிச் சென்றேன். அதனூடாக எல்லா இடத்திலும் தண்ணீர் கிட்டத்தட்ட பதினைந்து அடி ஆழத்திற்கு இருந்தது. அங்கே ஒரு வீட்டுப்பணி மேற்பார்வையாளர் இருந்தார், நான், “மேற்பார்வையாளரே, மருத்துவ மனைக்கு என்ன சம்பவித்தது?” என்றேன். அவர், “இப்பொழுது கவலைப்படாதே, உனக்கான யாராவது உள்ளே இருக்கிறார்களா?” என்று கேட்டார். நான், “ஆம், சுகவீனமான ஒரு—ஒரு மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள்” என்றேன். 204 அவர், “அவர்கள் எல்லோரும் வெளியே போய்விட்டார்கள்” என்றார். மேலும், “அவர்களெல்லாரும் ஒரு வாடகை வண்டியில் சார்லஸ் டவுன் நோக்கி போய்க்கொண்டு இருக்கிறார்கள்” என்றார். 205 நான் ஓடிப்போய் என்னுடைய படகில்…படகில்மோட்டர் காரில் ஏறிக்கொண்டு, என்னுடைய படகு அங்கே பின்னால் இருந்தது. அங்கே ஓடினேன்…பின்னர் ஓடைகள் இரண்டரை அல்லது மூன்று மைல் அகலத்தில் வந்தது. இரவு முழுவதுமாக நான் முயற்சித்தேன்…அவர்களில் சிலர், “அந்த வாடகை வண்டி அங்கே தாங்குகால் சட்டத்திலிருந்த பாதையை விட்டு அடித்துக் கொண்டு போய்விட்டது” என்றனர். 206 நானே தண்ணீரினால் ஒரு சிறிய தீவில் சூழப்பட்டு அங்கேயே மூன்று நாட்களாக உட்கார்ந்திருந்தேன். அது குப்பைதானா அல்லது இல்லையா என்பதைக் குறித்து யோசித்துப் பார்க்க எனக்கு அதிகமான நேரம் இருந்தது. அப்படியே, “என்னுடைய மனைவி எங்கே இருக்கிறாள்?” என்று அடித்துக் கொண்டிருந்தது. 207 முடிவிலே நான் அவளை கண்டபோது, நான் வெளியே வந்து ஒரு சில நாட்களில் அவளண்டை நான் கடந்து சென்றேன். அவள் இந்தியானாவிலுள்ள கொலம்பஸ் வழி வரை போய்விட்டாள். அங்கேயுள்ள பாப்டிஸ்டு அரங்கத்தில் ஒரு மருத்துவமனை போன்று அவர்கள் வியாதியஸ்தர் அறைகளை சிறிய அரசாங்க கட்டில்களால் அமைத்திருந்தனர். என்னால் முடிந்த அளவு கடினமாக ஓடி அவள் எங்கே இருக்கிறாள் என்று கண்டறிய “ஹோப், ஹோப், ஹோப்!” என்று கூச்சலிட்டேன். நான் நோக்கிப் பார்த்தேன். அதோ அவள் அங்கே ஒரு கட்டிலின்மேல் படுத்துக் கிடந்தாள். அவளுக்கு ஷயரோகம் உண்டாயிருந்தது. அவள் தன்னுடைய சிறிய எலும்பான, கரத்தை உயர்த்தி, “பில்லி” என்றாள். நான் அவளண்டை ஓடி, “தேனே, ஹோப்” என்றேன். அவள், “நான் பயங்கரமாய் காணாப்படுகிறேன் அப்படித்தானே?” என்றாள். நான், “இல்லை, தேனே நீ நன்றாய்தான் இருக்கிறாய்” என்றேன். 208 அவளுடைய ஜீவனைக் காப்பாற்ற எங்களுக்குள் இருந்த எல்லாவற்றோடும் கூட நாங்கள் சுமார் ஆறு மாதங்கள் வேலை செய்தோம். ஆனால் அவளோ தொடர்ந்து பெலவீனமாகிக் கொண்டே, பெலவீனமாகிக்கொண்டே சென்றாள். 209 ஒருநாள் நான் ரோந்து போய்க்கொண்டிருந்தபோது நான் என்னுடைய வானொலியை திருப்பினேன். தொலை பேசியில் தொடர்புகொள் என்றும், வானொலியில் அவர்கள் ஒரு பெயரிட்டு கூப்பிடுவதையும் நான் கேட்டேன். அது என்னவென்றால், “வில்லியம் பிரான்ஹாம் உடனே மருத்துவமனைக்கு வரவேண்டியவராயிருக்கிறார். அவருடைய மனைவியோ மரித்துக் கொண்டிருக்கிறாள்” என்று கூறினர். அப்பொழுது நான் சிகப்பு விளக்கை போட்டுக்கொண்டு, எச்சரிக்கை சங்கொலியை திறந்துவிட்டு, என்னால் முடிந்த அளவு திரும்பி வேகமாக மருத்துவ மனைக்கு விரைந்தேன். பின்னர் நான் மருத்துவமனையை அடைந்ததும், நான் காரை நிறுத்திவிட்டு, உள்ளே ஓடினேன். மருத்துவமனையினூடாக வந்து கொண்டிருந்தபோது, சிறுபையன்களாய் ஒன்றாக சேர்ந்து ஓடி விளையாடியதும், ஒன்று சேர்ந்து மீன்பிடித்ததுமான என்னுடைய சிறு வயது நண்பர் சாம் அடயர் (Sam Adair) அவர்களை நான் கண்டேன். 210 வைத்தியர் சாம் அடயர் அவர்கள் அண்மையில் வந்த தரிசனத்தில் இருந்த ஒருவராக இருக்கிறார். அவரையும், அவருடைய தனி மருத்துவமனையைப் பற்றியும் நான் கூறினேன். யாராவது அந்த தரிசனத்தை சந்தேகித்திருந்தால் அந்த தரிசனம் சரியாக இருந்ததா அல்லது இல்லையா என்பதை நீங்கள் அறிந்து கொள்ள அவருடன் சற்று தொலை பேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கூறினார். 211 ஆக அப்பொழுது அவர் அங்கே வந்தார். அவருடைய தொப்பியை அவருடைய கரத்தில் வைத்திருந்தார். அவர் என்னை நோக்கிப் பார்த்தவுடனே அழ துவங்கினார். நான் அவரண்டை என் கரங்களை அவர்மேல் சுற்றி போட்டுக்கொண்டேன். அவர் தன்னுடைய கரங்களை என்னைச் சுற்றி போட்டுக்கொண்டு, “பில்லி அவள் மரித்துக் கொண்டிருக்கிறாள்” என்றார். மேலும் அவர், “நான் வருந்துகிறேன், என்னால் முடிந்த எல்லாவற்றையும் நான் செய்தேன். நான் தனித்துறை சிறப்பு மருத்துவ வல்லுநர்களையும் (Specialists) வரவழைத்து எல்லா காரியங்களையும் செய்தேன்” என்றார். நான், “சாம், நிச்சயமாக அவள் மரிக்கப்போவதில்லை” என்றேன். அவரோ, “ஆம், அவள் மரித்துக் கொண்டிருக்கிறாள்” என்றார்…அவர், “பில், நீ உள்ளே அங்கே போகாதே” என்றார். நான், “சாம், நான் உள்ளே போயாக வேண்டும்” என்றேன். அவரோ, “அதை செய்யாதே, செய்யாதே. தயவு செய்து செய்யாதே” என்றார். நான், “உள்ளே போக என்னை அனுமதியுங்கள்” என்றேன். அப்பொழுது அவர், “நானும் உன்னோடு வருகிறேன்” என்றார். 212 நான், “இல்லை, நீர் இங்கே வெளியிலேயே இரும். அவளுடைய கடைசி நிமிடங்களில் நான் அவளோடு இருக்க விரும்புகிறேன்” என்றேன். அவர், “அவள் சுயநினைவற்றிருக்கிறாள்” என்றார். 213 நான் அறைக்குள் நடந்து சென்றேன். மருத்துவச்சி அங்கே உட்கார்ந்து கொண்டு அழுதுகொண்டிருந்தாள். ஏனென்றால் அவளும் ஹோப்பும் ஒன்றாக பள்ளித்தோழிகளாக இருந்தனர். எனவே நான் பார்த்தபோது அவள் அழத்துவங்கினாள். அவளுடைய கரத்தை தன் மேலே உயர்த்திக் கொண்டு, நடந்து சென்றாள். 214 நான் ஹோப்பை நோக்கிப் பார்த்து, அவளை அசைத்தேன். அவள் அங்கே இருந்தாள். அவள் சுமார் நூற்றிருபது பவுண்டு எடையிலிருந்து அறுபது பவுண்டுக்கு வந்திருந்தாள். நான்—நான் அவளை குலுக்கினேன். நான் ஒரு நூறு வயதுவரை ஜீவிக்க நேர்ந்தாலும், என்ன சம்பவித்தது என்பதை மட்டும் நான் மறுக்கவே மாட்டேன். அவள் அப்படியே திரும்பினாள். அந்த மகத்தான பெரிய அழகான கண்கள் என்னை நோக்கி பார்த்தன. அவள் சிரித்தாள். அவள், “பில்லி, நீர் ஏன் என்னை திரும்ப அழைத்தீர்?” என்று கேட்டாள். அப்பொழுது நான், “தேனே, எனக்கு இப்பொழுதுதான் பணம் கிடைத்தது” என்றேன். 215 நான் வேலை செய்யவேண்டியதாய் இருந்தது.நாங்கள் நூற்றுக்கணக்கான டாலர்களை வைத்தியருக்கு கட்டணமாக செலுத்த கடனுள்ளவர்களாயிருந்து, அதை கொடுத்துத் தீர்க்க ஒன்றுமே இல்லாதவர்களாயிருந்தோம். எனவே நான் வேலை செய்ய வேண்டியதாய் இருந்தது. ஒவ்வொரு இரவும் இரண்டு அல்லது மூன்று முறைகள் அவளைப் பார்த்தேன். அப்பொழுது அவள் அந்த நிலைமையில் இருந்தாள். நான், “உன்னை திரும்ப அழைத்தேன் என்று நீ எதை குறிப்பிடுகிறாய்?” என்று கேட்டேன். 216 அவள், “பில் நீர் அதைக்குறித்து பிரசங்கித்திருக்கிறீர், நீர் அதைக்குறித்து பேசியிருக்கிறீர். ஆனால் அது என்ன என்பதைக் குறித்த ஒரு எண்ணமும் உமக்கு இல்லையா?” என்று கேட்டாள். அதற்கு நான், “நீ எதைக்குறித்து பேசிக்கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டேன். 217 அவள், “பரலோகம்” என்றாள், அவள், “பாரும்” என்றாள். பின்னர் அவள், “வெண்மையான ஆடைகள் அணிந்த ஏதோ காரியத்தாலோ அல்லது சில ஜனங்களாலோ அல்லது மனிதர்களாலோ அல்லது ஸ்திரீகளாலோ நான் பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்துக் கொண்டு செல்லப்பட்டிருந்தேன்” என்றாள். மேலும் தொடர்ந்து அவள், “நான் இன்ப அமைதியிலே சமாதானமாய் இருந்தேன்” என்றாள். மேலும், “பெரிய அழகான பறவைகள் மரத்திலிருந்து மரத்திற்கு பறந்து கொண்டிருந்தன.” அதன்பின்பு அவள், “நான் பக்கத்தில் இருக்கிறதாக நினைத்துக் கொள்ளாதீர்கள்” என்றாள். அடுத்தபடியாக அவள், “பில்லி, நம்முடைய தவறை நான் உனக்கு சொல்லப்போகிறேன்” என்றாள். அவள், “கீழே உட்காரும்” என்றாள். ஆனால் நான் அப்படியே செய்யவில்லை. நான் முழங்கால்படியிட்டு அவளுடைய கரங்களை பற்றிக் கொண்டேன். அவள், “நம்முடைய தவறு எங்கே இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டாள். நான், “ஆம், இனிய இருதயமே நானறிவேன்” என்றேன். 218 அவள், “நாம் அம்மாவுக்கு செவி கொடுத்திருக்கக்கூடாது. அந்த ஜனங்கள் சரியாய் இருந்தார்கள்” என்றாள். அதற்கு நான், “அது எனக்கு தெரியுமே” என்றேன். 219 அப்பொழுது அவள், “நீர் அந்த ஜனங்களிடத்திற்கு போவீர் என்ற இந்த வாக்குறுதியை எனக்கு செய்யும். ஏனென்றால் அவர்கள் சரியாய் இருக்கிறார்கள்” என்றாள். அவள், “அந்தவிதமாகவே என் பிள்ளைகளை வளருங்கள்” என்றாள். அவள், “நான் உமக்கு ஏதோ ஒன்றை சொல்ல வேண்டும் என்று இருக்கிறேன்” என்றாள். அவள், “நான் மரித்துக்கொண்டிருக்கிறேன், ஆனால்” “அது…நான் போவதற்கு பயப்படவில்லை. அது அழகாயிருந்தது” என்றாள். அவளோ, “ஒரே ஒரு காரியம் பில், உன்னை விட்டுப்போவதை மட்டுமே நான் வெறுக்கிறேன்” என்றாள். பின்பு அவள், “நீர் அந்த இரண்டு பிள்ளைகளையும் வளர்க்க வேண்டும் என்பதை நான் அறிவேன்” என்றாள். அவள், “நீர் தனிமையாக தங்கி என்னுடைய பிள்ளைகள் இங்கும் அங்குமாக அலைந்து திரிய விடமாட்டேன் என்று எனக்கு வாக்குறுதி செய்யும்” என்றாள். அது ஒரு இருபத்தொரு வயதுள்ள தாய்க்கான நல்லறிவுடைய காரியமாய் இருந்தது. நான், “ஹோப், நான் அதை வாக்களிக்கமாட்டேன்” என்றேன். 220 அவளோ, “தயவுசெய்து எனக்கு வாக்களியும்” என்றாள். பின்னும் அவள், “நான் உனக்கு ஒரு காரியத்தைச் சொல்ல விரும்புகிறேன்” என்றாள். மேலும் “உங்களுக்கு அந்த துப்பாக்கி நினைவிருக்கிறதா?” என்றாள். நான் துப்பாக்கியை குறித்து ஆர்வ வெறி கொண்டவன். எனவே அவள், “அந்த நாளன்று அந்த துப்பாக்கியை நீர் வாங்க வேண்டுமென்று விரும்பினீர். ஆயினும் உடனே முன் பணத்தை கொடுக்க உம்மிடத்தில் போதிய பணம் இல்லாதிருந்தது” என்றாள். நான், “ஆம்” என்றேன். 221 அவள், “உமக்காக அந்த துப்பாக்கிக்கு முன்பணத்தை செலுத்த முயற்சிக்க நான் என்னுடைய பணத்தை, என்னுடைய நிக்கல்களை நான் சேமித்துக் கொண்டிருந்தேன்” என்றாள். அவள், “இப்பொழுது இதெல்லாம் முடிந்த பின்னர், நீர் வீட்டிற்கு திரும்பிப் போய் அந்த மடிக்கும் மெத்தையின் மேல் பாரும். அதன் மேலாக இருக்கும் அந்த காகிதத்துண்டின் கீழே பாரும். நீர் அந்த பணத்தை அங்கே கண்டடைவீர்” என்றாள். அவள், “அந்த துப்பாக்கியை நீர் வாங்குவீர் என்று எனக்கு வாக்களியும்” என்றாள். 222 அந்த டாலரும், எழுபத்தைந்து சென்டுகளும் (நிக்கல்களாக) கிடைக்கிறதை நான் கண்டவுடன் நான் எப்படிப்பட்ட உணர்வுடையவனானேன் என்பதை நீங்கள் அறியீர்கள். பின்னர் நான் துப்பாக்கியை வாங்கினேன். 223 அவள், “எனக்கு ஒரு ஜோடி காலுறைகள் வாங்குவதற்காக நீர் நகர்புற கடைக்கு போய்க் கொண்டிருந்ததும், நாம் போட்வெயின் என்ற இடத்திற்கு போய்க்கொண்டிருந்ததும் உங்களுக்கு நினைவிருக்கிறதா?” என்று கேட்டாள். அதற்கு நான், “ஆம், நினைவிருக்கிறதே” என்றேன். 224 மீன்பிடித்துவிட்டு நான் உள்ளே வந்தேன். அப்பொழுது அவள்…நாம் “போர்ட்வெயின் என்ற இடத்திற்குப் போக வேண்டும் என்று கூறினாள்” என்றாள். ஆனால் அந்த இரவு நான் பிரசங்கிக்க வேண்டியதாய் இருந்தது. எனவே அவள், “உமக்கு தெரியும், ‘அங்கே இரண்டு வித்தியாசமான காலுறை வகைகள்’ இருக்கின்றன என்று நான் உமக்கு கூறினேன் அல்லவா?” என்றாள். ஒன்று “சிப்பான்” என்று அழைக்கப்பட்டது. இன்னொன்று என்ன ரேயானா? அது சரிதானே? ரேயானும், சிப்பானும், எதுவாக இருந்தாலும் சிப்பான்தான் சிறந்ததாயிருந்தது. அது சரிதானே? அவள், “நீங்கள் எனக்கு நீளமாய் உள்ள சில சிப்பான் காலுறைகளை வாங்கி வரவேண்டும்” என்றாள். அதன் மேல் முனையில், அந்த காலுறையின் பின்பாகத்தில் அந்த சிறிய பெயர் அதிலிருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமல்லவா? ஸ்திரீகளின் துணிகளைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியவில்லை, எனவே நான்… 225 நான் வீதியின் வழியாக போய்க் கொண்டு, “சிப்பான், சிப்பான், சிப்பான், சிப்பான்” என்று சொல்லிக்கொண்டே, சிப்பான், சிப்பான், சிப்பான் என்று அதை கவனித்தில் வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். யாரோ ஒருவர், “ஹலோ பில்லி” என்றார். 226 அதற்கு நான், “ஓ, ஹலோ, ஹலோ, சிப்பான், சிப்பான், சிப்பான், சிப்பான், சிப்பான்” என்று சொன்னேன். 227 நான் அந்த மூலையை அடைந்தேன். நான் திரு.ஸ்பன் அவர்களை சந்தித்தேன். அவர், “ஹே பில்லி, பெர்ச் என்ற மீன் அந்த கடைசி பாலத்தினுடைய தூணின் அந்த பக்கத்தை இப்பொழுது கடித்துக் கொண்டிருக்கிறது என்பது உனக்கு தெரியுமா?” என்றார். நான், “நிச்சயமாகவா?” என்று கேட்டேன். அவர், “ஆம்” என்றார். நான் அவரை விட்டுச் சென்றபோது, “அது என்ன பொருளாயிருந்தது?” என்று நான் நினைத்தேன். நான் அதை உடனடியாக மறந்துவிட்டேன். 228 எனவே நான் அறிந்த ஒரு பெண்ணாகிய தெல்மா போர்ட் என்பவள் பத்து செண்ட் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கே ஸ்திரீகளுடைய காலுறைகள் விற்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். எனவே நான் அங்கே போனேன். நான், “ஹீ தெல்மா” என்றேன். அவள், “ஹீ, பில்லி நீர் எப்படி இருக்கிறீர்? ஹோப் எப்படி இருக்கிறாள்?” என்று கேட்டாள். 229 நான், “அருமையாய் இருக்கிறோம்” என்றேன். நான், “தெல்மா எனக்கு ஒரு ஜோடி காலுறைகள் ஹோப்புக்காக வேண்டும்” என்றேன். அதற்கு அவள், “ஹோப்புக்கு அரை காலூறை வேண்டாமே” என்றாள். நானோ, “இல்லை பெருமாட்டியே நிச்சயமாக அவளுக்கு வேண்டும்” என்றேன். அதற்கு அவள், “நீங்கள் நீண்ட முழு காலுறையை சொல்லுகிறீர்கள் அல்லவா?” என்று கேட்டாள். 230 நான், “ஓ, நிச்சயமாக அதுதான்” என்றேன். நான், “ஹீ ஹீ நான் என் அறிவின்மையை காட்டிவிட்டேன்” என்றே நினைத்தேன். உடனே அவள், “அவளுக்கு எந்த ரகம் வேண்டும்?” என்று கேட்டாள். நான், “உ—ஓ!, ஹீ என்ன விதம் உங்களிடத்தில் இருக்கிறது?” என்று கேட்டேன். அதற்கு அவள், “எங்களிடத்தில் ரேயான் என்ற ரகம் இருக்கிறது” என்றாள். 231 எனக்கு அந்த வித்தியாசம் தெரியவில்லை. எனவே ரேயான் ரகமும், சிப்பான் ரகமும் எல்லாமே ஒரே மாதிரியாக இருந்தபடியால் நான், “அதுதான் எனக்கு தேவை” என்றேன். எனவே நான் “எனக்கு அவைகளில் முழுமையான மாதிரியிலுள்ளவைகளில் ஒரு ஜோடி கொடுங்கள்” என்றேன். நான் அந்த தவறானதை வாங்கிவிட்டேன். அது என்ன? உடலமைப்புடன் கூடிய உறைகள் “உடலமைப்புடன் கூடிய உறைகளை வாங்கிவிட்டேன்.” எனவே நான், “எனக்கு அவைகளில் ஒரு ஜோடி கொடு” என்றேன். 232 அவைகளை என்னிடத்தில் கொடுக்கும்படியாய் அவள் சென்றபோது அவைகள் கிட்டத்தட்ட முப்பது சென்டுகளோ, இருபது சென்டுகளோ அல்லது முப்பது சென்டுகளோ இருந்தன. ஏறக்குறைய பாதிவிலை. நான், “அவைகளில் இரண்டு ஜோடி கொடுங்கள்” என்றேன். புரிகின்றதா? 233 நான் வீட்டிற்கு திரும்பிச் சென்றேன். நான், “தேனே உனக்கு தெரியுமா? ஸ்திரீகளாகிய நீங்கள் பட்டணம் எல்லாம் போய் பேரம் பேசுகிறீர்கள்” என்றேன். அதைக் குறித்து எப்படி விமர்சிப்பது என்பது உங்களுக்கு தெரியும். நான், “ஆனால் இங்கே, இங்கே பார், நீ ஒரு ஜோடி வாங்கும் விலைக்கு நான் இரண்டு ஜோடி வாங்கி வந்தேன்” என்றேன். புரிகின்றதா? நான், “ஓ, அதுதான்—அதுதான் என்னுடைய சொந்த திறமை” என்றேன். பாருங்கள், நான் சொன்னேன்—நான், “உனக்கு தெரியுமா? தெல்மா இவைகளை எனக்கு விற்றாள்” என்றேன். நான், “அவள் அதை எனக்கு ஒருக்கால் பாதி விலைக்கு கொடுத்திருக்கலாம்” என்றேன். அவள், “நீர் சிப்பானை வாங்கினீரா?” என்று கேட்டாள். 234 அதற்கு நான், “ஆம், பெருமாட்டி” என்றேன். எனக்கு அது இரண்டும் ஒரே சத்தமாக இருந்தது. அங்கே எந்த வித்தியாசமும் இருக்கிறதாக எனக்கு தெரியவில்லை. 235 அப்பொழுது அவள் என்னிடம் கூறினாள், அதாவது அவள், “பில்லி” என்றாள். பின்னர் அவள் போர்ட் வெயினுக்கு போனபோது நான் வினோதமாய் நினைத்தேன். அவள் போய் இன்னொரு ஜோடி காலுறைகள் வாங்க வேண்டியதாயிருந்தது. அவள், “நான் அதை உங்களுடைய அம்மாவுக்கு கொடுப்பேன்” என்றாள். மேலும், “அவைகள் வயது சென்ற ஸ்திரீகளுக்கானது” என்றாள். அப்பொழுது, “நான் அதை செய்ததற்காக வருந்துகிறேன்” என்றேன். பின்னர் நான், “ஓ, அதெல்லாம் பரவாயில்லை தேனே” என்றேன். 236 அவள், “இப்பொழுது தனித்து ஜீவிக்காதீர்கள்” என்றாள். அவள் கூறினாள்…அப்பொழுதிலிருந்து இன்னும் சில மணி நேரத்திற்குள் என்ன சம்பவிக்க போவதாக இருந்தது என்பதை அவள் அறியவில்லை. தேவ தூதர்கள் அவளை கொண்டுபோதும்போது, அவளுடைய அருமையான கரங்களை நான் பற்றிக் கொண்டிருந்தேன். 237 நான் வீட்டிற்கு சென்றேன். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் இரவில் அங்கே படுத்திருந்தேன். எனக்கு…கேட்டது. அப்பொழுது அது ஒரு சிறிய எலி குட்டி என்று நினைக்கிறேன். நாங்கள் அங்கே சில காகிதங்கள் வைத்திருந்த அந்த பழைய தட்டத்தில் அதனுடைய சத்தம் கேட்டது. நான் என்னுடைய காலால் கதவை மூடினேன். அங்கேதான் அவளுடைய உள்ளங்கி (அங்கே அந்த சவக்கிடங்கில் கிடந்தது) பின்னாக தொங்கிக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்திற்குள் யாரோ ஒருவர் என்னை, “பில்லி” என்று அழைத்தார். அது சகோதரன். பிராங் பிராயாக இருந்தது. அவர், “உன்னுடைய குழந்தை மரித்துக் கொண்டிருக்கிறது” என்றார். நான், “என் குழந்தையா?” என்றேன். 238 “ஆம், சாரோன் ரோஸ் தான்” என்றார். அவர் “வைத்தியர் இப்பொழுது அங்கே இருக்கிறார். ‘அவளுக்கு ஷயரோக தண்டு மூளை கவிகைச்சவ்வழற்சி நோய் இருக்கிறது. அவள் அதை தாயிடமிருந்து பெற்றுக்கொண்டாள்’ என்றார். அவள் மரித்துக் கொண்டிருக்கிறாள்” என்றார். 239 நான் என்னுடைய காரில் ஏறி அங்கே சென்றேன். அந்த இனிமையான் சிறுபிள்ளை அங்கே இருந்தாள். அவர்கள் அவளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல விரைந்தனர். 240 நான் அவரை பார்க்கும்படி வெளியே சென்றேன். அப்பொழுது சாம் மேலே வந்து, “பில்லி, நீ அந்த அறைக்குள் போகாதே. நீர் பில்லிப்பாலை சற்று யோசித்து பார்க்க வேண்டும். அவள் மரித்துக் கொண்டிருக்கிறாள்” என்றார். நான், “வைத்தியரே, நான்—நான் என் குழந்தையை பார்த்தாக வேண்டும்” என்றேன். 241 அவர், “இல்லை, நீ உள்ளே போகமுடியாது” என்றார். “அவளுக்கு தண்டு மூளை கவிகைச்சவ்வழற்சி நோய் இருக்கிறது. பில்லி, நீ அதை பில்லிபாலுக்கு சுமந்து கொண்டு போவாய்” என்றார். 242 அவர் வெளியே போகும்வரை நான் காத்திருந்தேன். அவள் மரிப்பதை என்னால் நின்று பார்க்கமுடியவில்லை. அவளுடைய தாயார் அங்கே அடக்கம் செய்பவர்களின் ஸ்தலத்தில் இருந்தாள். மீறுதலுக்குட்பட்டவர்களின் வழி கடினமானது என்பதை நான் உங்களுக்கு சொல்லுகிறேன். பின்னர் நான்—நான் மெதுவாக கதவுக்குள்ளே சாமும், மருத்துவச்ச்சியும் போனவுடனே நுழைந்தேன். நான் கிழே இறங்கி அடித்தளத்திற்கு சென்றேன். அது ஒரு மிகச் சிறிய மருத்துவமனை. அவள் ஒரு தனிமையான இடத்தில் இருந்தாள். அவளுடைய கண்களில் ஈக்கள் இருந்தன. அவர்கள் ஒரு சிறிய…நாம் கொசுவலை என்றழைக்கிற இல்லை சிறிய வலையை அவளுடைய கண்களின் மேல் போட்டிருந்தார்கள். அவள்…சிறு வலிப்புடன் அவளுடன் சிறிய தட்டையான கால்கள் மேலும் கீழுமாக இந்த விதமாக அசைய, அவளுடைய சிறிய கரங்கள் அந்த வலிப்போடு அசைந்து கொண்டிருந்தன. நான் அவளை நோக்கிப் பார்த்தேன். மிகவும் அழகாக இருக்கத்தக்கதாக சுமார் எட்டு மாத வயதுள்ளவளாய், அவள் போதுமான அளவு பெரியதாயும் இருந்தாள். 243 அவளுடைய தாயார் வழக்கமாக அங்கே வெளியே மூன்று மூலைகளின் மேல், உங்களுக்கு தெரியுமே, நான் உள்ளே வரும்போது முற்றத்தில் அவளை உட்கார வைப்பாள். நான் காரின் எச்சரிக்கை ஒலிக்கருவியில் சத்தம் எழுப்புவேன். அவள், “குகூ—குகூ, குகூ, குகூ” என்று ஓடி என்னண்டை வர பார்ப்பாள். உங்களுக்கு தெரியுமா? 244 என் அன்பார்ந்தவள் அங்கே படுத்து மரித்துக் கொண்டிருக்கிறாள். நான் கீழ்நோக்கி அவளை பார்த்தேன். நான் “சாரி (Sharry) உனக்கு அப்பாவைத் தெரியுதா? சாரி, அப்பாவை உனக்கு தெரியுதா?” என்று கேட்டேன். அவள் நோக்கிப் பார்த்தபோது, அவளுடைய அழகான சிறிய நீலக்கண்களில் ஒன்று குறுகிப் போகுமளவிற்கு அவள் அவ்வளவு கடினமாக வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாள். அது என்னுடைய இருதயத்தையே என்னிலிருந்து கிழித்துவிடும் போலிருந்தது. 245 நான் முழங்காற்படியிட்டு, “கர்த்தாவே நான் என்ன செய்திருக்கிறேன்? நான் தெரு மூலைகளில் சுவிசேஷம் பிரசங்கிக்கவில்லையா? நான் செய்யும்படி அறிந்திருந்த எல்லா காரியங்களையும் நான் செய்திருக்கிறேனே. எனவே இதை எனக்கு எதிராக பிடியாதேயும். நான் அந்த ஜனங்களை ஒருபோதும் ‘குப்பை’ என்று அழைக்கவில்லையே. அந்த ஜனங்களை ‘குப்பை’ என்று அழைத்தது அவள்தானே” என்றேன். நான், “அதெல்லாம் சம்பவித்ததற்காக நான் வருந்துகிறேன். என்னை மன்னியும். என் குழந்தையை எடுத்துக் கொள்ளாதேயும்” என்றேன். நான் ஜெபித்துக் கொண்டிருக்கையில், ஒரு கறுத்த காகிதத்தைப் போன்று…இல்லை ஒரு துணிபோன்று கீழே வந்தது. அவர் எனக்கு செவிகொடுக்க மறுத்துவிட்டார் என்பது எனக்கு தெரியும். 246 அது என்னுடைய ஜீவியத்தில் மிகுந்த கடினமானதும், மிகுந்த அவநம்பிக்கையான நேரமாயும் இருந்தது. நான் எழும்பி அவளை நோக்கி பார்த்தபோது நான் நினைத்தேன்…அப்பொழுது சாத்தான் என் சிந்தனையில், “நீ எவ்வளவு கடினமாக பிரசங்கிக்க கூடுமோ அவ்வளவு பிரசங்கித்தாயே, நீ ஜீவித்த விதத்திற்கும், இப்பொழுது உன்னுடைய சொந்த குழந்தை என்பதற்கு வரும்பொழுது, அவர் உன்னை மறுத்து விடுவதா?” என்பதை போட்டான். 247 அதற்கு நான், “அது சரிதான். அவரால் என் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என்றால் அப்பொழுது என்னாலும் முடியாது…” என்றேன். பின்னர் நான் நிறுத்திக் கொண்டேன். என்ன செய்வதென்றே எனக்கு—எனக்குத் தெரியவில்லை. பின்னர் நான் இதை கூறினேன். நான், “கர்த்தாவே, நீரே அவளை எனக்கு கொடுத்தீர், நீர் அவளை எடுத்துக் கொண்டீர். கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம், நீர் என்னையும் கூட எடுத்துக் கொண்டாலும் நான் இன்னமும் உம்மை நேசிப்பேன்” என்றேன். 248 நான் என்னுடைய கரத்தை அவளுடைய கரத்தின் மேல் வைத்து, “இனிய இருதயமே, நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன். அப்பா உன்னை வளர்க்க வேண்டும் என்று விரும்பினேன். என் முழு இருதயத்தோடும், உன்னை வளர்க்க வேண்டும் என்று விரும்பினேன். கர்த்தரை நீ நேசிக்கும்படி உன்னை வளர்க்க வேண்டுமென்று விரும்பினேன். ஆனால் உனக்காக தூதர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இனிய இருதயமே அப்பா உன்னுடைய சிறிய சரீரத்தை எடுத்துக்கொண்டு போய், உன்னுடைய தாயின் கரங்களில் கிடத்துவேன். நான் அவளோடு உன்னை அடக்கம் பண்ணுவேன். என்றோ ஒரு நாள் அப்பா உன்னை சந்திப்பார். நீ அங்கே அம்மாவோடு காத்திரு” என்றேன். 249 அவளுடைய தாயார் மரித்துக் கொண்டிருக்கும்பொழுது அவள் சொன்னாள், அதாவது அவள் கூறின கடைசி வார்த்தைகள், “பில், ஊழியத்தில் தரித்திரு” என்றாள். 250 அதற்கு நான், “நான் தரித்திருப்பேன்.” அவள் கூறினாள்…நான், “அவர் வரும்பொழுது நான் ஊழியத்தில் இருந்தால், நான் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வந்து சந்திப்பேன். அப்படியாய் இல்லையென்றால் நான் உன் பக்கத்தில் அடக்கம் பண்ணப்படுவேன். நீ அந்த மகத்தான வாசலின் வலது கைப்பக்கமாக போ. அவர்களெல்லோரும் உள்ளே வருவதை நீ காணும்பொழுது அங்கே நின்று, ‘பில், பில், பில்’ என்று உன்னால் முடிந்த அளவு சத்தமாக கூச்சலிட நான் அங்கே உன்னை சந்திப்பேன்” என்றேன். நான் அவளுக்கு பிரியா விடை கொடுத்து முத்தமிட்டேன். இன்றைக்கோ நான் யுத்த களத்தில் இருக்கிறேன். இது ஏறக்குறைய இருபது வருடங்களுக்கு முன் நடந்தது. நான் என் மனைவியோடு என்னுடைய நாளை குறித்துக் கொண்டேன். நான் அவளை சந்திக்கப்போகிறேன். 251 நான் அந்த சிறிய குழந்தையை எடுத்து, அது மரித்தபொழுது அவளுடைய தாயின் கரங்களில் வைத்தேன். நாங்கள் அதை கல்லறை பூமிக்கு கொண்டு சென்றோம். மெதோடிஸ்ட் பிரசங்கியாரான சகோதர ஸ்மித் அடக்க ஆராதனையில் பிரசங்கித்ததை கேட்க நான் அங்கே நின்றேன். “சாம்பலிலிருந்து சாம்பலுக்கும், மண்ணிலிருந்து மண்ணுக்கும்” என்று பிரசங்கித்தார். (நான், “இருதயத்திலிருந்து இருதயத்திற்கு” என்று எண்ணிக்கொண்டேன்.) அவள் சென்றுவிட்டாள். 252 அதற்குப் பின்னர் அண்மையில் நான் ஒரு நாள் காலையில் சிறிய பில்லியை அங்கே கொண்டு போனேன். அவன் ஒரு சிறிய பையனாய் இருந்தான். அவன்… 253 அந்த காரணத்தினால்தான் அவன் என்னோடு ஒட்டியிருப்பான். நான் அவனோடு ஒட்டியிருக்கிறேன். நான் இவனுக்கு அப்பா, அம்மா (இரண்டுமாக) இருக்க வேண்டியதாயிருந்தது. நான் அவனுடைய சிறிய புட்டியைக் கொண்டு செல்வேன். அவனுடைய பாலை சூடாக வைக்க இரவு நேரத்தில் நாங்கள் தீக்கொளுத்த முடியாது. இந்த விதமாக அதை என்னுடைய முதுகுக்கு கீழே வைத்துக் கொண்டு, என்னுடைய சரீரத்தின் சூட்டினால் அதை சூடாக வைத்துக்கொள்வேன். 254 நாங்கள் நண்பர்களைப் போன்றே ஒன்றாக இணைந்திருக்கிறோம். இந்நாட்களிலொன்றில் நான் ஊழியத்தை விட்டுப் போகும்பொழுது, நான் அவனிடத்தில் வார்த்தையை கொடுக்க விரும்புகிறேன். அப்பொழுது நான், “பில்லி போ, நீ அதனோடு தரித்திரு” என்பேன். நான் ஏன் அவனை எல்லா நேரங்களிலும் என்னோடே வைத்திருக்கிறேன் என்று சில ஜனங்கள் வியக்கிறார்கள். என்னால் அவனை விட்டுவிட முடியாது. அவன் திருமணமும் செய்து கொண்டான், ஆனால், “அவனோடு கூட இரும்” என்று அவள் என்னிடத்தில் கூறினது எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது. நாங்கள் நண்பர்களைப் போன்றே ஒன்று சேர்ந்திருக்கிறோம். 255 பட்டணத்தைச் சுற்றி நான் நடந்து போகையில் என் கரத்திற்கு அடியில் புட்டியை வைத்துக் கொண்டு இருப்பது எனக்கு நினைவிருக்கிறது. அவன் அழ ஆரம்பித்து விடுவான். ஒரு இரவு அவன்…பின்முற்றத்தில் நடந்து கொண்டிருந்தான்…(அவனை வைத்துக் கொள்ள அவள் ஆயத்தப்படுகையில், அவள் புகையினால் மூச்சு திணறிக்கொண்டிருந்தாள். நான்…உங்களுக்கு தெரியும் அவளோ வெறுமனே ஒரு சிறு பெண்). அந்த பழைய ஓக் மரத்திலிருந்து நான் முன்னும் பின்னுமாக பின் முற்றத்தில் நடந்து கொண்டிருந்தேன். அவனோ அவனுடைய தாய்க்காக அழுது கொண்டு இருந்தான். அவனைக் கொண்டு போகத்தக்கதாக என்னிடத்தில் எந்த அம்மாவும் இல்லை. நான் அவனை தூக்கிக் கொண்டு “ஓ, தேனே” என்று நான் கூறுவேன். நான் சொன்னேன்… 256 அவன், “அப்பா, என்னுடைய அம்மா எங்கே? நீங்கள் அவளை அந்த பூமிக்குள் போட்டுவிட்டீர்களா?” என்று கேட்டான். நான், “இல்லை தேனே, அவள் நன்றாயிருக்கிறாள், அவள் மேலே பரலோகத்தில் இருக்கிறாள்” என்றேன். 257 ஓர் நாள் பிற்பகல் அங்கே அவன் கூறின ஒரு காரியம் என்னை கொன்றது போலிருந்தது. அவன் அழுது கொண்டிருந்தான். நீண்ட நேரமாக சாயங்காலத்தில் நான் அவனை என் முதுகின் மேல் இவ்விதமாக சுமந்து கொண்டிருந்தேன். என் தோளின் மேல் சுமந்து கொண்டு இந்தவிதமாக அவனை தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அவன், “அப்பா தயவு செய்து அம்மாவை கொண்டு வாருங்கள்,” “அவளை கொண்டு வாருங்கள்” என்றாள். நான், “தேனே, என்னால் அம்மாவைக் கொண்டு வரமுடியாது. இயேசு…” என்றேன். அவன், “சரி என்னுடைய அம்மாவை அனுப்பும்படி இயேசுவிடம் கூறுங்கள். எனக்கு அவள் வேண்டும்” என்றான். 258 நான், “தேனே, நான்…நானும் நீயும் ஒரு நேரத்தில் அம்மாவை பார்க்கப்போகிறோம்” என்றேன். அவன் நிறுத்திவிட்டு, “அப்பா” என்றான். நான், “என்ன?” என்றேன். நான், “அம்மாவை உயரே அங்கே அந்த மேகத்தில் பார்த்தேன்” என்றான். 259 என்னே அது, என்னை கொன்றது போலிருந்ததே! நான், “என்னே! ‘நான் அம்மாவை அங்கே அந்த மேகத்தில் கண்டேன்’” என்று கூறியதையே நினைத்திருந்தேன். நான் ஏறக்குறைய மயக்கமுற்றேன். நான் அந்த சிறுவனை அப்படியே என் மார்பில் இந்தவிதமாக அணைத்துக்கொண்டு என் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு உள்ளே சென்றேன். 260 நாட்கள் கடந்தன. என்னால் அதை மறுக்கவே முடியவில்லை. நான் வேலைசெய்ய முயற்சித்தேன். வீட்டிற்கு திரும்பிப் போக முடியவில்லை. அதற்குப்பின் அது ஒரு வீடாகவே இல்லாதிருந்தது. ஆனாலும் நானோ தங்கியிருக்க விரும்பினேன். அந்த பழைய உடைந்துபோன தட்டுமுட்டு பொருட்களைத் தவிர எங்களிடத்தில் ஒன்றுமே இல்லை. ஆனால் நானும் அவளும் சேர்ந்து அனுபவித்த ஏதோ ஒரு பொருள் இருந்தது. அது அந்த வீடாயிருந்தது. 261 ஒரு நாள் நான் பொதுப்பணித்துறையில் வேலை செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தது எனக்கு நினைவிருக்கிறது. ஒரு பழைய மின்சார கம்பி தொங்கிக்கொண்டிருந்ததை சரியாக வைக்க நான் உயரே சென்றேன். அது உண்மையாகவே அதிகாலையாக இருந்தது. நான் இந்த கம்பத்தில் அந்த குறுக்குக்கம்பி வரும்வரை மேலே ஏறினேன். (என்னால் அந்த குழந்தையை விட்டுவிட முடியவில்லை. என் மனைவி போகின்றதை என்னால் காண முடிந்தது. ஆனால் அந்த குழந்தை போய்க்கொண்டிருந்தது. அது ஒரு மிகச் சிறிய குழந்தையாயிருந்தது.) நான் அங்கே மேலே இருந்தேன். அப்பொழுது நான், “தூரத்திலுள்ள ஒரு குன்றின் மேல் ஒரு பழைய கரடுமுரடான சிலுவை நின்றது” என்ற பாடலை பாடிக்கொண்டிருந்தேன். மின்கல அடுக்குகளுக்கு கீழாக மின்னியல் விசை மாற்றமைவுக்கு ஓடி மேலாக மின்சார கம்பிச்சுருளுக்குள்ளாக போகின்றது என்பதை (நீங்கள் அறிவீர்கள்.) அதின் மேல் நான் அங்கே உயரே தொங்கிக் கொண்டிருந்தேன். நான் பார்க்க நேர்ந்தபொழுது சூரியன் எனக்குப் பின்னாக மேலெழும்பி வந்து கொண்டிருந்தது. அங்கே என்னுடைய கரங்கள் விரிக்கப்பட்டிருக்க மலைச்சரிவின் மேல் சிலுவையின் அடையாளமாய் காணப்பட்டது. நான், “ஆம், என்னுடைய பாவங்கள்தான் அவரை அங்கே போட்டது” என்பதை எண்ணிப் பார்த்தேன். 262 அதன்பின்பு நான், “சாரோன், தேனே அப்பா உன்னைக் காண்பதற்கு மிகவும் வாஞ்சையாய் இருக்கிறார், தேனே. அருமையான சிறிய குழந்தையாகிய உன்னை, மீண்டுமாய் என்னுடைய கரங்களில் உன்னைப் பற்றிக்கொண்டிருக்க நான் எப்படியாய் வாஞ்சிக்கிறேன்” என்றேன். நான் என்னையே மறந்து உணர்விழந்தவனானேன். நான் வாரக்கணக்கில் அவ்வாறு இருந்து வந்தேன். நான் என்னுடைய ரப்பர் கை உறைகளை கழற்றினேன். எனக்கு பக்கமாக இரண்டாயிரத்து முந்நூறு வோல்ட் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. என் ரப்பர் கையுறைகளை கழற்றிவிட்டேன். நான், “தேவனே, நான் இதை செய்ய வெறுக்கிறேன். நான் ஒரு கோழையாயிருக்கிறேன்” என்றேன். “ஆனால், சாரி, அப்பா உன்னையும், அம்மாவையும் இன்னும் சில நிமிடங்களில் காணப் போகிறேன்” என்றேன். அந்த இரண்டாயிரத்து முந்நூறு வோல்டில் என் கரத்தை வைக்கும்படியாக என்னுடைய கையுறைகளை உருவிக்கொண்டிருந்தேன். அது உடைந்துபோகும்…ஏன்? உங்களுடைய சரீரத்தில் ஒரு சொட்டு இரத்தம்கூட மீதியாய் இருக்காது. என்னுடைய கையுறைகளை கழற்ற நான்—நான்—நான் அதை இழுத்துக் கொண்டிருக்கும்போது ஏதோ காரியம் சம்பவித்தது. எனக்கு சுயநினைவு வந்தபோது நான் தரையின் மேல் உட்கார்ந்து கொண்டு என்னுடைய கரங்களை இவ்விதமாய் என் முகத்திற்கு மேல் வைத்து அழுது கொண்டிருந்தேன். அது தேவனுடைய கிருபையாய் இருந்தது. இல்லையென்றால் இங்கே நான் ஒரு சுகமளிக்கும் ஆராதனையை நடத்திக்கொண்டிருந்திருக்கமாட்டேன். நான் அதைக் குறித்து நிச்சயமாய் இருக்கிறேன். அவருடைய வரத்தை பாதுகாத்துக் கொண்டிருந்தது நானல்ல. அது அவராக இருந்தது. 263 நான் வீட்டிற்கு புறப்பட்டேன். என்னுடைய கருவிகளையெல்லாம் தூர போட்டு, நான் அவைகளை விட்டுவிட்டேன். அவர்களிடம் திரும்பிப்போய் “நான் வீட்டிற்கு போகிறேன்” என்று கூறினேன். 264 நான் வீட்டை சுற்றிப் பார்த்தபோது வீட்டிற்கு தபாலில் வந்த கடிதங்களை எடுத்துக்கொண்டேன். ஒருவிதமாக குளிராய் இருந்ததை உணர்ந்தபடியால் உள்ளே சென்றேன். எங்களுக்கு ஒரு சிறிய அறை இருந்தது. அங்கே நான் ஒரு சிறிய கட்டிலின் மேல் உறங்கிக்கொண்டிருந்தேன். உறைபனி உள்ளே வந்து கொண்டிருந்தது. அங்கே அந்த பழைய செயற்கை வெப்ப அடுப்பு இருந்தது. நான் தபாலை எடுத்துப் பார்த்தேன். அதில் காணப்பட்ட முதற்காரியம் அவளுடைய சிறிய கிறிஸ்துமஸ் சேமிப்பு, “குமாரி சாரோர்ன் ரோஸ் பிரான்ஹாமுக்கு” எண்பது சென்டுகள் அங்கே இருந்தது. அங்கே அது இருந்தபடியால் முழுவதுமாக மீண்டும் எல்லாவற்றையும் பார்த்தேன். 265 நான் ஒரு வேட்டைக்காவலனாய் இருந்தேன். நான் உள்ளே சென்று என்னுடைய துப்பாக்கியை, கைத்துப்பாக்கியை அதின் உறையிலிருந்து வெளியே எடுத்தேன். நான், “கர்த்தாவே, என்னால்—என்னால் இனி தொடர்ந்து ஜீவிக்க முடியாது. எனவே நான்—நான் மரிக்கிறேன். நான்—நான் அவ்வளவாய் துன்புறுத்தப்படுகிறேன்” என்றேன். நான் துப்பாக்கியிலுள்ள விசை இழுப்பை பின்னால் இழுத்தவாறு அதை என்னுடைய தலையில் குறிவைத்து கட்டிலின்மேல் அங்கே இருட்டில் முழங்காலில் இருந்தேன். அப்பொழுது நான், “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக, உம்முடைய ராஜ்யம் வருவதாக, உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக” என்றேன். நான் சுட்டுக்கொள்ள முயற்சிக்கையில் என்னால் முடிந்த அளவு கடினத்தோடு துப்பாக்கியின் விசையிழுப்பை அழுத்தினேன். நான், “பரமண்டலத்தில் செய்யப்படுவது போல பூமியிலே செய்யப்படுவதாக, எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்” என்றேன். அது வெடிக்கவில்லை. 266 நான், “ஓ தேவனே, நீர் என்னை துண்டு துண்டாக கிழிக்கின்றீரா? நான் என்ன செய்தேன்? நீர் என்னை மரிக்கவும் விட மறுக்கிறீரே” என்று எண்ணினேன். நான் துப்பாகியை கீழே எறிந்தேன். அது அந்த அறையில் வெடித்தது. நான், “தேவனே, நான் ஏன் மரித்து, அதிலிருந்து வெளிவரக்கூடாது? என்னால் இனி தொடர்ந்து ஜீவிக்க முடியவில்லையே. நீர் எனக்கு ஏதாவது காரியம் செய்தாக வேண்டும்” என்றேன். நான் அப்படியே விழுந்து என்னுடைய சிறிய பழைய அழுக்கான அங்கே இருந்த அறையில் அழ துவங்கினேன். 267 நான் அப்படியே தூங்கி இருக்க வேண்டும். நான் தூக்கத்திலிருந்தேனோ அல்லது என்ன சம்பவித்ததோ எனக்கு தெரியாது. 268 நான் மேற்கு பக்கமாய் இருக்க எப்பொழுது வாஞ்சிப்பேன். நான் எப்பொழுதுமே அவர்களுடைய தொப்பிகளில் ஒன்றை அணிந்துகொள்ள விரும்புவேன். என்னுடைய தகப்பனார் அவருடைய வாலிப நாட்களில் குதிரைகளை அடக்குவார். நான் அவர்களுடைய தொப்பிகளில் ஒன்றை எப்பொழுதுமே அணிந்து கொள்ள விரும்பினேன். சகோதரன் டீமாஸ் ஷ்காரியன் நேற்று எனக்கு ஒன்றை வாங்கித் தந்தார். என்னிடத்தில் முதலில் (இருந்த) ஒன்று அதைப்போன்று இருந்ததில்லை. அந்தவிதமான அவர்களுடைய மேற்கத்திய தொப்பிகளில் ஒன்று. 269 நான் பரந்த புல்வெளியினூடாக தொடர்ந்து, “அந்த நான்கு சக்கர பாரவண்டியில் ஒரு சக்கரம் உடைந்திருக்கிறது. பண்ணையின் மேல் அடையாளம், ‘விற்பதற்காக’ என்ற அந்த பாடலை பாடிக்கொண்டே போய்க்கொண்டு இருக்கிறதாக” நினைத்தேன். நான் தொடர்ந்து போகையில், ஒரு பழைய மூடப்பட்ட நான்கு சக்கர பாரவண்டியை கவனித்தேன். ஒரு பழைய பரந்த உறுதியான பாத்திரம் போன்று இருந்தது. சக்கரமோ உடைந்திருந்தது. நிச்சயமாக அது என்னுடைய முறிந்துபோன குடும்பத்திற்கு பிரதிநிதித்துவமாய் இருந்தது. நான் நெருங்கி வந்தபோது, நான் நோக்கிப் பார்த்தேன். அங்கே உண்மையாகவே அழகான ஒரு—ஒரு வாலிபப்பெண், சுமார் இருபத்தி மூன்று வயதிருக்கும். வெண்மையாக பறந்து கொண்டிருக்கும் தலைமுடியும், நீல கண்களும், வெண்மையான உடையும் உடுத்தி இருக்கக் கண்டேன். நான் அவளை நோக்கிப் பார்த்தேன். நான், “நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள்?” என்றேன். பின்னர் கடந்து சென்றேன். அவள், “ஹலோ அப்பா” என்றாள். 270 நான் அப்படியே திரும்பினேன். நான், “அப்பாவா?” என்று கேட்டேன். நான், “ஏன், குமாரி, நீ…நீ என்னைப் போன்ற வயதுடையவளாய் இருக்கும்போது, நான் எப்படி உன்னுடைய அப்பாவாக இருக்க முடியும்?” என்று கேட்டேன். 271 அவள், “அப்பா நீர் எங்கிருக்கிறீர் என்று உமக்கு தெரியவில்லையா?” என்று கேட்டாள். அப்பொழுது நான், “நீ என்ன சொல்லுகிறாய்?” என்றேன். 272 அதற்கு அவள், “இது பரலோகம்” என்றாள். “பூமியின் மேல் நான் உம்முடைய குட்டி சாரோனாக இருந்தேன்” என்றாள். நான், “ஏன், தேனே, நீ ஒரு சின்ன குழந்தையாய் இருந்தாயே” என்றேன். 273 “அப்பா, சிறு குழந்தைகள் இங்கே சிறுகுழந்தைகள் அல்ல. அவர்கள் அழிவில்லாதவர்கள். அவர்களுக்கு வயதாகிப் போவதில்லை, அதாவது அவர்கள் ஒருபோதும் வளருவதில்லை” என்றாள். 274 நான், “நல்லது, சாரோன், தேனே, நீ ஒரு அழகான வாலிப ஸ்திரீயாய் இருக்கிறாயே” என்றேன். அவள், “அம்மா உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறாள்” என்றாள். நான், “எங்கே?” என்று கேட்டேன். அவள், “உயரே உம்முடைய புதிய வீட்டிலே” என்றாள். 275 நான், “புதிய வீட்டிலா?” என்று கேட்டேன். பிரான்ஹாம்கள் நாடோடிகளாக இருக்கின்றனரே. அவர்களுக்கு வீடுகளே கிடையாது. நான், “தேனே, எனக்கு வீடே இருந்ததில்லையே” என்றேன். 276 அதற்கு அவள், “ஆனாலும் அப்பா உமக்கு இங்கே மேலே ஒன்று இருக்கிறது” என்றாள். ஒரு குழந்தையாய் இருக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. ஆனால் அது அவ்வளவு உண்மையாக எனக்கு இருக்கிறது. [சகோதரன் பிரான்ஹாம், “அழுகிறார்”—ஆசி.] அதைக் குறித்து நான் சிந்திக்க துவங்குகையில் அவை அனைத்தும் மீண்டுமாய் நினைவுக்கு வருகின்றன. மேலும், “அப்பா இங்கே உமக்கு ஒன்று இருக்கிறது” என்றாள். அங்கே எனக்கு ஒன்று இருக்கிறது என்று எனக்கு தெரியும். என்றோ ஒரு நாள் அங்கு நான் செல்வேன். அவள், “பில்லிபால், என்னுடைய சகோதரன் எங்கே?” என்று கேட்டாள். 277 அதற்கு நான், “நான் அவனை திருமதி.பிராயிடம் ஒரு சில நிமிடங்களுக்கு முன்புதான் விட்டுவிட்டு வந்தேன்” என்றேன். மேலும் தொடர்ந்து அவள், “அம்மா உம்மை பார்க்க விரும்புகிறாள்” என்றாள். 278 நான் திரும்பி பார்த்தேன். அங்கே மகத்தான பெரிய அரண்மனைகள் இருந்தன. தேவனுடைய மகிமை அவைகளை சுற்றிலுமாய் இருந்தது. நான், “என் வீடு இனிமையான வீடு” என்று தூதர்களின் பாடல்குழு பாடிக்கொண்டிருக்கிறதை கேட்டேன். நீண்ட படிகளின் வழியாக வேகமாக என்னால் முடிந்த அளவுக்கு வேகமாக ஓடத்தொடங்கினேன். நான் கதவண்டை வந்தபோது அங்கே அவள் ஒரு வெண்மையான வஸ்திரம் தரித்தவளாய், அந்த கருமையான நீண்ட தலைமுடி அவளுக்குப் பின்னாக கீழே தொங்கிக் கொண்டிருக்க நின்றாள். அவள் தன்னுடைய கரங்களை உயர்த்தினாள். நான் வீட்டிற்கு வேலையிலிருந்து அல்லது வேறொரு காரியத்திலிருந்து களைப்பாய் வரும்போது அவள் வழக்கமாக செய்வதுபோல் உயர்த்தினாள். நான் அவளை கரங்களால் பற்றிப்பிடித்து, “தேனே, நான் சாரோனை கீழே பார்த்தேன்” என்றேன். நான் “அவள் ஒரு அழகான பெண்ணாய் ஆகிவிட்டாளே, அவள் அப்படியாகவில்லையா?” என்று கேட்டேன். 279 அதற்கு அவள், “ஆம், பில்” என்றாள். அவள், “பில்” என்று கூறி அவளுடைய கரங்களை என்னைச் சுற்றி, என்னுடைய தோள்களைச் சுற்றி போட்டுக்கொண்டு அவள் என்னை தட்டிக் கொடுக்கத் துவங்கி, (அவள் கூறினாள்) “என்னையும், சாரோனையும் குறித்து கவலைப் படுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்” என்றாள். நான், “தேனே, என்னால் அதை தவிர்க்க முடியவில்லையே” என்றேன். 280 அவள், “நானும், சாரோனும் உம்மை விட மேன்மையாய் இருக்கிறோம். எங்களைக் குறித்து இனி கவலைப்பட வேண்டாம். எனவே, நீர் அவ்வாறு கவலைப்படமாட்டீர் என்று எனக்கு வாக்களிப்பீரா?” என்று கேட்டாள். 281 அதற்கு நான், “ஹோப், நான் உனக்காகவும், சாரோனுக்காகவும் அவ்வளவு தனிமையாய் இருக்கிறேன். பில்லி எல்லா நேரத்திலும் உனக்காக அழுகிறான். நான், அவனோடு என்ன செய்வதென்றே எனக்கு தெரியவில்லை” என்றேன். 282 அவள், “அதெல்லாம் சரியாகிவிடும் பில்” என்றாள். மேலும் அவள், “இனி நீர் கவலைப்பட மாட்டீர் என்று எனக்கு வாக்களியும்” என்றாள். பின்னர் அவள், “உட்காரமாட்டீரா?” என்று கேட்டாள். அப்பொழுது நான் சுற்றும் முற்றும் பார்த்தபோது அங்கே ஒரு மகத்தான பெரிய நாற்காலி இருந்தது. 283 ஒரு நாற்காலி வாங்க நான் முயற்சித்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது. இப்பொழுது முடிக்கும்போது இதை கூறுகிறேன். ஒரு சமயம் நான் ஒரு நாற்காலி வாங்க முயற்சித்தேன். எங்களிடத்தில் சாதாரண அந்த பழைய மரத்தாலான அடிபாகம் கொண்ட நாற்காலிகள்தான் காலை சிற்றுண்டிக்கு பயன்படுத்தப்படும் நாற்காலியாக இருந்தது. அவைகளைத்தான் நாங்கள் உபயோகிக்க வேண்டியதாயிருந்தது. அவைகள் மட்டும்தான் எங்களிடம் இருந்தது. பின்னாக தள்ளி சாய்ந்து கொள்ளும்படியான நாற்காலிகளில் ஒன்றை எங்களால் வாங்க முடிந்தது…அது எந்தவிதமான ஓய்வெடுக்கும் நாற்காலி என்பதை நான் மறந்துவிட்டேன். அதின் விலை பதினேழு டாலர்கள். நீங்கள் மூன்று டாலரகள் முன்பணம் கொடுத்து வாரத்திற்கு ஒரு டாலர் கட்டலாம். நாங்கள் ஒன்றை வாங்கினோம். ஓ, நான் உள்ளே வரும்பொழுது…, நான், நான் முழுவதுமாக வேலை செய்து, நடு இரவு வரை வீதிகளைச் சுற்றியும் எங்கெல்லாம் பிரசங்கிக்கக்கூடுமோ அங்கெல்லாம் பிரசங்கித்துவிட்டு வருவேன். 284 ஒரு நாள் என்னுடைய தவணையை செலுத்துவதில் தவறிப்போனேன். எங்களால் அதை சரியாக கட்ட முடியவில்லை. நாளுக்கு நாள் அந்த தவணைப்பணம் அதிகரித்து விட்டது. முடிவில் ஒரு நாள் அவர்கள் வந்து என்னுடைய நாற்காலியை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். அந்த இரவை என்னால் ஒரு போதும் மறக்கவே முடியாது. அவள் எனக்கு செர்ரி பழத்தை சமைத்திருந்தாள். பாவம் சிறிய பழைய காரியம். நான் மனமுறிவடையப் போவதை அவள்—அவள்—அவள் அறிந்திருந்தாள். இரவு ஆகாரத்திற்குப் பின்னர் நான், “தேனே இன்றிரவு நீ எவ்வளவு நன்றாய் இருப்பதைக் குறித்து என்ன?” என்று கேட்டேன். 285 அவள், “அண்டை வீட்டிலிருக்கிற பையன்களைக் கூப்பிட்டு பள்ளம் தோண்டி மீன்பிடிக்கும் புழுக்களை எடுத்து வைத்திருக்கிறேன். நாம் சிறிது நேரத்திற்கு ஆற்றுக்குப்போய் மீன்பிடித்தாக வேண்டும் என்று நீர் நினைக்கவில்லையா?” என்று கேட்டாள். அதற்கு நான், “ஆம், போகலாம், ஆனால்…” என்றேன். 286 அவள் அழ ஆரம்பித்துவிட்டாள். அங்கே ஏதோ காரியம் தவறாக இருந்தது என்று எனக்கு தெரியும். எனக்கு ஒரு கருத்து இருந்தது. ஏனென்றால் அதை எடுத்துக்கொண்டு போக அவர்கள் வருவதாக ஏற்கனவே ஒரு அறிவிப்பை அனுப்பியிருந்தனர். எங்களால் அந்த வாரத்திற்கான ஒரு டாலர் தவணையை செலுத்த முடியவில்லை. எங்களால் அதை செலுத்த முடியாமற்போயிற்று. எங்களால் அதை செலுத்த முடியவில்லை…அப்பொழுது அவள் அவளுடைய கரங்களை என்னை சுற்றிப்போட்டுக் கொண்டிருக்க நான் கதவண்டை சென்றேன். என்னுடைய நாற்காலி போய்விட்டது. அவள் அங்கே உயரே என்னிடத்தில் கூறினாள், அவள், “பில், அந்த நாற்காலி உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?” என்று கேட்டாள். நான், “ஆம், தேனே, எனக்கு நினைவிருக்கிறது” என்றேன். “நீர் அதைக் குறித்துதானே நினைத்துக் கொண்டிருந்தீர் இல்லையா?” என்று கேட்டாள். அதற்கு நான், “ஆம்” என்றேன். 287 அப்பொழுது அவள், “இந்த ஒன்றை அவர்கள் கொண்டு போகமாட்டார்கள். இந்த ஒன்றுக்கு கிரயம் செலுத்தப்பட்டாயிற்று” என்றாள். அவள், “ஒரு நிமிடம் உட்காரும், நான் உம்மிடத்தில் பேச விரும்புகிறேன்” என்றாள். நான், “தேனே, எனக்கு இது புரியவில்லை” என்றேன். 288 அவள், “பில்லி, எனக்கு வாக்குக் கொடுங்கள், இதற்கு மேல் நீர் கவலைப்படமாட்டீர் என்று எனக்கு வாக்குக் கொடுங்கள், இப்பொழுது நீர் திரும்பிப் போகப்போகிறீர்” என்றாள். தொடர்ந்து, “இனி நீர் கவலைப்படமாட்டீர் என்று எனக்கு வாக்குக்கொடும்” என்றாள். நான், “என்னால் அதைச் செய்யமுடியாதே ஹோப்” என்றேன். 289 சரியாக அந்த நேரத்தில் நான் என் சுயநினைவுக்கு வந்து தெளிந்தேன். அப்பொழுது அறைக்குள் இருட்டாக இருந்தது. நான் சுற்றும் முற்றும் பார்த்தேன், அவளுடைய கரம் என்னைச் சுற்றிலுமாய் இருப்பதை உணர்ந்தேன். நான், “ஹோப், நீ இந்த அறைக்குள் இருக்கிறாயா?” என்று கேட்டேன். 290 அவள் என்னை தட்டிக்கொடுக்கத் துவங்கினாள். அவள், “பில், நீர் அதை எனக்கு வாக்களிக்கப் போகிறீரா?” என்று கேட்டாள். தொடர்ந்து அவள், “இனிமேல்…நீர் கவலைப்படமாட்டீர் என்று எனக்கு வாக்குக் கொடுங்கள்” என்றாள். நான், “உனக்கு வாக்கு கொடுக்கிறேன்” என்றேன். 291 அதன்பிறகு அவள் என்னை இரண்டு அல்லது மூன்று முறைகள் தட்டிக்கொடுத்துவிட்டு போய்விட்டாள். நான் குதித்தெழுந்து விளக்கைப் போட்டேன். பின்னர் எல்லா இடத்திலும் பார்த்தேன். அவள் போய்விட்டாள். ஆனால் அவள் அறையை விட்டு போய்விட்டாள். அவள் போகவில்லை. அவள் இன்னும் ஜீவித்துக்கொண்டிருக்கிறாள். அவள் ஒரு கிறிஸ்தவளாய் இருந்தாள். 292 சமீபத்தில் பில்லியும் நானும் கல்லறைக்கு சென்றோம். அவனுடைய தாய்க்கும், சகோதரிக்கும் பூக்களை எடுத்துக் கொண்டு ஈஸ்டர் காலையில் சென்று நாங்கள் அங்கே நின்றோம். அப்பொழுது என் சிறுபையன் அழ ஆரம்பித்துவிட்டான். அவன், “அப்பா, என் அம்மா, அங்கே கீழே இருக்கிறாள்” என்றான். 293 நான், “இல்லை, தேனே. இல்லை. அவள் அங்கே கீழே ஒன்றும் இல்லை. சகோதரி அங்கே கீழே இல்லை, இங்கே நமக்கு மூடப்பட்ட கல்லறைதான் இருக்கிறது. ஆனால் கடலினூடாக சென்றால் அங்கே ஒரு திறந்த கல்லறை இருக்கிறது. அங்கே இயேசு உயிர்த்தெழுந்தார். என்றோ ஒரு நாள் அவர் வருவார். அவர் சகோதரியையும், அம்மாவையும் அவரோடு கொண்டு வருவார்” என்றேன். 294 நண்பர்களே, இன்றைக்கு நான் யுத்த களத்திலே இருக்கிறேன். என்னால்—என்னால் இதற்குமேல் எதையுமே சொல்ல முடியவில்லை. நான்…[சகோதரன் பிரான்ஹாம் அழுகிறார்—ஆசி.] தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஒரு நிமிடம் நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. 295 ஓ, கர்த்தாவே! அநேக நேரங்களில் கர்த்தாவே, இந்த காரியங்களெல்லாம் சுலபமாக வருகிறது என்று அவர்கள் நினைக்கும் பொழுது ஜனங்கள் புரிந்து கொள்ளுகிறதில்லை என்று நான் நிச்சயமாக அறிவேன். ஆனால் ஒரு மகத்தான நாள் வந்து கொண்டிருக்கிறது. அப்பொழுது இயேசு வருவார். இந்த துயரங்கள் எல்லாம் துடைக்கப்பட்டுப்போகும். பரலோகப்பிதாவே ஆயத்தமாயிருக்கும்படி நீர் எங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். 296 அந்த கடைசி வாக்குறுதியை கொடுத்துவிட்டு, பின்னர் நான் அந்த காலையில் அவளுடைய கன்னத்தில் முத்தமிட்டபோது நான் அவளை அந்நாளில் அங்கே சந்திப்பதாக கூறினேன். அப்பொழுது அந்த இடத்தில் நின்று கொண்டு அவள் என்னுடைய பெயரை சத்தமிடுவாள் என்று நான் நம்புகிறேன். அது முதற்கொண்டு அந்த வாக்குறுதிக்கு நான் உண்மையுள்ளவனாய் ஜீவித்திருக்கிறேன். கர்த்தாவே, உலகத்தைச் சுற்றிலும், எல்லாவிதமான இடங்களிலும் சுவிசேஷத்தைக் கொண்டு செல்ல முயற்சிக்கிறேன். இப்பொழுது வயதாகி களைத்துப்போனவனாய், தோய்ந்துபோயிருக்கிறேன். இந்நாட்களில் ஒன்றில் நான் இந்த வேதாகமத்தை கடைசி முறையாக மூடப்போகிறேன். தேவனே அந்த வாக்குறுதிக்கு நான் உண்மையாய் இருக்கும்படி என்னை காத்துக் கொள்ளும். கர்த்தாவே, உம்முடைய கிருபையை என்னைச் சுற்றிலுமாய் வைத்துக்கொள்ளும். இந்த் ஜீவியத்தின் காரியங்களை நான் நோக்கிப் பாராமல், அப்பாலுள்ள காரியங்களுக்காக ஜீவிப்பேனாக. உத்தமமாய் இருக்க எனக்கு உதவி செய்யும். ஒரு எளிதான மலர் படுக்கையை நான் கேட்கவில்லை. இல்லை, கர்த்தாவே என்னுடைய கிறிஸ்துவானவர் பாடுகளின் கீழ் மரித்தாரே. மற்ற எல்லோரும் அந்த விதமாகத்தானே மரித்தார்கள். நான் எந்த சுலபமான காரியத்தையும் கேட்கவில்லை. கர்த்தாவே நான் உத்தமமாய், உண்மையுள்ளவனாய் இருக்கும்படி செய்யும். ஜனங்களை நான் உம்மண்டை வழி நடத்தும்படியாய் அவர்களை என்னை நேசிக்க செய்யும். என்றோ ஒரு நாள் எல்லாம் முடிவடைந்த பின்னர் என்றென்றும் பச்சையாயுள்ள மரங்களின் கீழ் நாங்கள் சுற்றி ஒன்று கூடுவோம். நான் அவளுடைய கரத்தை பிடித்துக் கொண்டு ஏஞ்சலஸ் ஆலய ஜனங்களையும் மற்ற யாவரையும் காட்ட அவளை நடத்திக் கொண்டு செல்வேன். அப்பொழுது அது ஒரு மகத்தான நேரமாயிருக்கும். 297 இங்கே இருக்கின்ற ஒவ்வொருவர் மேலும் உம்முடைய இரக்கங்கள் தங்கும்படியாய் நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, இங்கிருக்கிறவர்கள் ஒருவேளை உம்மை அறியாமலும்கூட இருக்கலாம். ஒருக்கால் கடல்கடந்து அக்கரையில் அவர்கள் நேசிக்கின்ற சிறியவர்கள் இருக்கலாம். அவர்களுடைய வாக்குறுதியை ஒருபோதும் நின்றைவேற்றாதிருந்தால் கர்த்தாவே அவர்கள் அதை இப்பொழுதே நிறைவேற்றுவார்களாக. 298 நம்முடைய தலைகளை நாம் வணங்கியவாறு இருக்கும்போது, இந்த மகத்தான அரங்கங்கத்தில் இந்த பிற்பகலில் இருப்பதைக் கண்டு நான் வியக்கின்றேன். உங்களில் எத்தனைபேர்கள், “சகோதரன் பிரான்ஹாம் எனக்கு பிரியமாக இருந்தவர்களையும் கூட நான் சந்திக்க விரும்புகிறேன். ஆற்றின் அக்கரையில் எனக்கு அன்பானவர்கள் சிலர் இருக்கிறார்கள்” என்று கூறுவீர்களா? அவர்களை நீங்கள் சந்திப்பீர்கள் என்று ஒருக்கால் நீங்கள் அவர்களுக்கு ஒரு வாக்குறுதியை செய்திருக்கலாம், உன்னுடைய தாயாருக்கு இறுதி வணக்கத்தை அங்கே அந்த நாளன்று கல்லறை மைதானத்தில் கூறினபோது ஒருக்கால் உன்னுடைய சிறிய சகோதரிக்கு அல்லது தகப்பனுக்கு அல்லது கல்லறையில் இருந்த யாருக்காவது இறுதி வணக்கத்தை கூறினபோது, நீங்கள் சந்திப்பீர்கள் என்று வாக்களித்திருக்கலாம், அதற்கான ஆயத்தத்தை நீங்கள்—நீங்கள் இன்னமும் ஒருபோதும் செய்யாதிருக்கலாம். அதை இப்பொழுதே செய்ய இது ஒரு நல்ல நேரமாயிருக்கும் என்று நீங்கள் நினைக்கவில்லையா? 299 என்னுடைய கோர்வையற்ற வாக்கியங்களுக்காக என்னை மன்னியுங்கள். ஆனால் ஓ, என்னே நண்பர்களே, நீங்கள் உணரவில்லையா? தியாகம் என்றால் என்ன—என்ன என்று உங்களுக்கு தெரியவில்லையா! சுய சரிதையில் அதொன்றும் ஒரு கடினமான இடமல்லவே. 300 உங்களில் எத்தனைபேர்கள் இப்பொழுது எழும்பி இங்கே ஜெபத்திற்காக நடந்து வந்து என்னுடைய அன்பார்ந்தவர்களை நான் சந்திக்க வேண்டும் என்று கூறுவீர்கள்? கூட்டத்தாரிலிருந்து எழும்பி இங்கே வாருங்கள். நீங்கள் அதை செய்வீர்களா? யாராவது அந்த ஆயத்தத்தை இன்னும் செய்யாதிருந்தால் இப்பொழுதே செய்யுங்கள். ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் ஒரு வயதான கறுத்த மனிதரும், மற்றவர்களும் வெளியே வருகிறதை காண்கிறேன். உங்களைத் தான் முன் மாடியிலிருக்கிறவர்களே, உங்களைத்தான் நகருங்கள். நேராக நகர்ந்து இந்த நடைபாதைக்குள் வாருங்கள், அல்லது இப்பொழுது ஒரு ஜெபத்தில் நினைவு கூரப்பட வேண்டும் என்று விரும்புகிறவர்கள் எழும்பி நில்லுங்கள். அதுதான் காரியம். உங்களுடைய கால்களை ஊன்றி எழும்பி நில்லுங்கள். அது நல்லது. எழும்பி நில்லுங்கள். எல்லா இடங்களிலும் அக்கரையில் எனக்கு ஒரு தகப்பனார் இருக்கிறார். எனக்கு ஒரு தாயார் இருக்கிறார் அல்லது நேசிக்கிற ஒருவர் அக்கரையில் இருக்கிறார் என்று கூற விரும்புகிறவர்கள் எழும்பி நில்லுங்கள். நான் போய் அவர்களை காண விரும்புகிறேன். அவர்களை சமாதானமாக நான் சந்திக்க விரும்புகிறேன். நீங்கள் எழும்புவீர்களா? நீங்கள் கூட்டத்தாரில் எங்கே இருந்தாலும் உங்களுடைய காலூன்றி எழும்பி நில்லுங்கள். “நான் ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன்” என்று உங்களுடைய காலூன்றி எழும்பி நின்று கூறுங்கள். 301 பெருமாட்டியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அங்கே பின்னால் இருக்கிற உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக. அங்கே மேலே உங்களையும் ஆசீர்வதிப்பாராக. இங்கேயுள்ள, ஐயா, உம்மை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. அது சரி. உயரே முன் மாடியில் உள்ள உங்களையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. சுற்றிலுமுள்ள எல்லா இடங்களிலும் ஜெபத்திற்காக உங்களுடைய காலூன்றி அப்படியே எழும்பி நில்லுங்கள். பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கையில் நொறுங்கும்படியாக நம்முடைய இருதயங்களின் மேல் அசைவாடுவாராக. 302 உங்களுக்கு தெரியுமே, அதாவது இன்றைக்கு சபைக்கு என்ன தேவையென்றால், நொறுங்குதலேயாகும். நாம் குயவனின் வீட்டிற்கு போக வேண்டியவர்களாய் இருக்கிறோம். நம்முடைய விரைப்பான வீட்டில் செய்யப்பட்ட வேத சாஸ்திரம் சில நேரங்களில் அவ்வளவு நன்றாய் கிரியை செய்வதில்லை. நமக்கு என்ன தேவை என்றால் ஒரு பழைய பாணியிலான நொறுங்குதலும், நம்முடைய இருதயங்களில் மனந்திரும்புதலும், தேவனின் பட்சமாய் கனிதலுமேயாகும். எழும்பி நிற்கும்படி ஆயத்தமாயிருக்கிறவர்கள் எல்லோரும் இவ்வளவுதானா? அப்படியானால், நாம் ஜெபத்திற்காக நம்முடைய தலைகளை வணங்குவோமாக. 303 ஓ, கர்த்தாவே, விசுவாசிக்கின்ற விசுவாசத்தினாலே எங்கள் எல்லோரையும் நீதிமான்களாக்க இயேசுவை மரித்தோரிலிருந்து…திரும்ப கொண்டு வந்தீரே. இப்பொழுது உம்மை ஏற்றுக்கொள்ள காலூன்றி நின்று கொண்டிருக்கிற இவர்களுக்கு மன்னிப்பை அருளும்படியாக கர்த்தாவே, அவர்களுக்காக நான் ஜெபிக்கிறேன். அவர்கள் உம்மை அவர்களுடைய இரட்சகராகவும், இராஜாவாகவும், நேசராகவும் ஏற்றுக்கொள்ளும்படி ஓ, கர்த்தாவே, நான் ஜெபிக்கிறேன். ஒருக்கால் அவர்களுக்கு ஒரு தாயோ அல்லது தந்தையோ அல்லது யாரோ ஒருவர் சமுத்திரத்தின் அக்கரையில் இருக்கலாம். அங்கே ஒரு காரியம் நிச்சயமாயிருக்கிறது. அவர்களுக்கு ஒரு இரட்சகர் இருக்கிறார். அவர்களுடைய பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படுவதாக. அவர்களுடைய எல்லா அக்கிரமங்களும் அழிக்கப்பட்டு, அவர்களுடைய ஆத்துமாக்கள் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினால் கழுவப்பட்டு இனிமேல் அவர்கள் சமாதானமாக ஜீவிப்பார்களாக. 304 மகிமையான என்றோ ஓர் நாளில் எல்லாம் முடிவடைந்த பிறகு, நாங்கள் உம்முடைய வீட்டிலே ஒன்று சேர்ந்து அங்கே உடையாத குடும்பங்களாக அங்கேயிருந்து, அக்கரையில் எங்களுக்காக காத்திருக்கின்ற எங்களுடைய அருமையானவர்களை சந்திப்போமாக. நாங்கள் இவர்களை உம்மண்டை சமர்ப்பிக்கிறோம். அதாவது, “உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன், நீர் அவனை பூரண சமாதானத்துடன் காத்துக் கொள்வீர்.” இதை அளியும் கர்த்தாவே. நாங்கள் அவர்களை உம்முடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் உம்மிடத்தில் ஒப்படைக்கிறோம். ஆமென். 305 தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் எங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஊழியர்கள் காண்கிறார்கள் என்று நான் நிச்சயமாய் நம்புகிறேன். ஒரு சில நிமிடங்களில் அவர்கள் உங்களோடு இருப்பார்கள். 306 இப்பொழுது ஜெப அட்டைகளை பெற்றுக்கொள்ளப் போகிறவர்கள் இங்கிருக்கிறார்கள். ஜீனும், லியோவும் பின்னால் இருக்கிறார்களா? இன்னும் சில நிமிடங்களில் அவர்கள் இங்கே ஜெப அட்டைகளை கொடுக்க இருக்கிறார்கள். சகோதரன் ஜெபத்தோடு கூட்டத்தாரை அனுப்பிவைப்பார். அதன்பின்னர், ஜெப அட்டைகள் கொடுக்கப்படும். இன்னும் சிறிது நேரத்தில் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்க நாங்கள் இங்கே திரும்பி வருவோம். சகோதரனே சரிதானே.